செய்திகள்

உலக பிரசித்தி பெற்ற குலசை தசரா திருவிழா: இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது

திருச்செந்தூர், செப். 23– குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இந்தியாவில் கா்நாடக மாநிலம் மைசூர் சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலுக்கு அடுத்ததாக தமிழகத்தில் உலக பிரசித்தி பெற்ற தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன்கோவில் தசரா பெருந் திருவிழா பிரம்மாண்டமாகவும் சிறப்பாகவும் கொண்டாடப்படுகிறது. திருவிழா ஆண்டு தோறும் 11 நாள்கள் நடைபெறும். அதன்படி, குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீஸ்வரா் உடனுறை முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா இன்று தொடங்கி, அக்டோபர் 2–ந் தேதி மகிசாசூரசம்ஹாரத்துடன் நிறைவு பெறுகிறது. […]

Loading

செய்திகள்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: ரவுடி ஆற்காடு சுரேஷின் மனைவி ஜாமீன் மனு தள்ளுபடி

சென்னை, செப். 23– ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடியின் ஜாமீன் மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ரவுடி ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடியும் கைது செய்யப்பட்டார். தற்போது சிறையில் உள்ள அவர் ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி கே.ராஜசேகர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் […]

Loading

செய்திகள்

செங்கோட்டையன் தொகுதியில் எடப்பாடிக்கு உற்சாக வரவேற்பு

ஈரோடு, செப்.23– செங்கோட்டையன் தொகுதிக்கு வந்த எடப்பாடி பழனிசாமிக்கு இன்று தொண்டர்களும், பொதுமக்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர். அண்ணா தி.மு.க பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் எழுச்சி பயணம் மேற்கொண்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி நீலகிரி மாவட்டத்தில் இன்று காலை நடைபெறும் பிரச்சாரத்தில் கலந்து கொள்வதற்காக இன்று காலை 6 மணி அளவில் சேலத்தில் உள்ள தனது […]

Loading

செய்திகள்

தங்கம் விலை மீண்டும் ரூ. 82 ஆயிரத்தை தாண்டியது

சென்னை, செப். 20- உலக நாடுகள் இடையிலான போர் பதற்றம், பொருளாதார மந்தநிலை, டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி போன்ற காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வருவதாக கூறப்படுகிறது. அமெரிக்காவின் வர்த்தக போரால் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்தது. இதனால் பங்குச்சந்தைகளில் முதலீடு குறைந்து, தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து வருகிறது. இந்த சூழலில் தங்கம் விலை கடந்த 16ந்தேதி ஒரு சவரன் ரூ.82 ஆயிரத்தை தாண்டி […]

Loading

செய்திகள்

விஜய் வீட்டின் மொட்டை மாடியில் பதுங்கியிருந்த ‘மனநலம்’ பாதித்த இளைஞர் மீட்பு; வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு

சென்னை, செப். 19– தமிழக வெற்றி கழகத்தின் (த.வெ.க.) தலைவர் விஜய் வீட்டில் பலத்த பாதுகாப்பையும் மீறி மொட்டை மாடியில் பதுங்கியிருந்த மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞரை போலீசார் மீட்டனர். இந்நிலையில் அடுத்து விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் சென்னை நீலாங்கரையில் உள்ள வீட்டில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இன்று காலை அவரது வீட்டின் மொட்டை மாடியில் மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் பதுங்கி இருந்துள்ளார். […]

Loading

செய்திகள்

‘ரோபோ’ சங்கர் மரணம்: திரையுலகம் கண்ணீர் அஞ்சலி

* சின்னத்திரையில் நகைக்சுவை நடிகராக அறிமுகம் * விஜய், தனுஷ், அஜித்துடன் நடித்தவர் சென்னை, செப். 19– பிரபல திரைப்பட நடிகர் ‘ரோபோ சங்கர் சென்னையில் தனியார் மருத்துவமனையில் நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 46. சென்னை வளசரவாக்கத்தில் உள்ள வீட்டில் அவரது உடலுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நடிகர்கள் சத்தியராஜ், தனுஷ், சிவகார்த்திகேயன் திரையுலகினர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள். முதலமைச்சர் ஸ்டாலின், அண்ணா தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கமல், விஜய், […]

Loading

செய்திகள்

தேர்தல் வாக்குறுதிகளில் 10 சதவீதத்தை கூட நிறைவேற்றாத தி.மு.க. அரசு: அண்ணாமலை கடும் தாக்கு

சென்னை, செப். 18– ‘‘தேர்தல் வாக்குறுதிகளில் 10%ஐக் கூட முழுமையாக நிறைவேற்றாமல் தி.மு.க. அரசு நாளொரு நாடகத்தை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது என்று பா.ஜ.க முன்னாள் தலைவர் அண்ணாமலை’’ காட்டமாகக் கூறினார். இது சம்பந்தமாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில் கூறி இருப்பதாவது:- ‘‘ஆட்சிக்கு வந்ததில் இருந்து, வெற்று விளம்பரத்துக்காக அறிவிப்புகளை வெளியிட்டு, நான்கு ஆண்டுகளாக மக்களை ஏமாற்றி வந்த தி.மு.க. அரசு, தற்போது, சட்டசபையில் வெளியிட்ட 256 திட்டங்களை, நிறைவேற்ற சாத்தியமில்லை என்பதால், கைவிடுவதாக முடிவெடுத்துள்ள […]

Loading

செய்திகள்

உத்தராகண்டில் மீண்டும் மேகவெடிப்பு; வீடுகள் இடிந்தன: 5 பேர் மாயம்

டேராடூன், செப். 18– உத்தரகண்ட் மாநிலம் சாமோலி மாவட்டத்தில் பேரிடர் பாதித்த நந்தநகரில் இன்று அதிகாலை கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் 6 வீடுகள் இடிந்து விழுந்ததில் 5 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. கடந்த 2 மாதங்களாக மழை, வெள்ளம், நிலச்சரிவுகளால் உத்தரகண்ட், ஹிமாசல பிரதேச மாநிலங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. உத்தராகண்ட் மாநிலத்தில் மேகவெடிப்பால் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. நேற்றை முன் தினம் டேராடூனில் ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. இதன் காரணமாக தம்சா […]

Loading

செய்திகள்

பாகிஸ்தானை இந்தியா தாக்கினால் சவுதி அரேபியா பதிலடி கொடுக்கும்: ஒப்பந்தம் கையெழுத்து

கத்தார், செப். 18– பாகிஸ்தானை இந்தியா தாக்கினால் சவுதியைத் தாக்கியதாக கருதி பதிலடி கொடுக்கப்படும் என்ற முக்கிய ஒப்பந்தம் கையொப்பம் ஆக உள்ளது. பாகிஸ்தான் மற்றும் சவுதி அரேபியா நாடுகளுக்கு இடையே முக்கிய பாதுகாப்பு உடன்பாடு கையெழுத்தாகியுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி, பாகிஸ்தான் அல்லது சவுதியை யாராவது தாக்கினால், அது இரண்டு நாடுகளின் மீதான தாக்குதலாக கருதப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முஹம்மது பின் சல்மானின் அழைப்பை ஏற்று, பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் […]

Loading

செய்திகள்

அஜித் நடித்த குட் பேட் அக்லி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இருந்து நீக்கம்

சென்னை, செப். 17– நடிகர் அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் இசையமைப்பாளர் இளையராஜாவின் பாடல்களைப் பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்ட நிலையில், நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இருந்து குட் பேட் அக்லி திரைப்படம் நீக்கப்பட்டுள்ளது. மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவன தயாரிப்பில் நடிகர் அஜித் உள்ளிட்ட பலர் நடித்த ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் அண்மையில் வெளியானது. இந்தத் திரைப்படத்தில் ஒத்த ரூபாயும் தாரேன், இளமை இதோ இதோ, ஏஞ்சோடி […]

Loading