சென்னை, அக். 7– தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்தின் தாயார் மறைவுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் பொருளாளர் எல்.கே.சுதீஷின் தாயார் அம்சவேணி உடல்நலக்குறைவால் காலமானார். வயது மூப்பால் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த அம்சவேணி, அண்மைக்காலமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை 7.30 மணி அளவில் அவர் உயிரிழந்தார். அவருடைய உடல் சாலிகிராமத்தில் உள்ள சுதீஷின் […]
![]()











