செய்திகள்

மண்ணடி மல்லிகேஸ்வரர் கோயிலுக்கு ரூ.55 லட்சத்தில் புதிய அன்னதானக் கூடம்: அமைச்சர் சேகர்பாபு திறந்தார்

சென்னை, ஜன. 22– சென்னை மண்ணடியில் அமைந்துள்ள சுமார் 700 ஆண்டுகள் பழமையான மல்லிகேஸ்வரர் கோயிலுக்கு ரூ.54.65 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய அன்னதானக் கூடத்தை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பக்தர்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். முதலமைச்சர் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற நாள்முதல் ரூ.131 கோடி மதிப்பீட்டில் 147 புதிய அன்னதானக் கூடங்கள் கட்டுவதற்கு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, இதுவரை 35 அன்னதானக் கூடங்கள் பக்தர்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளன. இந்நிகழ்ச்சியில் மேயர் ஆர்.பிரியா, இணை ஆணையர் ஜ.முல்லை, மாநகராட்சி […]

Loading

செய்திகள்

தங்கம் விலை ஒரே நாளில் ரூ.1,720 குறைந்தது: சவரன் ரூ.1,13,600க்கு விற்பனை

சென்னை, ஜன. 22– சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,720 குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 600க்கு விற்பனை செய்யப்படுகிறது.கடந்த 13ந் தேதி ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்தை கடந்த நிலையில், நேற்று முன்தினம் ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்தையும் தாண்டிவிட்டது. நேற்று காலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.350-ம், சவரனுக்கு ரூ.2,800-ம் அதிகரித்திருந்த நிலையில், பிற்பகலில் மேலும் கிராமுக்கு ரூ.165-ம், சவரனுக்கு ரூ.1,320-ம் […]

Loading

செய்திகள்

நெல்லூரில் ஆம்னி பஸ் தீப்பிடித்து எரிந்ததில் 3 பேர் பலி

நெல்லூர், ஜன. 22– ஆந்திரம் மாநிலம் நெல்லூரில் ஆம்னி பஸ் தீப்பிடித்து எரிந்த விபத்தில் 3 பேர் பலியாகினர். ஆந்திரம் மாநிலம் நெல்லூரில் இருந்து ஐதராபாத் சென்று கொண்டிருந்த தனியார் சொகுசு பேருந்து நந்தியால் மாவட்டம் சிரிவெள்ளமெட்டா அருகே இன்று அதிகாலை 1.30 மணியளவில் சென்றபோது, பேருந்தின் டயர் வெடித்ததால், கட்டுப்பாட்டை இழந்த பேருந்து எதிரே வந்த லாரி மீது மோதியதால் பேருந்து தீப்பிடித்து எரிந்தது. இந்தச் சம்பவத்தின் போது பேருந்தில் 36 பயணிகள் இருந்ததாகத் கூறப்படுகிறது. […]

Loading

செய்திகள்

சட்டப்பேரவையில் இருந்து அண்ணா தி.மு.க. எம்எல்ஏக்கள் வெளிநடப்பு

சென்னை, ஜன. 22– தமிழக சட்டசபையின் 3-ம் நாள் கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியது. இதைத் தொடர்ந்து கேள்வி நேரத்தில் உறுப்பினர்கள் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறைகளின் அமைச்சர்கள் பதில் அளித்தனர். இந்த நிலையில் கறிக்கோழி பிரச்சினை தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்றும் அண்ணா திமுக எம்எல்ஏக்கள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். நேரமில்லா நேரத்தில் இதுகுறித்து விவாதிக்க நேரம் கேட்டனர். மேலும் இதனை உடனே விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் கூறினர். நேரமில்லா […]

Loading

செய்திகள்

தி.மு.க.வை வீட்டுக்கு அனுப்புவோம்: எடப்பாடி – பியூஷ்கோயல் உறுதி

சென்னை, ஜன. 22– அ.தி.மு.க. – பா.ஜ.க. வலுவான கூட்டணி; தமிழகத்தில் ஊழல் தி.மு.க. ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம் என்று பியூஸ் கோயல், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக தெரிவித்தனர். அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சென்னை பசுமைவழி இல்லத்தில், இன்று தமிழக பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளரும் மத்திய அமைச்சருமான பியூஷ் கோயலுக்கு காலை விருந்து அளிக்கப்பட்டது. இதில் எல்.முருகன், நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், எச்.ராஜா, பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பாஜக தலைவர்களும் பங்கேற்றனர். […]

Loading

செய்திகள்

மதுராந்தகத்தில் நாளை மோடி பொதுக்கூட்டம்: எடப்பாடி, கூட்டணி தலைவர்கள் பங்கேற்பு மேடையை பியூஸ்கோயல் பார்த்தார்

சென்னை, ஜன. 22– பிரதமர் மோடி மதுராந்தகத்தில் பிரமாண்ட பொதுக் கூட்டத்துக்கு நாளை பேசுகிறார். பிரதமரின் கூட்டத்திற்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. பிரதமர் பங்கேற்கும் கூட்டத்துக்காக 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். பிரதமரின் வருகையையொட்டி நேற்று காலையில் இருந்தே டெல்லியில் இருந்து சென்னை வந்துள்ள மத்திய பாதுகாப்பு படை போலீசார் பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தை தங்களது முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். பொதுக் கூட்டம் நடைபெறும் இடத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நாளை […]

Loading

செய்திகள்

ஆசிரியர்கள், மாணவர்களின் கற்றல்-–கற்பித்தல் செயல்பாடுகளை மேம்படுத்தும் மாநில வள மையம்: அன்பில் மகேஷ் திறந்தார்

சென்னை, ஜன.22- சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி நிதியுதவியுடன் மாநில வள மையம் புதிதாக அமைக்கப்பட்டது. இதனை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று திறந்து வைத்தார். அப்போது பள்ளிக்கல்வித்துறை கூடுதல் தலைமை செயலாளர் டாக்டர் பி.சந்திரமோகன் உடன் இருந்தார். புதிதாக திறக்கப்பட்ட இந்த வள மையத்தில், வளர்ந்துவரும் கல்வி தொழில்நுட்பவியலின் நவீன யுக்திகளை பயன்படுத்தி கற்றல்-கற்பித்தலை மேம்படுத்தும் வகையில், ஆசிரியர்கள் […]

Loading

செய்திகள்

மாற்றுத்திறனாளி மாணவர்கள் சாதனை படைக்கவேண்டும்: முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு

சென்னை, ஜன.22- சிறுமலர் பார்வை மற்றும் செவித்திறன் குறைபாடுடையோர் மேல்நிலைப்பள்ளியின் நூற்றாண்டு விழாவில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் ஏதாவது ஒரு துறையில் சாதனை படைக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். சென்னை அண்ணா சாலையில் உள்ள சிறுமலர் பார்வை மற்றும் செவித்திறன் குறைபாடுடையோர் மேல்நிலைப் பள்ளியின் நூற்றாண்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- எந்த ஒரு நிறுவனமும், நூற்றாண்டு நிலைத்து நிற்பது என்பது மிகப்பெரும் […]

Loading

செய்திகள்

அரசு கலை – அறிவியல் கல்லூரிகளின் ஆய்வகங்களை மேம்படுத்த ரூ.19.18 கோடி நிதி ஒப்பளிப்பு ஆணை அமைச்சர் கோவி. செழியன் வழங்கினார்

சென்னை, ஜன. 22– சென்னை கல்லூரிக் கல்வி இயக்ககத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் 112 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் ஆய்வகங்களை மேம்படுத்துவதற்கு ரூ.19.18 கோடி நிதி ஒப்பளிப்புக்கான ஆணையினை வழங்கினார். இன்று இந்தியாவிலேயே உயர்கல்வியில் மாணவர் சேர்க்கையில் முதலிடத்தில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது. இக்கல்வி ஆண்டின் (2025-–2026), மாணவர் சேர்க்கையில், புதிதாக 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதிய இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அரசு கல்லூரி, அரசு உதவி பெறும் கல்லூரி, […]

Loading

செய்திகள்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்காளர் அளித்த வாக்கினை சரிபார்க்கும் கருவி செயல்முறை விளக்க மையங்கள்

சென்னை, ஜன. 22– இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, நடைபெறவுள்ள 2026 தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலை முன்னிட்டு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் தாம் அளித்த வாக்கினை சரிபார்க்கும் கருவியினை பயன்படுத்துவது குறித்த செயல்முறை விளக்க மையங்கள் நேற்று (21–ந் தேதி) முதல் அமைக்கப்பட்டுள்ளன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் எவ்வாறு வாக்களிப்பது மற்றும் வாக்காளர் தாம் அளித்த வாக்கினை சரிபார்க்கும் கருவிகளில் வாக்களித்த விவரங்களை எவ்வாறு தெரிந்து கொள்வது என்பது குறித்து பொதுமக்கள் அறிந்து […]

Loading