செய்திகள்

திருவள்ளூரில் டாக்டர் ராதாகிருஷ்ணனுக்கு சிலை: ஸ்டாலின் திறக்கிறார்; உதயநிதி தகவல்

சென்னை, செப்.5– தமிழக கல்வித்துறை சார்பில் ஆசிரியர் தினவிழா சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கத்தில் இன்று கொண்டாடப்பட்டது. பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முன்னிலை வகித்தார். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விழாவுக்கு தலைமை தாங்கி 396 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கினார். 210 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகளையும் வழங்கினார். டாக்டர் ராதாகிருஷ்ணனுக்கு திருவள்ளூர் மாவட்டத்தில் சிலை அமைக்கப்படுகிறது, விரைவில் அந்த சிலையை முதலமைச்சர் திறந்து வைப்பார் […]

Loading

செய்திகள்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆசிரியர் தின வாழ்த்து

சென்னை, செப்.5– இன்று (5–ந் தேதி) ஆசிரியர் தினம். இதை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:– ‘பெற்றோர்கள் ஆசிரியர்களை நம்பிப் பிள்ளைகளை ஒப்படைக்கிறார்கள். பிள்ளைகள் பெற்றோரை விட ஆசிரியர்கள் சொல்வதையே அதிகம் நம்புகிறார்கள். அந்த மாணவர்களுக்குத் தமிழை, அறத்தை, அரசியலை, அறிவியலை என அனைத்தையும் கற்பித்து அவர்களின் உயர்வுக்காகப் பாடுபடும் நல்லாசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது ஆசிரியர் தின நல்வாழ்த்துகள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Loading

செய்திகள்

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கு: சென்னை ஐகோர்ட் தள்ளுபடி

சென்னை, செப். 4– அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் திண்டுக்கல்லை சேர்ந்த சூரியமூர்த்தி தாக்கல் செய்திருந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2022ம் ஆண்டு ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அண்ணா தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில், பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டதை எதிர்த்தும், பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்தும் திண்டுக்கல்லைச் சேர்ந்த சூர்யமூர்த்தி என்பவர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை […]

Loading

செய்திகள்

அடுத்த மாதம் முதல் வளர்ப்பு நாய்களுக்கு ‘மைக்ரோ சிப்’ கட்டாயம்:- மீறினால் ரூ.3000 வரை அபராதம்

சென்னை, செப். 4– சென்னை மாநகராட்சி பகுதிகளில் வளர்ப்பு நாய்களுக்கு ‘மைக்ரோ சிப்’ கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மீறினால் ரூ.3000 வரை அபராதம் விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. சென்னையில் வளர்ப்பு நாய் மற்றும் தெரு நாய்களால் பொதுமக்கள் பாதிக்கப்படும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது.இதில் பிட் புல், ராட்வீலர், ஜெர்மன் ஷெப்பர்ட் உள்ளிட்ட நாய் இனங்களால் பொதுமக்கள் அதிகளவில் பாதிக்கப்படுகிறார்கள். எனவே, நாய் வளர்ப்பவர்கள் சாலையில் அழைத்துச் செல்லும்போது நாய்களுக்கு வாய்மூடி கட்டாயம் அணிவிக்க வேண்டும்,ரேபிஸ் நோய் தடுப்பூசி செலுத்த […]

Loading

கதைகள் சிறுகதை

சிறுகதை … தங்கச் சாலை 8 …! …. ராஜா செல்லமுத்து

வாடிக்கையாளர் கொடுத்த பத்து ரூபாய் நாணயத்தை உற்று உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார், பலசரக்குக் கடைக்காரர். ” சார், எல்லாம் நல்ல காசு தான். என்னமோ இந்தப் பத்து ரூபா நாணயத்த நாங்களே அச்சு வார்த்துக் கொடுத்த மாதிரியே இப்பிடி உத்து உத்துப் பார்த்துகிட்டு இருக்கீங்க? எல்லாம் உங்களை மாதிரிக் கடைக்காரங்க எங்களுக்கு கொடுக்கிற காசு தான் சார் . நம்பி வாங்கிப் போடுங்க. எதுவும் வராது” என்று கடைக்காரரிடம் தன் நாணயத்தைப் பற்றி நாணயமாகப் பேசினான், நாராயணன் […]

Loading

செய்திகள்

மதுரை வடக்கு தொகுதியில் கூட்டமேடைக்கு 2 கி.மீ. மக்கள் வெள்ளத்தில் நீந்தி வந்தார்

மதுரை, செப்.3– ’’மதுரை ஊழல் மேயரின் கணவர் கைது செய்யப்பட்டிருப்பது ஒரு கண் துடைப்பு நாடகம், மக்கள் எதிர்ப்பை திசை திருப்பவே இந்த நடவடிக்கை என்று எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டி உள்ளார். மேலூர், மதுரை கிழக்கு தொகுதிகளில் மக்களை சந்தித்து எழுச்சியுரையாற்றிய அண்ணா திமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அடுத்தபடியாக மதுரை, கே.புதூர் அழகர் கோவில் பிரதான சாலையில் மக்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:– “மதுரை வடக்கு தொகுதி அண்ணா தி.மு.க.வின் கோட்டை. 2 கிமீ […]

Loading

செய்திகள்

புதிய உச்சத்தில் தங்கம் விலை: ரூ. 79 ஆயிரத்தை நெருங்குகிறது

சென்னை, செப். 3– சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடா்ந்து உயா்ந்துவரும் நிலையில் இன்று பவுன் ரூ.78,440-க்கு விற்பனையாகி புதிய உச்சத்தை தொட்டது. அமெரிக்காவின் 50 சதவீத வரிவிதிப்பு எதிரொலி, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு, தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் சா்வதேச சந்தையில் முதலீட்டாளா்கள் தங்கத்தின் மீது முதலீடு செய்ய ஆா்வம் காட்டிவருகின்றனா். இதனால், உள்நாட்டு சந்தையில் தங்கம் விலை தொடர்ந்து உயா்ந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக, ஆகஸ்ட் 29-ஆம் […]

Loading

செய்திகள்

அன்புமணி மீது நடவடிக்கை: ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற பாமக நிர்வாக குழுக் கூட்டத்தில் ஆலோசனை

விழுப்புரம், செப். 3– ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற பாமக நிர்வாக குழுக் கூட்டத்தில் அன்புமணி மீது நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் தீவிரமாகி உள்ளது. அன்புமணி ராமதாஸ் மீது வைக்கப்பட்ட 16 குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் அளிக்காததால் அவர் மீதான நடவடிக்கையை ராமதாஸ் நாளை (வியாழக்கிழமை) எடுப்பார் என்று கட்சியினர் கூறி வருகின்றனர். இந்த சூழலில் விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் பா.ம.க. மற்றும் வன்னியர் […]

Loading

செய்திகள்

8 விளையாட்டு வீராங்கனைகளுக்கு பணி நியமன ஆணை: துணை முதலமைச்சர் உதயநிதி வழங்கினார்

சென்னை, செப். 3– இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை மூலமாக, 3 சதவீத விளையாட்டு இடஒதுக்கீட்டின் கீழ் சர்வதேச மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற 8 விளையாட்டு வீராங்கனைகளுக்கு வருவாய் துறை, பள்ளி கல்வித்துறை, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை, இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறைகளில் பணியாற்றுவதற்கான பணி நியமன ஆணைகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். இந்தியாவின் விளையாட்டு தலைநகரமாக தமிழ்நாட்டினை உருவாக்கும் வகையில் […]

Loading

செய்திகள்

இந்தியாவின் ஜெர்மனி தமிழ்நாடு: ஸ்டாலின் பேச்சு

சென்னை, செப்.2– இந்தியாவின் ஜெர்மனி தமிழ்நாடு என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார். ஜெர்மனியில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாடு மற்றும் தொழில் அதிபர்களுடனான சந்திப்பில் மொத்தம் 7020 கோடி ரூபாய் முதலீட்டில் 15,320 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில் 26 நிறுவனங்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப் பட்டன. ஜெர்மனியில் 1–ந் தேதி அன்று நடைபெற்ற தமிழ்நாடு ரைசிங் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:– உலகின் முன்னணி தொழில் வல்லரசுகளில் ஒன்றாகவும், நவீன உற்பத்தி, […]

Loading