செய்திகள்

சென்னையில் விடாது கொட்டியது கனமழை

சென்னை: 2 சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக எண்ணூர் 260 மி.மீ., மழைப்பதிவாகி உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் நேற்று நள்ளிரவு முதல் தற்போது வரை நகரின் பல பகுதிகளில் விட்டுவிட்டு மிதமான மழை பெய்கிறது. தாழ்வான பகுதிகள் மற்றும் சுரங்கப்பாதையில் சூழ்ந்துள்ள மழை நீர், சாலைகளில் விழுந்த மரங்களை மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக அகற்றி வருகின்றனர். சுரங்கப்பாதைகளில் தேங்கிய மழை நீர் இரவோடு இரவாக அகற்றப்பட்டது. சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று […]

Loading

செய்திகள்

டிட்வா சுற்றுச்சுழல் தாழ்வு மண்டலம் 6 மணி நேரமாக நகரவில்லை

சென்னையில் மழை தொடரும் எச்சரிக்கை சென்னை, டிசம்பர் 2: டிட்வா புயல் பலவீனமடைந்திருந்தாலும், அதனுடன் தொடர்பான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த நள்ளிரவிலிருந்து சென்னைக்கு கிழக்கே சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் சுமார் 6 மணி நேரத்துக்கும் மேலாக நிலைவாய்ந்த நிலையில் உள்ளது. இந்த மண்டலத்தின் மந்தமான நகர்வு காரணமாக, சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் அடுத்த 24 மணி நேரமும் மழை தீவிரமாக தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மண்டலத்தின் நிலைமாற்றமின்றி […]

Loading

செய்திகள்

ஆந்திராவில் 2 கார்கள் மோதி 2 குழந்தைகள் உள்பட 5 பேர் பலி

அமராவதி:  நவ. 29– ஆந்திராவில் இரண்டு கார்கள் மோதி ஏற்பட்ட விபத்தில், 2 குழந்தைகள் உள்பட 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திராவின் கர்னூல் மாவட்டத்தில் உள்ள கோடேகல் கிராமத்தில், இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், உள்ளூர் மக்கள் உதவியுடன் நீண்ட நேரம் போராடி மீட்பு பணி மேற்கொண்டனர். இந்த விபத்தில், 2 குழந்தைகள் உள்பட 5 பேர் சம்பவ […]

Loading

செய்திகள்

கோவை வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் 13 வீடுகளில் 56 பவுன் நகை, ரூ. 3 லட்சம் கொள்ளை

3 வடமாநில கொள்ளையர்களை சுட்டுப்பிடித்த போலீசார் கோவை, நவ. 29– கோவை- மேட்டுப்பாளையம் சாலை கவுண்டம்பாளையத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் கட்டப்பட்டுள்ள ஹவுசிங் யூனிட்டில் 1,800 குடும்பங்கள் குடியிருந்து வருகின்றனர். இங்கு குடியிருப்பவர்கள் பெரும்பாலும் அரசு ஊழியர்களாக உள்ளனர். 14 மாடிகளை கொண்ட இந்த குடியிருப்பில் நேற்று மர்ம நபர்கள் நுழைந்தனர். இவர்கள் இங்குள்ள குடியிருப்பில் பூட்டியிருந்த வீடுகளை குறிவைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டனர். முதலில் ஒரு வீட்டில் குடியிருப்பவர்கள் தங்களது வீட்டில் இருந்த நகை, […]

Loading

செய்திகள்

4 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மேலும் 5 நாட்கள் தாம்பரம் வரையே இயக்கப்படும்: தெற்கு ரெயில்வே அறிவிப்பு

சென்னை, நவ. 29– எழும்பூர் ரெயில் நிலையத்தில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருவதால் 4 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மேலும் 5 நாட்கள்தாம்பரம் வரையே இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருவதால், சில ரெயில்களின் சேவை தாம்பரத்தில் இருந்தே இயக்கப்பட்டு வருகிறது. தற்போது, பணிகள் முடிவடையாததால் மேலும் 5 நாட்கள் தாம்பரத்தில் இருந்தே இந்த ரெயில்கள் இயக்கப்படும். தாம்பரம் […]

Loading

செய்திகள்

தமிழகத்தை நெருங்கும் ‘டிட்வா’ புயல்.. நாளை கரையை கடக்கும்.

சென்னை, நவம்பர் 29:தமிழகத்தின் தென் மாவட்டங்களை வேகமாக நெருங்கி வரும் ‘டிட்வா’ புயல் நாளை அதிகாலை அல்லது மதியம் கரையைக் கடக்கும் வாய்ப்பு அதிகமுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) இன்று வெளியிட்ட முக்கிய அறிவிப்பில் தெரிவித்துள்ளது. புயலின் தீவிரம் காரணமாக தென் தமிழகம் முழுவதிலும் கனமழை தாழ்நிலப் பகுதிகளில் நீர்மட்ட உயர்வு கடலோர பகுதிகளில் அலைச்சலின் அதிகரிப்பு போன்ற தீவிர வானிலை மாற்றங்கள் பதிவாகின்றன. தற்போது ‘டிட்வா’ குமரி கடல்பகுதியை கடந்தபடி கன்னியாகுமரி, தூத்துக்குடி, […]

Loading

சினிமா செய்திகள்

‘டியூட்’ படத்தில் இளையராஜா பாடல்களை நீக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை, நவ. 28– டியூட் படத்தில் இளையராஜா பாடல்களை நீக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. தீபாவளியையொட்டி வெளியான ‘டியூட்’ திரைப்படத்தில், தனது இசையமைப்பில் வெளியான ‘புது நெல்லு புது நாத்து’ திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த, ‘கருத்த மச்சான்’ மற்றும் ‘பணக்காரன்’ படத்தில் இடம் பெற்றிருந்த ‘100 வருஷம் இந்த மாப்பிள்ளையும்’ ஆகிய பாடல்களை தனது அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறி, இசையமைப்பாளர் இளையராஜா சென்னை ஐகேோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். அப்படத்தில் இடம்பெற்றுள்ள இந்த 2 பாடல்களையும் நீக்க வேண்டும் என்று அதில் […]

Loading

செய்திகள்

தமாகா 12ஆம் ஆண்டு விழா சட்டமன்றத்தில் எங்கள் குரல் ஒலிக்கும் ஜி.கே. வாசன்  பேட்டி

சென்னை, நவ. 28– சட்டமன்றத்தில் தமாகா குரல் நிச்சயம் ஒலிக்கும் என்று ஜி.கே. வாசன் கூறினார். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் 12ம் ஆண்டு விழாவையொட்டி ஆழ்வார்பேட்டை தலைமை அலுவலகத்தில் தலைவர் ஜி.கே.வாசன் எம்பி கொடியேற்றியனார். இந்த பொதுச் செயலாளர்கள் ஜி.ஆர். வெங்கடேஷ், ராஜம் எம்பி நாதன், ராணி கிருஷ்ணன்,துணைத் தலைவர்கள் விடியல் சேகர் சக்தி வடிவேல், முனவர் பாஷா, மாவட்டத் தலைவர்கள் பிஜு சாக்கோ, அருண்குமார், லூயிஸ் மற்றும் நிர்வாகிகள் கே ஆர் டி ரமேஷ், […]

Loading

செய்திகள்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 அதிகரிப்பு: 95 ஆயிரத்தை நெருங்குகிறது

சென்னை, நவ. 28– சென்னையில் இன்று 22 காரட் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 அதிகரித்து, ஒரு சவரன் ரூ. 94,720க்கு விற்பனை ஆகிறது. தங்கம் விலையில் தொடர்ந்து ஏற்ற, இறக்க நிலை காணப்படுகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம் ஆபரண தங்கம், கிராம் 11,800 ரூபாய்க்கும், சவரன், 94,400 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 176 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நேற்று தங்கம் விலை கிராமுக்கு, 30 ரூபாய் குறைந்து, 11,770 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 240 […]

Loading

செய்திகள்

விஜய் முன்னிலையில் த.வெ.க.வில் இணைந்தார் கே.ஏ. செங்கோட்டையன்

சென்னை, நவ. 27– அண்ணா தி.மு.க. விலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் இன்று விஜய் முன்னிலையில் த.வெ.க.வில் இணைந்தார். அவருக்கு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டது.அண்ணா தி.மு.க. மூத்த நிர்வாகிகளில் ஒருவராக இருந்த கே.ஏ.செங்கோட்டையன், 1977 ஆம் ஆண்டு தமிழக முதல்வராக எம்ஜிஆர் பதவியேற்ற போது, முதல்முறையாக கோபிசெட்டிபாளையம் தொகுதியில் போட்டியிட்டு, சட்டப்பேரவை உறுப்பினர் ஆனார் செங்கோட்டையன். எம்ஜிஆரின் விசுவாசியாகவும், தொடர்ந்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் விசுவாசியாகவும் அறியப்பட்ட செங்கோட்டையன், கோபிசெட்டிபாளையம் தொகுதியிலிருந்து மட்டும் […]

Loading