செய்திகள்

வங்கக்கடலில் உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி: வானிலை மையம் அறிவிப்பு

சென்னை, அக். 24– தென் கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் சமீபத்தில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்றது. மேலும் தாழ்வு மண்டலமாகவோ, புயலாகவோ வலுவடையும் என சொல்லப்பட்டது. ஆனால் அந்த நிலை அப்படியே மாறியது. இந்த நிலையில் தற்போது வங்கக் கடலில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று உருவாகியுள்ளது. இது குறித்து இந்திய […]

Loading

செய்திகள்

நாளை உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி

சென்னை, அக். 23– வங்கக் கடலில் நாளை (24–ந்தேதி) புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. முன்னதாக 25–ந்தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும் என அறிவித்துள்ளது. புதிதாக உருவாகும் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி வலுவடைந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக உருவாகுமா அல்லது வலுவிழக்குமா என்பதை இதன் நகர்வை பொருத்துதான் கணிக்கப்படும். நாளை உருவாகும் […]

Loading

செய்திகள்

ஆசியான் மாநாட்டை புறக்கணித்த மோடி: காணொலி மூலம் பங்கேற்கிறார்

கோலம்பூர், அக். 23– மலேசியாவில் நடைபெறவுள்ள ஆசியான் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி நேரில் கலந்துகொள்ளமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காணொலி மூலம் கலந்துகொண்டு பிரதமர் மோடி உரையாற்றவுள்ளதாக மலேசியா பிரதமர் அன்வர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். மலேசியாவில் வரும் 26–ந்தேதி முதல் 28–ந்தேதி வரை 3 நாட்கள் தென்கிழக்கு ஆசிய நாடுகள் (ஆசியான்) கூட்டமைப்பின் உச்சி மாநாடு நடைபெறவுள்ளது. இந்த உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரேசில் அதிபர் லூலா டி சில்வா உள்ளிட்ட முக்கியத் […]

Loading

செய்திகள்

சென்னையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு :

சென்னை 23: சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களிலும் கன மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.  சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களிலும் கன மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக […]

Loading

செய்திகள்

திமுக எம்.எல்.ஏ பொன்னுசாமி காலமானார்

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் திமுக சட்டமன்ற உறுப்பினர் பொன்னுசாமி உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 74. கடந்த சட்டமன்றத் தேர்தலில், சேந்தமங்கலம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் பொன்னுசாமி. இவருக்கு ரத்த குழாய்களில் அடைப்பு ஏற்பட்ட இருந்த நிலையில், கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பைபாஸ் சர்ஜரி செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில், இன்று அதிகாலை, வீட்டில் ஓய்வெடுத்து வந்த பொன்னுசாமிக்கு திடீரென்று இதயத்தில் வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு […]

Loading

செய்திகள்

அனைவரது வாழ்விலும் வளமும், நலமும் பெருகட்டும்: எடப்பாடி ‘தீபாவளி’ வாழ்த்து

சென்னை, அக்.19– நாளை தீபாவளி பண்டியையொட்டி அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்களை அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:– மக்கள் அனைவரும் கொண்டாடி மகிழும் பண்டிகைகளில், சிறப்பு மிக்க பண்டிகையாம் தீபாவளித் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் அனைவருக்கும் எனது உளங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன். நரகாசுரன் எனும் கொடிய அரக்கனை மகாலட்சுமி துணையுடன், திருமால் அழித்த தினமே தீபாவளி பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. இந்தத் திருநாள் இருளை நீக்கி, ஒளியை […]

Loading

செய்திகள்

நீதிமன்றம் குறித்து அவதூறு பேச்சு: சீமான் மீது போலீசார் வழக்குப்பதிவு

சென்னை, அக். 19– நீதிமன்றம் குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் மாதம் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டியொன்றில், நீதித்துறையை அவமதிக்கும் வகையில் நீதிமன்ற செயல்பாடுகளை மோசமாக விமர்சித்து ஆபாச வார்த்தைகளால் பேசியதாகக் கூறி, வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் என்பவர் போலீசில் புகார் அளித்திருந்தார். அந்த புகார் மீது போலீசார் நடவடிக்கை […]

Loading

செய்திகள்

திருச்செந்தூரில் கடல் 100 அடி உள்வாங்கியது

திருச்செந்தூர், அக். 19– திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். அவர்கள் கடலில் புனித நீராடிவிட்டு கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வது வழக்கம். பொதுவாக அமாவாசை, பவுர்ணமி, அஷ்டமி, நவமி போன்ற கனத்த நாட்களில் திருச்செந்தூரில் கடல் திடீரென உள்வாங்கும். மேலும் சீற்றத்துடனும் காணப்படும். குறிப்பாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கும், அய்யா வைகுண்டர் அவதாரபதிக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில் ஒவ்வொரு மாதமும் அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில், அதற்கு முந்தைய […]

Loading

செய்திகள்

தமிழ்நாட்டில் 22, 23–ந் தேதிகளில் கனமழை: ஆரஞ்ச் எச்சரிக்கை

சென்னை, அக்.19– தமிழ்நாட்டில் 22, 23–ந் தேதிகளில் கனமழை இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வடகிழக்கு பருவமழை காலத்தில் முதல் நிகழ்வு 24-ந்தேதி (வெள்ளிக்கிழமை) உருவாகும் என சொல்லப்பட்டிருந்தது. அதாவது தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலம் மற்றும் புயல் சின்னங்கள் ஆகியவற்றை நிகழ்வுகள் என்று குறிப்பிடப்படுகிறது. இது நல்ல மழையை கொடுக்கும். அந்த வகையில் 24-ந்தேதி வங்கக்கடலில் உருவாகும் என எதிர்பார்க்கப்பட்ட காற்றழுத்த தாழ்வுப் பகுதி, முன்கூட்டியே 21-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) தென்கிழக்கு வங்கக்கடலில் […]

Loading

செய்திகள்

ஒரு சவரன் தங்கம் ரூ.95 ஆயிரத்தை கடந்தது

சென்னை, அக்.16– சென்னையில் இன்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 அதிகரித்து ஒரு சவரன் ரூ.95,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச நிலவரங்களால், தங்கம் விலை தினமும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. நேற்று தங்கம் விலை கிராமுக்கு 35 ரூபாய் உயர்ந்து, 11,860 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 280 ரூபாய் அதிகரித்து, 94,880 ரூபாய் என்ற புதிய உச்சத்தை எட்டியது. இந்நிலையில் இன்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 […]

Loading