செய்திகள்

சென்னையில் விடிய விடிய நடந்த அமலாக்கத் துறை சோதனை

சென்னை, நவ. 20: சென்னையின் பல்வேறு பகுதியில் விடிய விடிய நடந்த அமலாக்கத்துறை சோதனை நிறைவடைந்தது. முறைகேடான பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் மத்திய அரசின் அமலாக்கத்துறை, ஏற்கனவே பல்வேறு தரப்பினரின் வீடுகளிலும், அலுவலகங்களிலும் அதிரடி சோதனை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அமைச்சர்கள், அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள், ரியல் எஸ்டேட் அதிபர்கள், அமலாக்கத்துறையின் சோதனை நடவடிக்கையில் சிக்கியுள்ளனர். அந்த வகையில் நேற்று தங்க நகை மற்றும் இரும்பு தொழில் சம்பந்தப்பட்டவர்களின் வீடுகளிலும், அலுவலகங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் […]

Loading

செய்திகள்

சென்னையில் 15 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

சென்னை, நவ. 19: சென்னையில் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதலே சோதனை நடத்தி வருகிறார்கள். சென்னை கோடம்பாக்கம், கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் தொழில் அதிபர்களின் வீடுகள், நிறுவனங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகிறார்கள். சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள கல்யாணி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் காலையிலேயே சோதனை மேற்கொண்டுள்ளனர். அம்பத்தூர் திருவேங்கட நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் பிரகாஷ் என்பவர் வீட்டிலும் சோதனை நடந்து வருவதாக […]

Loading

செய்திகள்

சென்னையில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை

சென்னை, செப். 18– சென்னை சைதாப்பேட்டை, புரசைவாக்கம் பகுதியில் இன்று அமலாக்கத் துறை அலுவலர்கள் சோதனையில் ஈடுபட்டனர். சென்னை சைதாப்பேட்டையில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் தொழிலதிபர் ராமகிருஷ்ணா வீடு, அலுவலகங்களில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை அலுவலர்கள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோன்று சென்னை செளகார்பேட்டையில் தங்க நகை வியாபாரம் செய்து வரும் தொழிலதிபர் மோகன்லால் காத்ரியின் புரசைவாக்கம் வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சோதனை நடைபெறும் இடங்களில் மத்திய பாதுகாப்புப் […]

Loading

செய்திகள்

திண்டுக்கல்லில் அமைச்சர் ஐ.பெரியசாமி, அவரது மகன், மகள் வீடுகளில் அமலாக்கத் துறை சோதனை

தி.மு.கவினர் தர்ணா போராட்டம்; பரபரப்பு திண்டுக்கல், ஆக. 16– திண்டுக்கல்லில் உள்ள அமைச்சர் ஐ.பெரியசாமி, அவரது மகனும் பழநி எம்.எல்.ஏ.வுமான ஐ.பி.செந்தில்குமார், மகள் இந்திராணி ஆகியோரின் வீடுகளில் இன்று காலை முதல் அமலாக்கத் துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். சட்டவிரோத பணமோசடி தொடர்பாக இன்று காலை 7.15 மணியளவில் திண்டுக்கல் கோவிந்தாபுரத்தில் உள்ள அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டுக்கு 3 வாகனங்களில் வந்த அமலாக்கத் துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். வீட்டுக்கு வெளியே துப்பாக்கி […]

Loading

செய்திகள்

சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை ரெயில் நிலையங்களில் தீவிர பாதுகாப்பு, சோதனை

சென்னை, ஆக. 14– சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள ரெயில் நிலையங்களில் பலத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நாட்டின் 79-வது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இதுபோல, சென்னை உள்பட முக்கிய ரயில் நிலையங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடு தீவிரப்படுத்தப்படவுள்ளது. தமிழக ரயில்வே காவல் துறையை மற்றும் மத்திய ரெயில்வே பாதுகாப்புப் படை பிரிவினர் சென்னை ரெயில் நிலையங்களில் பலத்த பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். […]

Loading

செய்திகள்

3 ஆயிரம் கோடி கடன் மோசடி : அமுலாக்கத் துறை பிடியில் சிக்கிய அனில் அம்பானி

புதுடெல்லி, ஜூலை 24– கடன்பெற்று திரும்ப செலுத்தாததால், ‘‘மோசடியாளர்’’ என பாரத ஸ்டேட் வங்கி அறிவித்திருக்கும் நிலையில், ரிலையன்ஸ் அனில் அம்பானி வீடு, நிறுவனங்களில் அமலாக்க துறை அதிரடி சோதனை நடத்தி வருகிறது. ரிலையன்ஸ் குரூப் தலைவர் அனில் அம்பானியின் நிறுவனங்கள் வங்கியிடம் இருந்து ரூ.12,800 கோடி கடனாக பணம் பெற்றுள்ளன எனக் கூறப்படுகிறது. ஆனால், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அதற்கான வட்டி தொகையை செலுத்தவில்லை. இதுதொடர்பாகவும், வட்டி மற்றும் அசல் தொகையை திருப்பி செலுத்துவதில் மோசடி தொடர்பாக […]

Loading