செய்திகள்

சென்னையில் விடிய விடிய மழை: தீபாவளி முதல்  வடகிழக்கு பருவமழை

சென்னை, அக்.14– தமிழகத்தில் இன்னும் ஓரிரு தினங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது. தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதையொட்டிய லட்சத்தீவு பகுதிகளில் வரும் 19ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை நாளை தொடங்கலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தென்மேற்கு வங்கக்கடல் – பூமத்திய ரேகையை ஓட்டிய இந்திய பெருங்கடல் […]

Loading

செய்திகள்

தேனாம்பேட்டை – சைதாப்பேட்டை மேம்பால கட்டுமானப் பணிகள்: அமைச்சர் வேலு ஆய்வு

சென்னை, அக்.15– சென்னை, அண்ணா சாலையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க அரசு திட்டமிட்டு, தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை, மேம்பாலம் கட்டும் பணியைத் துவக்கி, தற்போது, கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த மேம்பாலத்தில் இரும்பு உத்திரங்கள் பொருத்தும் பணிகள், போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் மேற்கொள்ள வேண்டும் என்ற அமைச்சரின் ஆணைக்கிணங்க, நேற்று முன்தினம் நள்ளிரவில் பணிகள் தொடங்கியது. அமைச்சர் எ.வ.வேலு பணித் தளத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு, ஆலோசனைகளை வழங்கினார். 3.20 கி.மீ. நீளமுடைய இந்த […]

Loading

செய்திகள்

கரூர் கூட்ட நெரிசலில் பலியான 41 பேருக்கு அஞ்சலி; இரங்கல் தீர்மானம்

சென்னை, அக்.14– தமிழக சட்டசபை இன்று காலை 9.30 மணிக்கு கூடியது. கரூர் சம்பவத்தில் பலியான 41 பேரின் குடும்பத்துக்கு சட்டசபையில் இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.கூட்டம் தொடங்கியதும் சபாநாயகர் அப்பாவு, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் 8 பேர் மறைவு குறித்து இரங்கல் குறிப்புகளை வாசித்தார். மறைந்த சட்டமன்ற உறுப்பினர்களான புரட்சி மணி, குணசேகரன், கோவிந்தசாமி, அமர்நாத், […]

Loading

செய்திகள்

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இந்து மகாசபா தலைவர் கைது

சென்னை, அக். 14– சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இந்து மகாசபா தலைவர் ஸ்ரீகந்தன் கைது செய்யப்பட்டார். சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்தவர் ஸ்ரீ என்கிற ஸ்ரீகந்தன். இவர் அகில இந்திய இந்து மகாசபா தலைவராக உள்ளார். இதனிடையே, கோடம்பாக்கம் புலியூரை சேர்ந்த பெண் இவரது வீட்டில் பணியாற்றி வருகிறார். அவர் தனது சகோதரன் மகளை அடிக்கடி ஸ்ரீகந்தன் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். பின்னர், சிறுமியை கானத்தூரில் உள்ள ஸ்ரீகந்தனின் மற்றொரு வீட்டிற்கும் அப்பெண் அழைத்து சென்றுள்ளார். அந்த […]

Loading

செய்திகள்

விஜய் கரூர் செல்ல ஏற்பாடு: புஸ்ஸி ஆனந்த் தலைமையில் 10 பேர் கொண்ட குழு

கரூர், அக். 14– விஜய் கரூர் செல்வதற்கான ஏற்பாட்டு பணிகளை கவனிக்க புஸ்ஸி ஆனந்த் தலைமையில் 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. கரூரில் நடந்த த.வெ.க. பிரசாரத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக கரூர் மாவட்ட த.வெ.க. செயலாளர் மதியழகன் கைது செய்யப்பட்டார்.மேலும் த.வெ.க. பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணைப் பொதுச்செயலாளர் சி.டி. நிர்மல் குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது. இதைத் தொடர்ந்து இருவரும் […]

Loading

செய்திகள்

தலைமறைவாக இருந்த புஸ்ஸி ஆனந்த் 16 நாட்களுக்கு பின் விஜய்யுடன் சந்திப்பு

சென்னை, அக். 14– கரூர் கூட்ட நெரிசலில் 41 உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து தலைமறைவாக இருந்த புஸ்ஸி ஆனந்த் 16 நாட்களுக்கு பின் த.வெ.க. தலைவர் விஜய்யை சந்தித்து பேசினார். கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த மாதம் 27-ந் தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக பிரசார கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், துணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார், கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் உள்பட சிலர் […]

Loading

செய்திகள்

சட்டசபை வளாகத்தில் அன்புமணி ராமதாஸ் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தர்ணா போராட்டம்

சென்னை, அக்.14– சட்டசபை வளாகத்தில் பா.ம.க.வின் அன்புமணி ராமதாஸ் எம்.எல்.ஏ.க்கள் இன்று காலை தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த நிலையில் சட்டசபையில் பா.ம.க. குழுத் தலைவர் ஜி.கே.மணி, பாமக கொறடாவாக அருள் ஆகியோரை நீக்கக் கோரி கடந்த மாதம் அன்புமணி ராமதாஸ் தரப்பு எம்.எல்.ஏ.க்கள் சட்டசபைச் செயலர் சீனிவாசனை சந்தித்து கடிதம் கொடுத்தனர். ஆனால் இதுவரை பா.ம.க. குழுத் தலைவர் […]

Loading

செய்திகள்

தங்கம் சவரன் ரூ.95 ஆயிரத்தை நெருங்கியது: வெள்ளி விலை ரூ.206 ஆனது

சென்னை, அக்.14– தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,960 உயர்ந்துள்ளது. வெள்ளியும் ஒரு கிராம் ரூ.206க்கு விற்பனையாகிறது. தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில் தங்கம், வெள்ளி விலை தொடர்ந்து அதிகரித்து வருவது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பில் சரிவு, போர் உள்ளிட்ட காரணங்களால் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு நாள்தோறும் உயர்ந்து வருகிறது. கடந்த சில நாள்களாக காலை, மாலை என இரு நேரங்களில் […]

Loading

செய்திகள்

தமிழகத்தில் ரூ.15,000 கோடி முதலீடு: 14 ஆயிரம் புதிய வேலைவாய்ப்பு

சென்னை, அக்.14– தைவான் நாட்டை சேர்ந்த, ‘பாக்ஸ்கான்’ நிறுவனம், 15 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய, தமிழக அரசிடம் நேற்று உறுதி அளித்துள்ளது. இந்நிறுவனம் தமிழகத்தில், அதிகளவில் முதலீடு செய்வதால், விரைவாக ஒப்புதல் அளிக்க, வழிகாட்டி நிறுவனத்தில் தனி அமர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகில் சுங்குவார்சத்திரத்தில், பாக்ஸ்கான் நிறுவனத்துக்கு தொழிற்சாலை உள்ளது. அங்கு, அமெரிக்காவின், ‘ஆப்பிள்’ நிறுவனத்தின், ‘ஐபோன்’ பாகங்களை ஒருங்கிணைத்து, பல நாடுகளுக்கு போன்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தற்போது, பாக்ஸ்கான் […]

Loading

செய்திகள்

சென்னையில் மு.க.ஸ்டாலின் தலைமையில் நவம்பர் 5, 6-ந் தேதிகளில் கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகள் மாநாடு

சென்னை, அக்.14-– முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் உயர் அதிகாரிகள் மாநாடு சென்னையில் அடுத்த மாதம் 5, 6 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. தமிழக அரசு பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை கொண்டு வந்து நிறைவேற்றி வருகிறது. இந்த திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து அவ்வப்போது உயர்மட்ட அதிகாரிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைத்து ஆய்வு கூட்டங்களை நடத்தி வருகிறார். அதில் அவர், அனைத்து துறைகளும் செயல்படுத்தி வரும் திட்டங்கள் மற்றும் அதன் செயல்பாட்டு நிலை போன்றவற்றை அறிந்து […]

Loading