செய்திகள்

வணிக பயன்பாட்டுக்கான கியாஸ் சிலிண்டர் விலை குறைவு

சென்னை,நவ. 1 வணிக பயன்பாட்டுக்கான கியாஸ் சிலிண்டர் விலை குறைந்துள்ளது. பாரத், இந்துஸ்தான், இந்தியன் ஆயில் ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் வீடுகளுக்கு 14.20 கிலோ எடையிலும், வணிக பயன்பாட்டுக்கு 19 கிலோ எடையிலும், சமையல் கியாஸ் சிலிண்டர்களை நாடு முழுவதும் வினியோகம் செய்து வருகின்றன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் […]

Loading

செய்திகள்

வீல்ஸ் இந்தியா 2ம் காலாண்டு நிகர லாபம் ரூ.28 கோடியாக உயர்வு

சென்னை, நவ 1– வீல்ஸ் இந்தியா நிறுவனம், செப்டம்பர் 30ந் தேதியுடன் முடிவடைந்த 2ம் காலாண்டில் நிகர லாபத்தில் 26.69% அதிகரித்து ரூ.28 கோடியாக உயர்ந்துள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் ரூ.22 கோடியாக இருந்தது. இதேபோல வருவாய் 8.63% அதிகரித்து ரூ.1179 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு ரூ.1085 கோடியாக இருந்தது. உலகளாவிய சூழ்நிலையில் நிச்சயமற்ற தன்மை இருந்தபோதிலும் நிறுவனம், ரூ.299 கோடி ஏற்றுமதி வருவாயைப் பதிவு செய்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 15.6% […]

Loading

செய்திகள்

அண்ணா தி.மு.க.வில் இருந்து செங்கோட்டையன் நீக்கம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

சென்னை, நவ.1- சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரனை சந்தித்த செங்கோட்டையனை அண்ணா தி.மு.க.வில் இருந்து அதிரடியாக நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அண்ணா தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், அண்ணா தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் இணைத்து பலப்படுத்த வேண்டும் என்று கூறியதோடு பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு காலக்கெடுவும் நிர்ணயித்தார். இதனால் அவரது கட்சிப்பதவிகள் அதிரடியாக பறிக்கப்பட்டன. இருப்பினும் கட்சி உறுப்பினராக நீடித்து வந்தார். இதற்கிடையே பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் 118-வது ஜெயந்தி விழா மற்றும் குரு […]

Loading

செய்திகள்

இந்திரா காந்தி நினைவு நாள்: சோனியா, ராகுல் மரியாதை

புதுடெல்லி, அக். 31– முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவு நாளையொட்டி அவரது நினைவிடத்தில் சோனியா, ராகுல் காந்தி ஆகியோர் மரியாதை செலுத்தினார்கள். இந்தியாவின் முதல் பெண் பிரதமரான இந்திரா காந்தி, கடந்த 1984ம் ஆண்டு அக்டோபர் 31ந்தேதி தனது பாதுகாவலர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 41வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்தியா முழுவதும் உள்ள காங்கிரஸ் தொண்டர்கள் அவரது நினைவு நாளை அனுசரித்து வருகின்றனர். இந்த நிலையில் டெல்லியில் சக்தி ஸ்தலத்தில் […]

Loading

செய்திகள்

த.வெ.க. தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை, அக். 31– சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த சில மாதங்களாக அரசியல் கட்சித் தலைவர்கள், பொது இடங்கள், திரைப் பிரபலங்களின் வீடுகள், விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. ஏற்கனவே நடிகர் ரஜினிகாந்த், தனுஷ், காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் வீடுகளில் வெடிகுண்டு வைக்கப்பட்டதாக மிரட்டல் வந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் […]

Loading

செய்திகள்

சர்தார் வல்லபாய் படேல் பிறந்த நாள்: ஜனாதிபதி, பிரதமர் மோடி மரியாதை

புதுடெல்லி, அக். 31– சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். இந்தியாவின் இரும்பு மனிதர் என அழைக்கப்படும் சர்தார் வல்லபபாய் படேல் குஜராத் மாநிலம், ஆனந்த் மாவட்டம், கரம்சாத் என்ற கிராமத்தில் 1875ம் ஆண்டு அக்டோபர் 31–ந்தேதி பிறந்தார். இந்தியாவை ஒரே குடையின் கீழ் கொண்டு வந்தவர் வல்லபாய் படேல். இவரது பிறந்த நாள் 2014ம் ஆண்டு முதல் […]

Loading

செய்திகள்

தமிழகத்தின் அவமான சின்னமாக தி.மு.க. திகழ்கிறது: அண்ணாமலை தாக்கு

சென்னை, அக். 31– தமிழகத்தின் அவமான சின்னமாக தி.மு.க. திகழ்கிறது என்று அண்ணாமலை கூறியுள்ளார். பிரதமர் மோடி பிகார் மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் செய்தபோது, ‘தமிழ்நாட்டில் வேலை செய்யும் உழைக்கும் பிகார் மக்களை தி.மு.க.வினர் துன்புறுத்துகின்றனர்’ என்று பேசியிருந்தார். பிரதமரின் இந்த பேச்சுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது: தி.மு.க.வின் ஊழலும், போலி வேடமும் மக்கள் மத்தியில் அம்பலப்படும்போதெல்லாம், […]

Loading

செய்திகள்

தங்கம் விலை மீண்டும் உயர்வு: இன்று சவரனுக்கு ரூ.1080 அதிகம்

சென்னை, அக். 29– சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் நேற்று ரூ.89 ஆயிரத்துக்கு கீழ் இறங்கிய நிலையில் இன்று சவரனுக்கு ரூ.1080 அதிகரித்து மீண்டும் ஒரு சவரன் ரூ.90 ஆயிரத்தை நெருங்கியது.– கடந்த மாதம் தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை பெரும்பாலான நாட்களில் உயர்ந்து வந்தது. கடந்த 17ம் தேதி ஒரு சவரன் ரூ.97,600 ஆக உயர்ந்து, வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டது. ஓரிரு நாட்களில் சவரன் ரூ.1 லட்சத்தை தொடும் […]

Loading

செய்திகள்

சென்னையில் கால்வாய்களில் தூர்வாரும் பணிகள் தொடர்ந்து நடைபெறுகிறது

சென்னை மாநகராட்சி தகவல் சென்னை, அக்.29– சென்னையில் மழைநீர் வடிகால், கால்வாய்களில் தூர்வாரும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. கடந்த 17–ந் தேதி அன்று காலை 8.30 மணி முதல் இன்று (29–ந் தேதி) காலை 8.30 மணி வரை சராசரியாக சென்னையில் 267.80 மி.மீட்டர் மழை பெய்துள்ளது. நேற்று (28–ந் தேதி) காலை 8.30 மணி முதல் இன்று காலை 8.30 மணி வரை சராசரியாக 8.99 மி.மீட்டர் மழை பெய்துள்ளது. […]

Loading

செய்திகள்

பா.ஜ.க. – எடப்பாடி தப்புக்கணக்கு: ஸ்டாலின் எச்சரிக்கை

சென்னை, அக்.26– மக்கள் வாக்குரிமையை பறித்து தேர்தலில் வெற்றி பெறலாம் என பா.ஜ.க. – எடப்பாடி தப்புக்கணக்கு போடுகிறார்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தி.மு.க. தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள மடலில் கூறியிருப்பதாவது:– 2018-–ம் ஆண்டு கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டபோது, அப்போது ஆட்சியிலிருந்த அண்ணா தி.மு.க.வின் முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள் ஆகியோர் சாவகாசமாகக் களத்திற்கு வந்த நிலையிலும், எதிர்க்கட்சியான தி.மு.க.தான் புயல் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில், பொழுது விடிவதற்கு முன்பாகவே களமிறங்கி […]

Loading