செய்திகள்

ரூ.1 லட்சத்தை நெருங்கிய தங்கம் விலை

சென்னை, டிச. 15: தங்கம் விலை சவரன் ரூ. 1 லட்சத்தை நெருங்கியது. தங்கம் விலை மீண்டும் கட்டுக்கடங்காத வகையில் உயர்ந்து வருகிறது. இந்த அதிரடி விலை உயர்வுக்கு, அமெரிக்க மத்திய பெடரல் வங்கி வட்டி விகிதத்தை குறைத்ததுதான் முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. பொதுவாக வட்டி விகிதம் குறைப்பதால், முதலீட்டாளர்கள் அரசு பத்திரங்கள், சேமிப்புகளில் முதலீடு செய்வதை குறைத்து, தங்கத்தின் மீது தங்கள் கவனத்தை அதிகம் திருப்புவார்கள். அப்படியாக முதலீட்டாளர்கள் தங்கத்தில் அதிக முதலீடு செய்வதால் அதன் […]

Loading

செய்திகள்

ஜனவரி 13–ந் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி:

விவசாயிகளுடன் பொங்கல் பண்டிகை கொண்டாடத் திட்டம் புதுடெல்லி, டிச. 14– பிரதமர் மோடி தமிழக விவசாயிகளுடன் பொங்கல் பண்டிகை கொண்டாடுவதற்காக தமிழகம் வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. பிரசாரம், பொதுக்கூட்டம், நலத்திட்டப்பணிகள், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை, கட்சி கட்டமைப்பை மேலும் வலுப்படுத்துதல் என பல்வேறு நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் […]

Loading

செய்திகள்

பெசன்ட் நகர் கடற்கரையில் பெண்கள் உரிமை, பாதுகாப்பு விழிப்புர்ணவு நடைபயணம்

மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரன் துவக்கி வைத்தார் சென்னை, டிச. 14– பெண்கள் உரிமை மற்றும் பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வினை ஏற்படுத்திடும் வகையில், பெசன்ட் நகர் கடற்கரையில் அமைக்கப்பட்ட மணல் சிற்பம் மற்றும் விழிப்புணர்வு நடைபயணத்தை மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன் தொடங்கி வைத்தார். சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் பெண்கள், சிறுமிகள் மற்றும் அனைத்து பாலினங்களும் தன்னம்பிக்கை, மரியாதை மற்றும் பாதுகாப்புடன் நகரத்தில் வாழும் சூழலை உருவாக்குவதில் சென்னை மாநகராட்சி தொடர்ச்சியான பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. இதன் […]

Loading

செய்திகள்

பெரியமேடு பகுதியில் செல்போன் திருடன் கைது

சென்னை, டிச. 14– பெரியமேடு பகுதியில் பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த நபரின் செல்போனை பறித்துக் கொண்டு தப்பி ஓடிய வடமாநில ஆசாமியை போலீசார் கைது செய்தனர். மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த முக்தார் ஆலம், நேற்று ரெயில் மூலம் சென்னை சென்டிரல் இரயில் நிலையம் வந்திறங்கி, புழல் செல்வதற்காக பார்க் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அருகில் வந்த ஒரு நபர் திடீரென முக்தார் ஆலம் பாக்கெட்டில் வைத்திருந்த விவோ செல்போனை திருடிக் கொண்டு தப்பிச் சென்றுவிட்டார். […]

Loading

சிறுகதை பாண்டிய கட்டபொம்மன்

கோயில் மணிக்காக காத்திருந்த கட்டபொம்மன்

கட்டபொம்மன் – 7 கட்டபொம்மன் அரண்மனைக்குள்ளேயே அவரது குலதெய்வமான ஜக்கமாள் கோயில் உள்ளது. ஜக்கம்மாளையும் முருகனையும் விரும்பி வணங்குவார். திருச்செந்தூர் முருகன் கோயிலில் காலை பூஜை முடிந்தவுடன் தான் கட்டபொம்மன் காலை உணவில் கை வைப்பார். காலை பூஜை முடியும் நேரத்தை அறிந்து கொள்ள மணி மண்டபம் அமைத்து இருந்தார் கட்டபொம்மன். திருச்செந்தூர் கோயில் தொடங்கி பாஞ்சாலங்குறிச்சி வரை வழிநெடுக குறிப்பிட்ட தூரத்தில் நகரா மண்டபம் அமைத்து இருந்தார். (நகரா என்பது ஒரு இசைக்கருவி) காலை பூஜை […]

Loading

கதைகள் சிறுகதை

சிறுகதை … லட்சுமண சாமி சாலை..! .. ராஜா செல்லமுத்து

‘லட்சுமணசாமி சாலை. கே.கே நகரில் உள்ள ஒரு முக்கியமான சாலை. கலைஞர் கருணாநிதி நகர் எப்படி வந்திருக்கும்? எதற்காக இந்தப் பகுதியின் ஒரு சாலைக்கு லட்சுமணசாமி சாலை என்று பெயர் வைத்தார்கள்? ‘என்று யோசனை செய்தான், அருள். ‘1970, 1980–ம் ஆண்டு முற்பகுதியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் முயற்சியால் திட்டமிட்ட பகுதியாக உருவாக்கப்பட்டது கலைஞர் கருணாநிதி நகர். இந்தப் பகுதிக்கு அப்போதைய தமிழக முதல்வராக இருந்த மு. கருணாநிதி நினைவாக பெயரிடப்பட்டது. 1971 ஆம் ஆண்டு […]

Loading

செய்திகள்

தொழிலதிபரை ஏமாற்றி ரூ. 40 லட்சம் மோசடி: அண்ணன்- – தம்பி உள்பட 3 பேர் கைது

சென்னை, டிச. 14– தொழிலதிபரை ஏமாற்றி ரூ. 40 லட்சம் மோசடி செய்த அண்ணன் – -தம்பி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை, நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த ஆனந்தராஜ், தொழிலதிபர். இவர் தியாகராயநகர் ராஜா பாதர் தெருவில் உள்ள ஒரு டீக்கடையில் கடந்த 9-ந் தேதியன்று நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர், தாங்கள் ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபடுவதாகவும், தங்களது தொழிலில் ரூ.40 லட்சம் முதலீடு செய்தால் அடுத்த 5 மணி […]

Loading

செய்திகள்

234 தொகுதிகளுமே எங்கள் இலக்கு: பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

சென்னை, டிச. 13– கூட்டணி குறித்த அறிவிப்பு ஜனவரி 9ம் தேதி தெரிவிக்கப்படும் என்றும் பிரேமலதா விஜயகாந்த் கூறினார். தமிழக அரசியல் களத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்குவதையொட்டி கூட்டணி குறித்த விவாதங்கள் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டன. அதிமுக, பாஜக கூட்டணி உறுதியாகிவிட்ட நிலையில் இரண்டு கட்சிகளும் தேர்தலுக்கான வியூகங்களை வகுக்கக் களமிறங்கிவிட்டனர். திமுக, காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்டுகள் கூட்டணியில் எந்த சலசலப்பும் வரவில்லை. இதற்கிடையில் தேமுதிக, பாமக யாருடன் கூட்டணி என்பதுதான் இன்னும் உறுதியாகாமல் இழுபறியாக இருக்கிறது. […]

Loading

செய்திகள்

2001 பார்லிமெண்ட் தாக்குதலில் உயிரிழந்த பாதுகாப்பு படை வீரர்கள் படத்திற்கு பிரதமர், துணை ஜனாதிபதி மலர் தூவி மரியாதை

புதுடெல்லி, டிச. 13– கடந்த 2001–ம் ஆண்டு பார்லிமெண்டில் நடந்த தாக்குதலில் உயிரிழந்த பாதுகாப்பு படையினர் படத்திற்கு, இன்று பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். கடந்த 2001ம் ஆண்டு, டிசம்பர் 13–ந்தேதி பார்லிமெண்ட் வளாகத்துக்குள் தீவிரவாதிகள் நுழைந்து தாக்குதல் நடத்த முயன்றனர். அந்த சதி திட்டத்தை பாதுகாப்புப் படையினர் முறியடித்தனர். இந்த சம்பவத்தில் பாதுகாப்பு படையினர் 8 பேர் மற்றும் ஒரு தோட்டக்காரர் என மொத்தம் 9 பேர் […]

Loading

செய்திகள்

இண்டிகோ விமான சேவை பாதிப்பு 4 அதிகாரிகள் சஸ்பெண்ட்

டெல்லி, டிச. 13– இண்டிகோ விமான சேவை பாதிப்பைத் தொடர்ந்து அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து விமான போக்குவரத்து இயக்குனரகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. விமான விபத்துக்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை தவிர்க்க டெல்லி ஐகோர்ட் உத்தரவின் அடிப்படையில் விமான நிறுவனங்களுக்கு சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் புதிய விதிகளை வகுத்தது. புதிய விதிகளை அமல்படுத்த 2 ஆண்டுகள் அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால், சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் வகுத்த புதிய விதிகளை இண்டிகோ அமல்படுத்தவில்லை. குறிப்பாக, குறைவான […]

Loading