செய்திகள்

இந்தியாவில் தயாரிக்கப்படும் ‘சிப்’ உலகில் மாற்றத்தை ஏற்படுத்தும்: பிரதமர் மோடி திட்டவட்டம்

புதுடெல்லி, செப்.2– இந்தியாவில் தயாரிக்கப்படும் மிகச்சிறிய சிப் உலகின் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை என்று பிரதமர் மோடி கூறினார். டெல்லியில் உள்ள யஷோ பூமியில் இன்று முதல் 4-ம் தேதி வரை செமிகான் இந்தியா 2025 மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். மாநாட்டை தொடங்கி வைத்த பின் பிரதமர் மோடி பேசியதாவது:- நான் ஜப்பான் மற்றும் சீனாவுக்கு சென்றுவிட்டு நேற்று இரவு தான் திரும்பி வந்தேன். […]

Loading

செய்திகள்

தங்கம் ஒரு சவரன் 78 ஆயிரத்தை நெருங்கியது

சென்னை, செப்.2– சென்னையில் இன்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 அதிகரித்து ஒரு சவரன் ரூ.77,800க்கு விற்பனை ஆகிறது. உலகின் பல நாடுகள் தங்களிடம் உள்ள அன்னிய செலாவணி கையிருப்பின் ஒரு பகுதியை தங்கமாக மாற்றி வருகின்றன. மேலும், அமெரிக்க டாலருக்கு எதிரான, இந்திய ரூபாய் மதிப்பு சரிவு உள்ளிட்ட காரணங்களால், தங்கம் விலை அதிகரித்து வருகிறது. நேற்று தங்கம் விலை கிராமுக்கு 85 ரூபாய் உயர்ந்து 9,705 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு […]

Loading

செய்திகள்

விருகம்பாக்கத்தில் வெளிமாநில லாட்டரி சீட்டு விற்பனை: 3 பேர் கைது

சென்னை, செப். 2– விருகம்பாக்கம் பகுதியில் வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னை பெருநகரில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள், வெளி மாநில, ஒரு நம்பர் மற்றும் மூன்று நம்பர் லாட்டரி சீட்டுகளை சட்டவிரோதமாக விற்பனை செய்யும் நபர்களை கண்காணித்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண் உத்தரவிட்டதின் பேரில், உதவி ஆணையாளர்களின் நேரடி மேற்பார்வையில், தனிப்படை காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் […]

Loading

செய்திகள்

இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த பேச்சுவார்த்தை: இன்று இந்தியா வருகிறார் சிங்கப்பூர் பிரதமர்

புதுடெல்லி, செப். 2– சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங், 3 நாட்கள் அரசு முறை பயணமாக இந்தியா வருகிறார். அவர் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார். பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில் வோங் இந்தியா வருகிறார். சிங்கப்பூர்–இந்தியா ராஜதந்திர உறவுகளின் 60வது ஆண்டு நிறைவையொட்டி டெல்லியில் நடக்க உள்ள வரவேற்பு நிகழ்ச்சியில் வோங் பங்கேற்கிறார். டெல்லியில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை அவர் சந்திக்கிறார். அவருக்கு பிரதமர் மோடி மதிய […]

Loading

செய்திகள்

10 நாட்களில் ரூ.3,120 உயர்வு; தங்கம் விலை சவரனுக்கு ரூ.680 அதிகரிப்பு; ஒரு சவரன் ரூ.77,640

சென்னை, செப்.1– சென்னையில் இன்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.680 அதிகரித்து ஒரு சவரன் ரூ.77 640க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.85 அதிகரித்து ஒரு கிராம் ரூ.9,705க்கு விற்பனை ஆகிறது. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவு உள்ளிட்ட காரணங்களால், நம் நாட்டில் தங்கம் விலை உயர்ந்து வருகிறது. கடந்த 6-ந்தேதி ஒரு சவரன் ரூ.75 ஆயிரத்தை மீண்டும் தாண்டிய நிலையில், பின்னர் விலை குறைந்து காணப்பட்டது. அதன் […]

Loading

செய்திகள்

பட்டினப்பாக்கம், நீலங்கரை கடற்கரையில் ராட்சத கிரேன்கள் மூலம் விநாயகர் சிலைகள் கரைப்பு

சென்னை, ஆக. 31– சென்னையில் விநாயகர் சிலைகள் கரைக்கும் பணி இன்று நடந்தது. பட்டினப்பாக்கம், நீலங்கரை கடற்கரையில் ராட்சத கிரேன் மூலம் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. சென்னையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவில்கள் சார்பிலும், இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் பொது இடங்களில் பிரம்மாண்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டது. சென்னையில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச்சென்று கரைக்கும் பணி நடந்தது. பட்டினப்பாக்கம் (மெரினா), […]

Loading

செய்திகள்

பரமக்குடி அருகே இன்று அதிகாலை லாரி–கார் மோதிய விபத்தில் 4 பேர் பலி

ராமநாதபுரம், ஆக. 31– ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே இன்று அதிகாலையில் லாரி–கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 பெண்கள் உட்பட 4 பேர் உயிரிழந்தனர். மதுரையில் இருந்து வீட்டை காலி செய்து, சாமான்களை ஏற்றிய லாரி ராமநாதபுரம் நோக்கி வந்தது. இதேபோல் ராமநாதபுரத்திலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் குற்றாலம் நோக்கி காரில் சென்றனர். இன்று அதிகாலை 3 மணிக்கு பரமக்குடி அருகே நென்மேனி இருவழிச் சாலையில் காரும், லாரியும் நேருக்கு நேர் […]

Loading

செய்திகள்

‘‘இந்தியா –சீனா இடையே மீண்டும் நேரடி விமான சேவை: மோடி தகவல்

பீஜிங், ஆக 31– ‘‘இந்திய – சீன எல்லையில் இருந்து இரு நாடுகளும் படைகளை திரும்ப பெற்றதால் அமைதி ஏற்பட்டுள்ளது’’ என அதிபர் ஜி ஜின்பிங் உடன் சந்திப்புக்கு பிறகு பிரதமர் மோடி மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். எல்லை மேலாண்மை விஷயத்தில் நமது சிறப்பு பிரதிநிதிகளுக்கு இடையே ஒருமித்த கருத்து ஏற்பட்டுள்ளது. கைலாஷ் மானசரோவர் யாத்திரை மீண்டும் தொடங்கப்படுகிறது. இரு நாடுகளுக்கும் இடையே நேரடி விமானப் போக்குவரத்தும் தொடங்கப்படுகிறது. நமது நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்புடன், 2.8 பில்லியன் மக்களின் […]

Loading

செய்திகள்

ஜெர்மனி சென்ற ஸ்டாலினுக்கு தமிழர்கள் உற்சாக வரவேற்பு

டசெல்டோர்ப், ஆக 31– ஜெர்மனி டசெல்டோர்ப் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். நாளை முதலமைச்சர் தொழில் முதலீட்டாளர்களுடன் கலந்துரையாடல், தொழில் முதலீடுகளை ஈர்க்கிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டுக்கு புதிய முதலீடுகளை ஈர்ப்பதையும் உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்களுடன் தொடர்புகொள்வதையும் நோக்கமாகக் கொண்ட 8 நாள் ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கான ஐரோப்பிய பயணத்தை நேற்று தொடங்கினார். முதலமைச்சர் டசெல்டோர்ப் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தபோது, வட ரைன்-வெஸ்ட்பாலியா மாகாணத்தின் […]

Loading

செய்திகள்

அமெரிக்க வரியால் பாதிக்கப்பட்ட துறைகளுக்கு நிவாரணம் வழங்க புதிய கொள்கை உருவாக்குங்கள்

சென்னை, ஆக.31- அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீத வரியால் ஏற்பட்டுள்ள நெருக்கடியான நேரத்தில் மத்திய அரசு விரைந்து செயல்பட்டு, பாதிக்கப்பட்ட துறைகளுக்கு உடனடி நிவாரணம் வழங்கும் புதிய கொள்கைகளை உருவாக்க வேண்டும் என்று மத்திய அரசை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அமெரிக்காவில் டிரம்ப் நிர்வாகம் விதித்த 50 சதவீத சுங்கவரி ஆகஸ்ட் 27, 2025 அன்று நடைமுறைக்கு வந்துள்ளது. இதன் மூலம், இந்தியாவின் ஏற்றுமதி சார்ந்த தொழில்கள் பெரும் அச்சத்தில் […]

Loading