செய்திகள்

தி.மு.க. ஆட்சியில் நிறுத்தப்பட்ட திட்டங்கள் மீண்டும் செயல்படுத்தப்படும்:

பொள்ளாச்சி, செப்.11-– அண்ணா தி.மு.க. ஆட்சி அமைந்ததும் தி.மு.க. ஆட்சியில் நிறுத்தப்பட்ட திட்டங்களை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பொள்ளாச்சியில் விவசாயிகளுடன் நடந்த கலந்துரையாடலின்போது எடப்பாடி பழனிசாமி கூறினார். அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் கடந்த ஜூலை மாதம் 7-ந் தேதி மேட்டுப்பாளையத்தில் தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தை தொடங்கினார். இந்த நிலையில் பொள்ளாச்சி, வால்பாறை தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள வந்த அவர், பொள்ளாச்சியில் பல்வேறு அமைப்புகளுடன் […]

Loading

செய்திகள்

பாட்டாளி மக்கள் கட்சி பெயர், சின்னம்: ராமதாஸ் தரப்பில் ‘கேவியட்’ மனு தாக்கல்

சென்னை, செப். 10– பாட்டாளி மக்கள் கட்சியின் பெயர் மற்றும் சின்னம் ஆகியவை தொடர்பாக, கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தரப்பில் சென்னை ஐகோர்ட் மற்றும் உரிமையியல் நீதிமன்றம் ஆகியவற்றில் ‘கேவியட்’ மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன 2024ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் விழுப்புரத்தில் நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக் குழுக் கூட்டத்தில், பாமக நிறுவனர் டாக்டர் எஸ்.ராமதாஸ், தனது மூத்த மகள் காந்திமதியின் மகன் பி. முகுந்தனை இளைஞர் பிரிவு தலைவராக அறிவித்தார். இதற்கு […]

Loading

செய்திகள்

சட்ட விரோத பணப்பரிமாற்ற மோசடி வழக்கு: கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ கைது

பெங்களூரு, செப். 10– சட்டவிரோத இரும்புத்தாது ஏற்றுமதி தொடர்பான பண மோசடி வழக்கில், கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ சதீஷ் கிருஷ்ண செயிலை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. கர்நாடக மாநிலம் உத்தர கன்னட மாவட்டம் கார்வார் சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏவான சதீஷ் கிருஷ்ண செயில் மீது, சட்டவிரோத இரும்புத் தாது ஏற்றுமதி தொடர்பாக 2010ல் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. சதீஷ் செயில், 1.25 லட்சம் டன் இரும்புத்தாதுவை 2010 ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்தில் ஏற்றுமதி […]

Loading

கதைகள் சிறுகதை

சிறுகதை … பின்னி சாலை 14 …! … ராஜா செல்லமுத்து

இரவு வானம் விடிவதற்குள் ஒவ்வொரு அறையாகத் தட்டிக் கொண்டிருந்தார், முனிரத்தினம். திரைப்படத் தயாரிப்பு மேலாளர். நேரமாச்சு. எல்லாரும் எந்திரிங்க. சூட்டிங் போகணும். எல்லாரும் எந்திரிங்க. டீ, காபி வரும் குடிச்சுருங்க. அஞ்சு மணிக்கு எல்லாம் கார் வந்துரும். சீக்கிரமா போனாத்தான், படப்பிடிப்புத் தளத்துக்குப் போக முடியும். எல்லாரும் எந்திரிங்க” என்று அறைகளில் தங்கியிருந்த அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களையும் எழுப்பிக் கொண்டிருந்தார், முனிரத்தினம். “ஐயா இன்னைக்கு எங்க சூட்டிங்? இவ்வளவு சீக்கிரமா கிளப்பி விடுறீங்களே?” என்று நடிகையின் உதவியாளர் […]

Loading

செய்திகள்

சென்னையில் ஆன் லைன் வர்த்தகத்தில் ரூ. 22.3 கோடி மோசடி:

சென்னை, செப். 10– ஆன்லைன் டிரேடிங் தளத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று கூறி, ரூ.22.3 கோடி பணத்தை மோசடி செய்த வடமாநில ஆசாமியை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். சென்னை, இராயப்பேட்டை பகுதியில் வசித்து வரும் ஸ்வேதரன்யன் (76) என்பவர் மத்திய குற்றப்பிரிவில் அளித்த புகாரில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆன்லைன் டிரேடிங் தளத்தில் முதலீடு செய்தபோது, போலியான ஆன்லைன் டிரேடிங் தளம் மூலம் மொத்தம் ரூ.22.30 கோடி மோசடி […]

Loading

செய்திகள்

விஜய் பிரச்சாரம்: காவலர்கள் விதித்த நிபந்தனைகள்

சென்னை, செப். 10– நடிகரும், தவெக தலைவருமான விஜய், 13–ந் தேதி முதல் தமிழகத்தில் பிரசாரத்தைத் தொடங்கவிருக்கும் நிலையில், திருச்சியில் தவெக பிரசாரத்துக்கு காவல்துறை பல்வேறு நிபந்தனைகள் விதித்திருப்பதாகக் கூறப்படுகிறது. தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் 13–ந் தேதி சனிக்கிழமையன்று திருச்சியில் பிரச்சார பயணத்தை தொடங்குகிறார். தொடர்ந்து ஒவ்வொரு சனிக்கிழமையும் என 3 மாதங்களில் அனைத்து மாவட்டங்களுக்கும் பயணம் செய்கிறார். இதற்கான திட்ட விவரங்கள் காவல்துறையிடம் அளிக்கப்பட்டு அனுமதி கேட்கப்பட்டிருந்த நிலையில், காவல்துறை நிபந்தனைகளுடன் அனுமதி […]

Loading

செய்திகள்

சென்னையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை

சென்னை, செப். 10– சென்னை கிண்டி, அடையாறு பகுதிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை அடையாறு பகுதியில் உள்ள மருத்துவர் இந்திரா வீட்டில் அமலாக்கத்துறை அலுவலர்கள் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வேளச்சேரியில் தொழிலதிபர் பிஷ்னோய் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடந்து வருகிறது. அதேபோன்று மேற்கு மாம்பலம் மற்றும் அடையாறு பகுதிகளில் சோதனை நடைபெற்று வருகிறது. சோதனை நடைபெறும் இடங்களில் மத்திய பாதுகாப்புப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். சட்ட […]

Loading

செய்திகள்

நடிகை நயன்தாராவின் ஆவணப்படத்தில் சந்திரமுகி பட காட்சிகளை நீக்கக் கோரிய வழக்கு:

சென்னை, செப். 10– நடிகை நயன்தாராவின் ஆவணப்படத்தில் இடம்பெற்றுள்ள சந்திரமுகி பட காட்சிகளை நீக்கக் கோரிய வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய ஆவண பட தயாரிப்பு நிறுவனமான டார்க் ஸ்டூடியோ நிறுவனத்துக்கு அக்டோபர் 6–ந் தேதி வரை அவகாசம் வழங்கி சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. நடிகை நயன்தாராவின் ஆவணப்படத்தை டார்க் ஸ்டூடியோ தயாரித்தது. இந்த ஆவணப்படம், 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நெட் ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டது. இந்த ஆவணப்படத்தில், தனது வொண்டர்பார் […]

Loading

செய்திகள்

துணை ஜனாதிபதி தேர்தல்: முதல் நபராக மோடி வாக்களித்தார்

புதுடெல்லி, செப்.9- நாடாளுமன்ற வளாகத்தில் துணை ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை துவங்கியது, முதல் நபராக பிரதமர் மோடி வாக்களித்தார். நாட்டின் 16-வது துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர் கடந்த ஜூலை மாதம் 21-ந் தேதி பதவி விலகியதை தொடர்ந்து அந்த பதவிக்கு இன்று தேர்தல் நடைபெறும் என தேர்தல் கமிஷன் அறிவித்தது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 21-ந்தேதி நிறைவு பெற்றதில் ஆளும் கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் […]

Loading

செய்திகள்

தங்கம் விலை ரூ.81 ஆயிரத்தை தாண்டியது: இன்று சவரனுக்கு ரூ.720 உயர்வு

சென்னை, செப். 9– சென்​னை​யில் ஆபரணத் தங்​கத்​தின் விலை இன்று சவரனுக்கு ரூ.720 உயர்ந்​து, ரூ.81,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் நகை வாங்கும் இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சர்​வ​தேச பொருளா​தார சூழல், அமெரிக்க டாலருக்கு நிக​ரான இந்​திய ரூபா​யின் மதிப்பு ஆகிய​வற்​றின் அடிப்​படை​யில் தங்​கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. சமீப காலமாக ஆபரணத் தங்கத்தின் விலை உச்சத்தை நோக்கி சென்று வருகிறது. தொடர்ந்து உயருவதும், பின்னர் ஏதோ ஒரு நாளில் மெல்ல குறைவதுமாக தங்கத்தின் விலை இருந்து […]

Loading