செய்திகள்

முழுநேர சினிமா விமர்சகராக மாறிவிட்டார் ஸ்டாலின்: எடப்பாடி கடும் தாக்கு

சென்னை, அக்.28– எதற்காக முதலமைச்சரானோம் என்பதை மறந்துவிட்டு, முழுநேர சினிமா விமர்சகராக மாறிவிட்டார் ஸ்டாலின் என்று எடப்பாடி பழனிசாமி காட்டமாக கூறினார். அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தன்னுடைய எக்ஸ் தளத்தில் தெரிவித்திருப்பதாவது:– நாற்று நட்ட கைகளில், மழையில் நனைந்து முளைத்திருந்த நெல்லைப் பிடித்த போது, விவசாயிகளின் விவரிக்க முடியாத வேதனையை உணர்ந்தேன். ஆனால், இந்த நெல்லைப் பிடித்திருக்க வேண்டிய முதல்வர் ஸ்டாலினின் கை, படக்குழுவினரின் கைகளைப் பற்றிக் கொண்டிருக்கிறது.திரைப்படங்களைப் பார்ப்பதிலோ, திறமையான திரைப்பட குழுவினரை […]

Loading

செய்திகள்

8 கி.மீ வேகத்தில் நகர்கிறது: இன்றே உருவாகிறது ‘மோன்தா’ புயல்

சென்னை, அக். 26– வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 8 கி.மீ வேகத்தில் வடமேற்கில் நகர்ந்து வருகிறது. இன்று மாலை 5.30 மணிக்கு புயலாக (மோன்தா) வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:– தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று காலை 5.30 மணிக்கு மேற்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக […]

Loading

செய்திகள்

தனியார் பல்கலைக்கழகங்கள் சட்டம் வாபஸ்: தி.மு.க. அரசு சமூகநீதியிடம் மண்டியிட்டிருக்கிறது

சென்னை, அக். 26– தமிழ்நாட்டில் எழுந்த கொந்தளிப்பை சமாளிக்க முடியாமல் தி.மு.க. அரசு சமூகநீதியிடம் மண்டியிட்டிருக்கிறது என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– தமிழ்நாட்டில் இயங்கி வரும் தனியார் சுயநிதி கல்லூரிகள், அரசு உதவி பெறும் தனியார் கல்லூரிகள் ஆகியவற்றை தனியார் பல்கலைக்கழகங்களாக்க அனுமதிக்கும் வகையில் நிறைவேற்றப்பட்ட சட்டத் திருத்த முன்வடிவை திரும்பப் பெறுவதாக தி.மு.க. அரசு அறிவித்திருக்கிறது. சமூகநீதியை படுகொலை செய்யும் செயலுக்கு எதிராக பா.ம.க. […]

Loading

செய்திகள்

அடையாறு ஆற்றின் முகதுவாரத்தினை அகலப்படுத்தும் பணி தீவிரம்

சென்னை, அக்.25– அடையாறு ஆற்றின் முக துவாரத்தில் உள்ள மண் படுகைகளை வடகிழக்கு பருவ மழை துவங்கும் முன்பு முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி நீர்வளத்துறையினரால் செப்டம்பர் முதல் அக்டோபர் மாதம் வரை தூர்வாரி அகலப்படுத்தப்பட்டு வருகிறது. முகத்துவாரம் மண் படுகையினால் மூடப்படும் நிகழ்வானது கடல் அலைகளினால் தொடர்ந்து நடைபெறும் நிகழ்வாகும். இந்நிலையில் வடகிழக்கு பருவ மழை தீவிரமானதால் முதலமைச்சர் நேற்று (24–ந் தேதி) அடையாறு முக துவாரத்திற்கு திடீராய்வு மேற்கொண்டு நீர்வளத்துறையினரால் 3 பொக்லைன் கொண்டு தூர்வாரப்படும் அடையாறு […]

Loading

செய்திகள்

தீவிர புயலாக வலுப்பெறும் ‘மோன்தா’ புயல்

சென்னை, அக். 25– வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை 28ம் தேதி தீவிர புயலாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள ஏரி, குளங்கள், அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. வடகிழக்கு பருவமழையின் முதல் நிகழ்வு வங்கக்கடலில் உருவாகி, வடமாவட்டங்களில் சில இடங்கள், டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட சில பகுதிகளில் மழை […]

Loading

செய்திகள்

மரத்தில் கார் மோதி விபத்து: பிறந்தநாள் கொண்டாட சென்ற நண்பர்கள் 4 பேர் பலி

கோவை, அக். 25– கோவை சிறுவாணி சாலையில் அதிவேகமாக சென்ற கார் சாலையோரம் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் பிறந்தநாள் கொண்டாட காரில் சென்ற நண்பர்கள் 4 பேர் பலியானார்கள். கோவை மாவட்டம் பேரூர் அருகே செட்டிபாளையம் அடுத்த சிறுவாணி சாலையில் நேற்று நள்ளிரவு ஒரு சொகுசு கார் வேகமாக வந்து கொண்டு இருந்தது. அந்த காரில் நண்பர்கள் 5 பேர் பயணம் செய்தனர். அங்குள்ள ஒரு வளைவில் கார் திரும்ப முயன்ற போது, கட்டுப்பாட்டை இழந்த […]

Loading

செய்திகள்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 அதிகரிப்பு: ஒரு சவரன் ரூ.92 ஆயிரத்துக்கு விற்பனை

சென்னை, அக். 25– சென்னையில் இன்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 அதிகரித்து ஒரு சவரன் ரூ.92 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச நிலவரங்களால் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்த வருகிறது. கடந்த 17-ம் தேதி அதிகபட்சமாக ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.12,200-க்கும், ஒரு சவரன் ரூ.97,600-க்கும் விற்பனையானது. அதன் பிறகு சிறிய அளவில் குறையத் தொடங்கியது. நேற்று முன்தினம் ஆபரண தங்கம் கிராம் 11,500 ரூபாய்க்கும், சவரன் 92,000 ரூபாய்க்கும் […]

Loading

செய்திகள்

மேட்டூர் அணை தண்ணீர் திறப்பு 65 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு: 11 மாவட்டங்களுக்கு வெள்ள எச்சரிக்கை

மேட்டூர், அக். 24– மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 65,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. மேட்டூர் அணை நீர்மட்டம் 5வது நாளாக 120 அடியாக உள்ளது. கர்னாடக மாநிலத்தில் காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணைகளின் பாதுகாப்பு கருதி உபரி நீர் திறப்பு […]

Loading

செய்திகள்

27–ந் தேதி உருவாகிறது ‘மோன்தா’ புயல்

சென்னை, அக்.24– 27–ந் தேதி (திங்கட்கிழமை) வங்கக்கடலில் புதிய புயல் உருவாகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு ‘மோன்தா’ என பெயரிடப்பட்டு உள்ளது. இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:– தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில், ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில், இன்று புதிய காற்றழுத்த […]

Loading

செய்திகள்

சென்னை அடையாறு முகத்துவாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆய்வு

சென்னை, அக்.24– சென்னை அடையாறு முகத்துவாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு செய்தார். வடகிழக்கு பருவமழை, கடந்த 16-ந் தேதி தமிழகத்தில் தொடங்கியது. சற்று தாமதமாக தொடங்கினாலும், அதன் வேகம் மிக தீவிரமாக இருக்கிறது. ஏற்கனவே வடகிழக்கு பருவமழை அதிக அளவில் பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்ததால் அதற்கேற்ற வகையில் தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில், சென்னை, சீனிவாசபுரம் அருகில் அடையாறு ஆறு கடலில் கலக்கும் முகத்துவாரத்தில் […]

Loading