செய்திகள்

தங்கம் ஒரு சவரன் ரூ.87,600க்கு விற்பனை; வெள்ளி ஒரு கிராம் – ரூ.165

சென்னை, அக்.4– சென்னையில் இன்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 அதிகரித்து ஒரு சவரன் ரூ.87,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.3 அதிகரித்து ஒரு கிராம் 165 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சர்வதேச முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி, தங்கத்தில் மிக அதிக அளவில் முதலீடு செய்து வருவதால், சர்வதேச சந்தையில் தங்கம் விலை தினமும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. நேற்று முன்தினம் ஆபரண தங்கம் கிராம் 10,950 ரூபாய்க்கும், சவரன் […]

Loading

செய்திகள்

கடல் மாநாடு: தூத்துக்குடி கடலில் படகில் சென்று சீமான் ஆய்வு

தூத்துக்குடி, அக். 4– நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடல் மாநாடு நடத்துவது குறித்து, தூத்துக்குடி மாவட்டம் அமலி நகர் மீனவ கிராமத்தில் இருந்து மீன்பிடி படகு மூலம் மீனவர்களுடன் கடலுக்குள் சென்று ஆய்வு செய்தார். ஐம்பூதங்கள் இல்லாமல் பூமியில் எந்த உயிரினங்களும் இருக்காது என்று கூறிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், ஆகஸ்ட் மாதம் 30-ந்தேதி திருத்தணி அருகே ‘மரங்களின் மாநாடு’, அதனை தொடர்ந்து கடந்த மாதம் 27-ந்தேதி தருமபுரியில் ‘மலைகளின் மாநாடு’ஆகியவற்றை […]

Loading

செய்திகள்

ஐகோர்ட் உத்தரவுபடி கரூரில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை தொடங்கியது

கரூர், அக். 4– கரூர் சம்பவம் தொடர்பாக ஐகோர்ட் நியமித்த சிறப்பு புலனாய்வுக்குழுவினர் இன்று கரூரில் விசாரணையை துவக்கினார்கள். அவர்களிடம் இதுசம்பந்தமாக ஆவணங்களை கரூர் போலீசார் ஒப்படைத்தனர். கரூரில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவத்தைத் தொடர்ந்து தமிழக அரசு ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைத்தது. இதைத் தொடரந்து சம்பவம் நடந்த கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியை […]

Loading

செய்திகள்

மத்திய பிரதேசத்தில் 6 குழந்தைகள் உயிரிழப்பு:

சென்னை, அக். 3– மத்திய பிரதேசத்தில் 6 குழந்தைகள் உயிரிழந்ததைத் தொடர்ந்து தமிழகத்தில் ‘கோல்ட்ரிப்’ இருமல் மருந்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தில் 1 முதல் 7 வயது வரை உள்ள 6 குழந்தைகள் கடந்த 15 நாட்களுக்குள் அடுத்தடுத்து சந்தேகத்துக்குரிய வகையில் உயிரிழந்தன. திடீரென ஏற்பட்ட சிறுநீரக செயலிழப்பு அதற்கு காரணம் என்பது தெரியவந்தது.காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவாா்சத்திரத்தில் செயல்படும் ஸ்ரீசென் பாா்மா என்ற நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட ‘கோல்ட் ரிப்’ மருந்து மற்றும் […]

Loading

செய்திகள்

கரூரில் 41 பேர் பலியான சம்பவம்: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி

மதுரை, அக். 3– கரூரில் 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி தாக்கல் செய்த மனுவை ஐகோர்ட் மதுரை கிளை தள்ளுபடி செய்தது. கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்கக் கோரி எம்எல் ரவி என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். மேலும் கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தது தொடர்பான விசாரணையை சிபிஐக்கு மாற்றுவது, இது போன்ற கூட்டங்களுக்கு வழிகாட்டு […]

Loading

செய்திகள்

திருப்போரூர் சூளேரி காட்டுக்குப்பம் பகுதியில் கடலில் மூழ்கி உயிரிழந்த 3 பேர் குடும்பத்துக்கு ரூ.9 லட்சம் நிவாரணம்: ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை, அக்.3- திருப்போரூர் சூளேரி காட்டுக்குப்பம் பகுதியில் கடலில் மூழ்கி உயிரிழந்த 3 பேர் குடும்பத்துக்கு ரூ.9 லட்சம் நிவாரணம் வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:- செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் தாலுகா சூளேரி காட்டுக்குப்பம் பகுதியில் கடலில் மூழ்கி உயிரிழந்த பெரம்பூர் சக்கரபாணி தோட்டத்தை சேர்ந்த வெங்கடேசன் (வயது 36), அவரது மகள்கள் கார்த்திகா (17), துளசி (16) எதிர்பாராதவிதமாக கடலில் மூழ்கி உயிரிழந்த செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் […]

Loading

செய்திகள்

முதல்வர் ஸ்டாலின், நடிகை திரிஷா வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை, அக். 3– முதல்வர் ஸ்டாலின், நடிகை திரிஷா வீடுகளுக்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபகாலமாக தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் பள்ளிகள், விமான நிலையங்கள், அரசியல் தலைவர்களின் வீடுகள், முக்கியமான நிறுவனங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று முதலமைச்சர் ஸ்டாலின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் வீடு ஆழ்வார்பேட்டையில் அமைந்துள்ளது. இன்று அதிகாலை டிஜிபி அலுவலக காவல்துறை கட்டுப்பாட்டு […]

Loading

செய்திகள்

பா.ம.க. இளைஞர் சங்க தலைவராக ஜி.கே.மணி மகன் நியமனம்: ராமதாஸ் அறிவிப்பு

திண்டிவனம், அக்.3- பா.ம.க. இளைஞர் சங்க தலைவராக ஜி.கே.மணி மகன் தமிழ்குமரனை டாக்டர் ராமதாஸ் நியமனம் செய்தார். விழுப்புரம் மாவட்டம் பட்டானூரில் கடந்த 28.12.2024 அன்று நடைபெற்ற பா.ம.க. சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் பா.ம.க. இளைஞர் சங்க தலைவராக தனது பேரனான முகுந்தனை (டாக்டர் ராமதாசின் மூத்தமகள் காந்திமதியின் மகன்) நியமிப்பதாக டாக்டர் ராமதாஸ் அறிவித்தார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த டாக்டர் அன்புமணி, மைக்கை மேஜையில் வீசிவிட்டு வெளியேறினார். அதன்பிறகுதான் தந்தை, மகனான டாக்டர் ராமதாசுக்கும், […]

Loading

செய்திகள்

எல்லையில் அத்துமீறினால் தக்க பதிலடி கொடுக்கப்படும்: பாகிஸ்தானுக்கு, ராஜ்நாத் சிங் எச்சரிக்கை

பூஜ், அக்.3- குஜராத்தின் ‘சர் கிரீக்’ பகுதியில் அத்துமீறினால் தக்க பதிலடி கொடுக்கப்படும் என பாகிஸ்தானுக்கு ராஜ்நாத் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார். குஜராத்தின் ரன் ஆப் கட்ச் மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே 96 கி.மீ நீளமுள்ள முகத்துவாரப்பகுதி சர் கிரீக் என அழைக்கப்படுகிறது. இரு நாடுகளுக்கு இடையேயான கடல் எல்லை குறித்து இரு தரப்புக்கு இடையே மாறுபட்ட நிலைப்பாடுகள் உள்ளதால் இது ஒரு சர்ச்சைக்குரிய பகுதியாகக் கருதப்படுகிறது. இந்த நிலையில் குஜராத்தின் எல்லைப்பகுதியான பூஜ்ஜில் உள்ள ராணுவ […]

Loading

செய்திகள்

தி.நகர் தெற்கு உஸ்மான் சாலை – சிஐடி நகர் பிரதான சாலையை இணைக்கும் மேம்பாலம் : ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை, செப் 30– முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று, சென்னை மாநகராட்சியின் சார்பில் சென்னை, சி.ஐ.டி. நகர் தியாகராய நகரில் தெற்கு உஸ்மான் சாலை மற்றும் சி.ஐ.டி. நகர் பிரதான சாலையை இணைக்கும் வகையில் 164.92 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட மேம்பாலத்தை திறந்து வைத்தார். இதற்கு மறைந்த தியாகராய நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரின் நினைவாக “ஜெ. அன்பழகன் மேம்பாலம்” என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. சிஐடி நகர் பிரதான சாலையில் நிகழ்ச்சி நடந்தது. பெருகிவரும் போக்குவரத்தினைக் […]

Loading