செய்திகள்

சென்னையில் போக்குவரத்து சப்–இன்ஸ்பெக்டர் தற்கொலை

சென்னை, ஆக. 25– சென்னை தண்டையார் பேட்டை போக்குவரத்து காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் சிவக்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். சென்னை தண்டையார் பேட்டை போக்குவரத்து காவல் நிலையத்தின் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்த சிவக்குமாருக்கு திருமணமாகி தெரேசா என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு கோபிகா என்ற மகளும் மோனீஸ் என்ற மகனும் உள்ளனர். இந்த நிலையில், இன்று காலை சிவக்குமார் தனது வீட்டின் அறையில் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவல் […]

Loading

கதைகள் சிறுகதை

சிறுகதை … புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் சாலை.. /சாலை 2 – ராஜா செல்லமுத்து

தேனாம்பேட்டை சிக்னலைத் தாண்டி எஸ் ஐ டி கல்லூரியை நோக்கிச் செல்லும் பாரதிதாசன் சாலையில் நின்று புலம்பிக் கொண்டிருந்தார் ஒரு பெரியவர். ‘ எழுத்தாளர்கள், கவிஞர்கள் இவங்களுக்கெல்லாம் வாழும் போதே யாரும் மரியாதை கொடுக்கிறது இல்லை. செத்த பிறகு மரியாதை கொடுக்குறாங்க .அதுவும் பழைய கவிஞர்கள இங்க யாரும் நினைவு வைக்க மாட்டாங்க ‘ என்று வருத்தப்பட்டுக் கொண்டே ஆழ்வார்பேட்டை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் பாரதிதாசன் சாலையில் நின்று புலம்பிக் கொண்டு இருந்தார் ஒரு பெரியவர். அவரைப் […]

Loading

செய்திகள்

வேரோடு பிடுங்கி எறிந்தால் தி.மு.க. பெரிதாக முளைக்கும்: அமித்ஷாவுக்கு கே.என்.நேரு பதிலடி

நெல்லை, ஆக. 23– அண்ணா தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி பொருந்தாக் கூட்டணி என்று அமைச்சர் கே.என். நேரு கூறினார். நெல்லை தச்சநல்லூரில் நேற்று நடைபெற்ற பா.ஜ.க.வின் தென்மண்டல பூத் கமிட்டி மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு பேசுகையில், மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலினை முதலமைச்சராக்க வேண்டும் என்று நினைத்து கொண்டு இருக்கிறார். அது ஒரு போதும் நடக்காது. வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. அரசை வேரோடு பிடுக்கி அகற்றுவோம். தமிழகத்தில் தேசிய ஜனநாயக […]

Loading

செய்திகள்

பிளஸ்-2 மாணவியை காரில் அழைத்துச் சென்று பாலியல் தொல்லை: ஆசிரியர் கைது

புதுக்கோட்டை, ஆக. 23– புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் கணக்கு ஆசிரியராக பணியாற்றி வருபவர் வில்லியம் பால்ராஜ் (வயது 52). இவர் 16 வயது பிளஸ்-2 மாணவியை தனது காரில் அடிக்கடி அழைத்து சென்று பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் புதுக்கோட்டை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் வசந்தகுமார் கீரனூர் அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் லதாவிடம் புகார் அளித்தார். அதன்பேரில் விசாரணை செய்த போலீசார் மாணவிக்கு பாலியல் தொல்லை […]

Loading

செய்திகள்

மாதவரத்தில் போதைப் பொருள்: அண்ணன் – தம்பி உள்பட 5 பேர் கைது

சென்னை, ஆக. 23– மாதவரத்தில் போதைப் பொருள் வைத்திருந்து அண்ணன் – தம்பி உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண் உத்தரவின்பேரில், போதை பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு போதைப்பொருட்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு குற்றவாளிகளையும், வலைபின்னல் தொடர்புகளில் உள்ளவர்களையும் கண்டறிந்து கைது செய்து, உரிய நடவடிக்கை எடுத்து வரப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக, போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், தனிப்படையினர் மற்றும் மாதவரம் காவல் […]

Loading

செய்திகள்

தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.800 உயர்வு .

சென்னை, ஆக. 23– சென்​னை​யில் ஆபரண தங்​கத்​தின் விலை இன்று சவரனுக்கு ரூ.800 உயர்ந்​துள்ளது. இதேபோல வெள்ளி விலையும் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தங்கம் விலை சர்வதேச அளவிலான பொருளாதாரம் மற்றும் சந்தை நிலவரத்துக்கு ஏற்ப ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 2 நாட்களாக குறைந்து வந்த தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்ந்தது. சென்​னை​யில் 22 காரட் ஆபரணத் தங்​கத்​தின் விலை இன்று ஒரு கிராம் ரூ.100 உயர்ந்து ரூ.9,315-க்கும், சவரனுக்கு ரூ.800 […]

Loading

செய்திகள்

ரீல்ஸ்’களை ‘ரியாலிட்டி’ என்று மாணவர்கள் நம்பி விடக்கூடாது: முதல்வர் ஸ்டாலின் அறிவுரை

சென்னை, ஆக.23-– ”மாணவர்கள் தாங்கள் பார்க்கும், ‘ரீல்ஸ்’களை எல்லாம், ‘ரியாலிட்டி’ என்று நம்பி விடக்கூடாது; தங்களின் ரோல் மாடலை, இன்ஸ்டாகிராமில் தேடக்கூடாது” என்று சென்னையில் நடந்த குட்ஷெப்பர்டு பள்ளியின் நூற்றாண்டு நிறைவு விழாவில் முதல்வர் ஸ்டாலின் அறிவுரை கூறினார். மதநல்லிணக்கத்தை கெடுக்க நினைக்கும் சக்திகளின் ஆட்டம் அதிக நாள் நீடிக்காது’ எனவும் அவர் கூறினார். சென்னை நுங்கம்பாக்கம் குட்ஷெப்பர்டு பள்ளியின் நூற்றாண்டு நிறைவு விழா நேற்று நடந்தது. விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். […]

Loading

செய்திகள்

தி.மு.க. அரசை வேரோடு சாய்ப்போம்: மத்திய அமைச்சர் அமித்ஷா உறுதி

திருநெல்வேலி, ஆக.23-– ”சட்டசபை தேர்தலில் தி.மு.க.,வை வேரோடு சாய்ப்போம் என, அமித் ஷா பேசினார். தமிழகத்தில் அ.தி.மு.க.- பா.ஜனதா கூட்டணி ஆட்சி அமைக்கும் என்றார். தமிழக பா.ஜ.க. கட்சியின் தென்மண்டல பூத் கமிட்டியின் முதல் மாநாடு திருநெல்வேலி தச்சநல்லூரில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நெல்லை பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் அமைக்கப்பட்டு இருந்த ஹெலிபேடில் வந்து இறங்கினார். அவருக்கு பா.ஜ.க. சார்பில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர்கள் அண்ணாமலை, […]

Loading

செய்திகள்

ஹீரோ ஆசிய ஹாக்கி கோப்பை: பொதுமக்களின் பார்வைக்கு அறிமுகப்படுத்தினார் உதயநிதி ஸ்டாலின்

சென்னை, ஆக. 23– பீகார் மாநிலம் ராஜ்கிரில் 29–ந் தேதி முதல் செப்டம்பர் 7–ந் தேதி வரை நடைபெற உள்ள “ஹீரோ ஆசிய ஹாக்கி கோப்பை 2025” யை தமிழ்நாட்டில் பொதுமக்களின் பார்வைக்காக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிமுகப்படுத்தினார். “ஹீரோ ஆசிய ஹாக்கி கோப்பை 2025” பீகார் மாநிலம் ராஜ்கிரில் ஆகஸ்ட் 29 முதல் செப்டம்பர் 7–ந் தேதி வரை நடைபெற உள்ளது. சிறப்பு வாய்ந்த இந்தப் போட்டியில் 8 ஆசிய நாடுகள் மோதுகின்றன, இப்போட்டியில் […]

Loading

செய்திகள்

நங்கநல்லூர் மெட்ரோ ரெயில் நிலையத்தில் புதிய நுழைவுவாயில் அமைக்க ஒப்பந்தம்

சென்னை, ஆக. 23– சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், ஓடிஏ நங்கநல்லூர் சாலை மெட்ரோ நிலையத்தில், சென்னை ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையம் அருகே புதிய நுழைவு / வெளியேறும் அமைப்பை கட்டுவதற்கான ஒப்பந்த்தை ஸ்ரீ ராதா கன்ஸ்ட்ரக்சன் நிறுவனத்திற்கு ரூ.8.52 கோடி மதிப்பில் வழங்கியுள்ளது. இதற்கான ஏற்பு கடிதம் வழங்கப்பட்டது. இதுவரை நங்கநல்லூர் சாலை மெட்ரோ நிலையத்திற்கு ஒரே ஒரு நுழைவாயில் மட்டுமே இருந்தது. இப்போது கட்டப்படும் இந்த கூடுதல் நுழைவுவாயில், ஜி.எஸ்.டி சாலையின் இரு […]

Loading