செய்திகள்

இருமல் மருந்து விவகாரம்; 2 அதிகாரிகள் சஸ்பெண்ட்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை, அக். 9– இருமல் மருந்து குடித்து 21 குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து அந்த மருந்தின் தரத்தை 2 ஆண்டுகளாக ஆய்வு செய்யாத 2 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை எழும்பூரில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ‘கோல்ட்ரிப்’ இருமல் மருந்தில் நச்சுத்தன்மை அதிகமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. 1-ந்தேதி மத்திய பிரதேசத்தில் இந்த மருந்தை சாப்பிட்ட 20 குழந்தைகள் உயிரிழந்த நிலையில் அம்மாநில அரசு […]

Loading

செய்திகள்

காஞ்சிபுரம் இருமல் மருந்து தயாரிப்பு நிறுவன உரிமையாளர் கைது

சென்னை, அக். 9– மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கோல்ட்ரிப் இருமல் மருந்து சாப்பிட்டதால் 20 குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில், அந்த இரு​மல் மருந்தை தயாரித்த தனியார் மருந்து ஆலையின் உரிமையாளரான ரங்கநாதன் கைது செய்யப்பட்டார். மத்​திய பிரதேசம் சிந்த்​வாரா மாவட்​டத்​தில் கடந்த ஆகஸ்ட் மாதத்​தில் கோல்ட்​ரிப் இரு​மல் மருந்து காரண​மாக முதல் குழந்தை உயி​ரிழந்​தது. ஆனால், அடுத்தடுத்த நாட்​களில் மேலும் சில குழந்​தைகள் சிறுநீரக செயலிழப்​பால் அடுத்​தடுத்து உயி​ரிழந்தன. மொத்தம் 20 குழந்தைகள் அங்கு உயி​ரிழந்தன. […]

Loading

செய்திகள்

ஈரோடு நாகமலை குன்று உயிரியல் பாரம்பரியத் தளமாக அறிவிப்பு

சென்னை, அக்.9- ஈரோடு மாவட்டத்தில் உள்ள நாகமலை குன்றினை உயிரியல் பாரம்பரியத் தளமாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசின் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் சுப்ரியா சாகு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:- தமிழ்நாடு அரசு, உயிரியல் பன்மை சட்டம் 2002 பிரிவு 37 (1)-ன் கீழ் அரிட்டாபட்டியை 2022-ம் ஆண்டு நவம்பர் மாதமும், கடந்த மார்ச் மாதம் காசம்பட்டியையும், கடந்த மாதம் எலத்தூர் ஏரியையும் பல்லுயிர் பாரம்பரிய தளமாக அறிவித்தது. […]

Loading

செய்திகள்

ரெயில் டிக்கெட்டை ரத்து செய்யாமல் வேறு தேதிக்கு மாற்றலாம்: ஜனவரி மாதம் நடைமுறைக்கு வருகிறது

சென்னை, அக்.9- ரெயில்களில் ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகள், சில நேரம் தங்கள் பயண திட்டத்தை மாற்றினால் அந்த டிக்கெட்டை ரத்து செய்துவிட்டு மீண்டும் புதிதாக முன்பதிவு செய்ய வேண்டிய நடைமுறையே தற்போது உள்ளது. பயணத்திற்கு 12 முதல் 48 மணி நேரத்திற்கு முன்பு ரத்து செய்தால், கட்டணத்தில் 25 சதவீதம் பிடித்தம் செய்யப்படுகிறது. நேரம் குறைய குறைய இந்த கட்டணம் அதிகரிக்கிறது. பயணிகளின் சிரமத்தைப் போக்கும் வகையில் உறுதி செய்யப்பட்ட ரெயில் டிக்கெட்டை […]

Loading

செய்திகள்

சென்னையில் ‘ஏரோ டெஃப்கான்’ 3 நாள் சர்வதேச மாநாடு; 19 நாடுகள் பங்கேற்பு

சென்னை, அக்.7– உற்பத்தி துறையில் தமிழ்நாடு லீடராக மாறி வருகிறது என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெருமிதத்துடன் கூறினார். தமிழகம் இன்று இந்தியாவை ஈர்க்கும் நிலையில் இருந்து உலகை ஈர்க்கும் மாநிலமாக உயர்ந்திருக்கிறது என்றும் அவர் கூறினார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னை நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்ற டிட்கோ, பி.சி.ஐ. ஏரோஸ்பேஸ் (பிரான்ஸ்), மற்றும் தமிழ்நாடு ஏரோஸ்பேஸ் தொழில் வளர்ச்சி கூட்டமைப்பு இணைந்து வான்வெளி மற்றும் பாதுகாப்பு துறைக்கான “ஏரோ டெஃப்கான் 2025” […]

Loading

செய்திகள்

எடப்பாடி பழனிசாமியுடன் பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளர்கள் சந்திப்பு

சென்னை, அக். 7– அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சென்னையில் இன்று பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர்கள் சந்தித்து பேசினர். தமிழக சட்டசபைத் தேர்தல் அடுத்தாண்டு நடைபெறவுள்ள நிலையில், அண்ணா தி.மு.க.வும் பா.ஜ.க.வும் இணைந்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளன. இதனிடையே பா.ஜ.க. சார்பில் தேர்தல் பொறுப்பாளராக தேசிய துணை தலைவர் பைஜெயந்த் பாண்டா எம்.பி., இணை பொறுப்பாளர் மத்திய இணை அமைச்சர் முரளிதர் மொஹோல் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். தேர்தல் பிரச்சாரம், கூட்டணி விவகாரம் தொடர்பாக ஆலோசனை செய்வதற்காக அவர்கள் […]

Loading

செய்திகள்

சென்னையில் சிறப்பான செயல்பாடு: 29 காவலர்களுக்கு கமிஷனர் அருண் பாராட்டு

சென்னை, அக். 7– சென்னை பெருநகர காவல் துறையில் சிறப்பாக பணிபுரிந்த 29 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை கமிஷனர் அருண் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார். போதைப்பொருள்தடுப்பு நுண்ணறிவுப் பிரிவின் தொடர் ஒருங்கிணைந்த நடவடிக்கை மேற்கொண்டு குற்றவாளிகளை கைது செய்த ஆய்வாளர் என்.ராஜாசிங், உதவி ஆய்வாளர்கள் ஜெயராஜ், வெங்கடேஷ், தலைமைக்காவலர் ராம்திலக், காவலர்கள் அஸ்வின்குமார், சுதாகர், நவீன்குமார், வேல்முருகன் மற்றும் அடையார் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல்குழுவினர் ஆய்வாளர் மீனாட்சி சுந்தரம், உதவி ஆய்வாளர்கள் ஜெய்கணேஷ், […]

Loading

செய்திகள்

சென்னை ஓட்டலில் கஞ்சா பார்ட்டி: 3 பெண்கள் உள்பட 18 பேர் கைது

சென்னை, அக். 7– சென்னை ஓட்டலில் கஞ்சா பார்ட்டியில் கலந்து கொண்ட 3 பெண்கள் உள்பட 18 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை கீழ்ப்பாக்கம் ஈவிஆர் சாலையில் உள்ள பப் ஒன்றில் கஞ்சா பார்ட்டி நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் ஓட்டல் அறைகளில் சோதனையிட்டனர். ஆனால் அவர்கள் அங்கு இல்லை. அருகில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கி இருப்பது தெரியவந்தது. இசையமைப்பாளர் மகள் […]

Loading

செய்திகள்

தங்கம் விலை இன்று சவரன் ரூ.90 ஆயிரத்தை நெருங்கியது

சென்னை, அக். 7– 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரு சவரன் ரூ.90,000-ஐ நெருங்கி உள்ளது. இந்தப் புதிய உச்சம் மக்களுக்கும், நகை பிரியர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உலகளவில் நிலவும் பொருளாதார நிச்சயமற்றத் தன்மை காரணமாக உலக நாடுகள் தங்களது மத்திய வங்கிகளில் தங்கக்கட்டிகளை வாங்கிக் குவித்ததன் விளைவாகவும் தங்கத்தின் விலை விண்ணை முட்டும் வகையில் தொடர் ஏற்றம் கண்டுள்ளது. சில சமயங்களில் நாளொன்றுக்கு காலை, மாலை என இரண்டு முறை […]

Loading

செய்திகள்

கரூரில் 41 பேர் பலியான சம்பவம்: சிபிஐ விசாரணை கோரி சுப்ரீம் கோர்ட்டில் தவெக மனு

புதுடெல்லி, அக். 7– கரூரில் நடிகரும் தவெக தலைவருமான விஜய், மக்கள் சந்திப்பு பிரசாரக் கூட்டத்தின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவத்தை சிபிஐ விசாரணை கோரி தவெக சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கரூர் வேலுச்சாமிபுரத்தில் செப்டம்பர் 27ஆம் தேதி சனிக்கிழமை இரவு தவெக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டார். இந்த பிரசாரத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி தவெக தொண்டர்கள், பெண்கள், குழந்தைகள் என மொத்தம் 41 பேர் […]

Loading