செய்திகள்

தைப்பூச விழாவையொட்டி 57 ரெயில்கள் மேல்மருவத்தூரில் நின்று செல்லும்: ரெயில்வே அறிவிப்பு

சென்னை, நவ.18–- இருமுடி, தைப்பூச விழாவையொட்டி 57 ரெயில்கள் மேல்மருவத்தூர் ரெயில் நிலையத்தில் தற்காலிகமாக நின்று செல்லும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–- இருமுடி மற்றும் தைப்பூச விழாவை முன்னிட்டு பக்தர்கள் வசதிக்காக மேல்மருவத்தூர் ரெயில் நிலையத்தில் 57 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் தற்காலிகமாக ஒரு நிமிடம் நின்று செல்லும். அதன் விவரம் வருமாறு:- * எழும்பூர் – -மதுரை வைகை எக்ஸ்பிரஸ், எழும்பூர் – -மதுரை பாண்டியன் எக்ஸ்பிரஸ், […]

Loading

செய்திகள்

ஆந்திராவில் நக்சல் அமைப்பின் தலைவன் உட்பட 6 மாவோயிஸ்ட்கள் என்கவுன்டரில் சுட்டுக்கொலை

விசாகப்பட்டினம், நவ. 18– ஆந்திரப் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் நக்சல் அமைப்பின் தலைவன் மத்வி ஹித்மா உள்பட 6 மாவோயிஸ்ட்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஆந்திரப் பிரதேசத்தின் அல்லுரி சீதாராமராஜு மாவட்டத்தில் மாவோயிஸ்ட்கள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் போலீசாருடன் இணைந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இன்று காலை 6.30 மணியளவில் அங்கு பதுங்கியிருந்த மாவோயிஸ்ட்கள், பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கியால் சுட்டனர். பாதுகாப்பு படையினரும் தக்க பதிலடி […]

Loading

செய்திகள்

விழுப்புரம் வந்த ஸ்பிக் உர மூட்டைகள்: கலெக்டர் ஆய்வு

விழுப்புரம், நவ. 18– விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கம் இரயில் நிலையத்திற்கு, தூத்துக்குடி இரயில் நிலையத்திலிருந்து சரக்கு இரயில் மூலம் வந்தடைந்த ஸ்பிக் SPIC நிறுவன உர மூட்டைகளை மாவட்ட கலெக்டர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அப்போது அவர் கூறியதாவது: விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்திற்கு சரக்கு ரயில் மூலம் தூத்துக்குடி ரயில் நிலையத்திற்கு ஸ்பிக் உர நிறுவனத்தின் 1299 மெ.டன் உரமூட்டைகள் வந்தடைந்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் தற்போது சம்பா நெல் சாகுபடிக்கான […]

Loading

செய்திகள்

சிதம்பரத்தில் திறந்த நிலை சதுரங்கப் போட்டி: வீனஸ் பள்ளி மாணவர்கள் அசத்தல்

சிதம்பரம், நவ. 18– கடலூர் மாவட்ட சதுரங்க சங்கத்துடன் இணைந்து கேஏஎப்டி செஸ் அகாடமி சார்பில் முதலாவது சிதம்பரம் தாலுகா அளவிலான திறந்தநிலை சதுரங்கப் போட்டி – 2025 சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. தாலுகா அளவிலான சதுரங்கப் போட்டியில் மாவட்டம் முழுவதிலுமிருந்து ஏராளமான இளம் சதுரங்க வீரர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று தங்களது அபாரமான திறமைகளை வெளிப்படுத்தினர். குறிப்பாக, போட்டியை நடத்திய பள்ளி வளாகத்தைச் சேர்ந்த வீனஸ் மெட்ரிக் மேல்நிலை பள்ளியின் மாணவ மாணவிகள் […]

Loading

செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள்: ராணிப்பேட்டை கலெக்டர் வழங்கினார்

ராணிப்பேட்டை, நவ. 18– ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் ஜெ.யு.சந்திரகலா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொது மக்களிடமிருந்தும், மாற்றுத்திறனாளிகளிடமிருந்தும் கோரிக்கை மனுக்களை கலெக்டர் பெற்றுக் கொண்டு குறைகளை கேட்டறிந்தார். மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து வருவாய்த்துறை நிலப்பட்டா குறைகள், பட்டா மாறுதல், இலவச வீட்டு மனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை வேளாண்மைத் துறை, காவல்துறை. ஊரக வளர்ச்சித்துறை, நகராட்சி நிர்வாகங்கள், பேரூராட்சித்துறை, கூட்டுறவு, மின்சாரத்துறை சார்பான குறைகள், மாற்றுத்திறனாளிகள் […]

Loading

செய்திகள்

கள்ளக்குறிச்சியில் 72-வது கூட்டுறவு வார விழா: அமைச்சர் எ.வ.வேலு பங்கேற்பு

கள்ளக்குறிச்சி, நவ. 18– கள்ளக்குறிச்சி தனியார் திருமண மண்டபத்தில் கூட்டுறவுத் துறையின் சார்பில் நடைபெற்ற 72-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவினை பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகன் மற்றும் மாவட்ட அளவிலான சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கு கேடயங்கள் மற்றும் பரிசுகளை வழங்கினார். மாவட்ட கலெக்டர் எம்.எஸ்.பிரசாந்த் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் க.கார்த்திகேயன், சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் தா.உதயசூரியன், கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தே.மலையரசன், உளுந்தூர்பேட்டை […]

Loading

செய்திகள்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1200 சரிவு; ஒரு சவரன் ரூ.91,200

சென்னை: 18  சென்னையில் இன்று (நவ.,18) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,120 குறைந்து ஒரு சவரன் ரூ.91,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 2 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1200 சரிவை கண்டுள்ளது. சர்வதேச நிலவரங்களால், நம் நாட்டில் தங்கம் விலையில் ஏற்ற, இறக்கம் காணப்படுகிறது. தமிழகத்தில் கடந்த சனிக்கிழமை (நவ.,15) ஆபரண தங்கம் கிராம் 11,550 ரூபாய்க்கும், சவரன் 92,400 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 175 ரூபாய்க்கு விற்கப்பட்டது. […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

தங்கம் விலை குறைந்தது : ஒரு சவரன் ரூ.92,320க்கு விற்பனை

சென்னை, நவ. 17: தங்கம் விலை இன்று குறைந்ததையடுத்து ஒரு சவரன் ரூ.92,320க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கடந்த மாதம் (அக்டோபர்) 17ந்தேதி ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்து 200க்கும், ஒரு சவரன் ரூ.97 ஆயிரத்து 600-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதுதான் இதுவரை இல்லாத தங்கம் விலை உச்சமாக பார்க்கப்பட்டது. அதன் பின்னர் விலை அதிகரிக்கும் என சொல்லப்பட்ட நிலையில், விலை குறையத் தொடங்கியது. ஒரு கட்டத்தில் அதாவது கடந்த மாதம் 28ந்தேதி ஒரு சவரன் […]

Loading

செய்திகள்

எடப்பாடி பழனிசாமியுடன் ஜி.கே.வாசன் திடீர் சந்திப்பு

சென்னை, நவ. 17– அரசியல் பரபரப்புக்கிடையே எடப்பாடி பழனிசாமியை ஜி.கே.வாசன் இன்று திடீரென சந்தித்து பேசியது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. தமிழகத்தில் வரும் 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. சட்டசபை தேர்தலை சந்திக்க பிரதான கட்சிகளான திமுக, அதி.முக, ஆகிய கட்சிகளுடன் நடிகர் விஜய்யின் தவெக மற்றும் நாம் தமிழர் கட்சியும் களம் இறங்க தயாராகி வருகின்றன. தற்போது ஆளும் திமுக கூட்டணியில் காங்கிரஸ், […]

Loading

செய்திகள்

20–ந்தேதி மீண்டும் முதல்வராக பதவி ஏற்கிறார் நிதிஷ்குமார்

பாட்னா, நவ. 17– பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தனது ராஜினாமா கடிதத்தை இன்று கவர்னர் ஆரிப் முகமது கானிடம் வழங்கினார். 20–ந்தேதி மீண்டும் முதலமைச்சராக நிதிஷ்குமார் பதவி ஏற்கிறார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பதவி ஏற்பு விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் மற்றும் பா.ஜ.க. ஆளும் மாநில முதலமைச்சர்கள் பங்கேற்கிறார்கள். நிதிஷ்குமார் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் நடந்தது. அதில் 17-வது சட்டசபையை கலைப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து முதலமைச்சர் பதவியை […]

Loading