செய்திகள்

கோவாவில் 77 அடி உயர ராமர் சிலை பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கிறார்

கோவா, நவ. 27– இந்தியாவின் மிக உயரமான (77 அடி) ராமரின் வெண்கல சிலையை நாளை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். கோவாவின் கனகோனாவில் (தெற்கு கோவா) உள்ள ஸ்ரீ சமஸ்தானம் கோகர்ண பரதகலி ஜீவோட்டம் மடத்தில் நிறுவப்பட்ட ஸ்ரீ ராமரின் 77 அடி வெண்கல சிலை, நாளை பிரதிஷ்டை செய்யப்படுகிறது. இதற்கான பிராண பிரதிஷ்டை பூஜைகள் இன்று காலை ஸ்ரீமத் வித்யாதீஷ் தீர்த்த சுவாமியால் துவங்கி நடைபெற்று வருகிறது. நாளை பிற்பகல் பிரதமர் மோடி ராமர் […]

Loading

செய்திகள்

உதயநிதிக்கு மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து..

சென்னை, நவ. 27– முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். தி.மு.க. இளைஞரணி செயலாளரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் இன்று தனது 49-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு அமைச்சர்கள், தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று முகாம் அலுவலகத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது பிறந்தநாளையொட்டி சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது துர்கா ஸ்டாலின் உடனிருந்தார். உதயநிதி […]

Loading

செய்திகள்

உலக மீன்வள தினம்: மீனவர்களுக்கு அனிதா ராதாகிருஷ்ணன் நலத்திட்ட உதவிகள்

சென்னை, நவ.27– உலக மீன்வள தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில்மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். ஆண்டுதோறும் நவம்பர் 21–ம் நாள் ‘உலக மீன்வள தினமாக’ உலகம் முழுவதிலும் கொண்டாடப்படுகிறது. 2025–ம் ஆண்டின் உலக மீன்வள தினம் ”கடல் உணவுப் பொருள் ஏற்றுமதியில் மதிப்புக்கூட்டுதலை வலுப்படுத்துதல்” என்ற கருப்பொருளின் அடிப்படையில் கொண்டாடப்படுகிறது. நேற்று சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இயக்குநர் […]

Loading

செய்திகள்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைவு ஒரு சவரன் ரூ.94,160

சென்னை, நவ. 27– சென்னையில் இன்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து, ஒரு சவரன் ரூ.94,160க்கு விற்பனை ஆகிறது. தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக வரலாறு காணாத அளவுக்கு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்று 22 காரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 640 உயர்ந்து, நீண்ட நாள்களுக்கு பிறகு ஒரு சவரன் மீண்டும் ரூ. 94 ஆயிரத்தை கடந்து ரூ. 94,400-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை சவரனுக்கு […]

Loading

செய்திகள்

உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டி டிசம்பர் 8–ந் தேதி சென்னையில் துணை முதலமைச்சர் உதயநிதி துவக்குகிறார்

சென்னை, நவ. 26– எஸ்டிஏடி உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டி சென்னையில் டிசம்பர் 9-–ந் தேதி தொடங்குகிறது. இதில் 12 நாடுகளின் அணிகள் பங்கேற்கின்றன. வோ்ல்ட் ஸ்குவாஷ், எஸ்ஆா்எஃப்ஐ, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தமிழ்நாடு ஸ்குவாஷ் சங்கம் சாா்பில் சென்னையில் இரண்டாவது முறையாக உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டி நடைபெறுகிறது. ஏற்கெனவே கடந்த 2023-இல் நடைபெற்ற போட்டியில். எகிப்து தங்கமும், மலேசியா வெள்ளியும், இந்தியா வெண்கலமும் வென்றன. தற்போதைய உலகக் கோப்பையில் இந்தியா, ஈரான், ஜப்பான், […]

Loading

செய்திகள்

மக்கள் பிரச்சினைகளுக்காக ஆங்காங்கே போராட்டம் நடத்துங்கள் மாவட்ட செயலாளர்களுக்கு எடப்பாடி அறிவுறுத்தல்

சென்னை, நவ.26: உள்ளூர் மக்கள் பிரச்சினைகளுக்காக ஆங்காங்கே போராட்டம் நடத்துங்கள் என்று மாவட்ட செயலாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தினார். சென்னை அண்ணா தி.மு.க. தலைமை அலுவலகத்தில், எடப்பாடி பழனிசாமி மாவட்ட செயலாளர்களுடன் காணொலி காட்சி மூலமாக ஆலோசனை நடத்தினார். அப்போது சட்டமன்றத் தேர்தல் மற்றும் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப்பணிகள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் எடப்பாடிபழனிசாமி பேசியதாவது:-– அனைத்து மாவட்டங்களிலும், மாவட்ட செயலாளர்கள் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப்பணியை முன்னுரிமை கொடுத்து பணியாற்ற வேண்டும். தங்களது மாவட்டத்தில் […]

Loading

செய்திகள்

ஆருத்ரா கோல்ட் மோசடி: சென்னை உள்பட 15 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

சென்னை, நவ. 26: ஆருத்ரா கோல்ட் நிறுவன மோசடி தொடர்பாக சென்னை, காஞ்சிபுரம் உள்பட 15 இடங்களில் அமலாக்கத் துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ஆருத்ரா கோல்டு நிறுவனம் ரூ. 2438 கோடி மோசடி செய்தது தொடர்பாகப் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மோசடி செய்த பணம் சட்டவிரோத பணப்பரிமாற்றம் வெளிநாட்டில் முதலீடு செய்யப்பட்டதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில் முதல்கட்ட தகவல் தெரிய வந்தது. ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி தொடர்பாக […]

Loading

செய்திகள்

வேப்பேரியில் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் விற்பனை: 2 பேர் கைது

சென்னை, நவ. 26: வேப்பேரி பகுதியில் சட்டவிரோதமாக மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் வைத்திருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். வேப்பேரி காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில் புரசைவாக்கம், தானா தெரு, ஆவின் பூத் அருகே கண்காணித்து, அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்த 2 நபர்களை விசாரணை செய்து, சோதனை செய்தபோது, அவர்கள் மெத்தம்பெட்டமைன் என்ற போதைப்பொருள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அதன்பேரில், வேப்பேரி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து, போதைப்பொருள் வைத்திருந்த சுதர்சன், […]

Loading

செய்திகள்

25 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய மண்ணில் வரலாறு படைத்த தென் ஆப்பிரிக்கா

கவுகாத்தி, நவ. 26– 2-வது டெஸ்டிலும் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா இந்திய அணியை ஒயிட்வாஸ் செய்து 25 ஆண்டுகளுக்கு பின் சாதனை படைத்தது. கவுகாத்தியில் இந்தியா – தென் ஆப்பிரிக்கா இடையேயான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் ஜெயித்து முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா 489 ரன்கள் குவித்தது. செனுரன் முத்துசாமி சதம் (109 ரன்) அடித்தார். பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 83.5 […]

Loading

செய்திகள்

பொதுமக்களிடம் புகார் மனு பெற்றார் சென்னை போலீஸ் கமிஷனர் அருண்

சென்னை, நவ. 26– சென்னை பெருநகர காவல்துறை கமிஷனர் ஆ.அருண் காவல் ஆணையரகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறை தீர் முகாமில் பொதுமக்களின் 18 புகார் மனுக்களை பெற்று விரைந்து நடவடிக்கை எடுக்க காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண், சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் நடைபெற்று வரும் பொதுமக்கள் குறை தீர் முகாமில், காவல் அதிகாரிகள் பொதுமக்களின் புகார் மனுக்களை பெற்று விரைந்து விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு […]

Loading