செய்திகள்

நாங்கள் அம்மா வளர்த்த பிள்ளைகள் கருத்துவேறுபாடுகளை மறந்துவிட்டோம்

மதுராந்தகம், ஜனவரி 24: மதுராந்தகத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தில் அண்ணா திமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் கலந்துகொண்டு செய்தியாளர்களை சந்தித்து கருத்து தெரிவித்தனர். எடப்பாடி பழனிசாமி, “நாங்கள் அம்மா வளர்த்த பிள்ளைகள். கடந்த கருத்து வேறுபாடுகளை மறந்து இனி ஒன்றாக செயல்படுகிறோம். தமிழகத்தில் ஊழல், குடும்ப ஆட்சி, சீரழிவு நிறைந்த நிர்வாகத்திற்கு முடிவு காணும் […]

Loading

செய்திகள்

சட்டசபையில் அண்ணா தி.மு.க. பங்கேற்கவில்லை

சென்னை, ஜன. 24– சட்டசபையில் இன்று கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான முதலமைச்சரின் பதிலுரையில் அண்ணா தி.மு.க. உறுப்பினர்கள் யாரும் பங்கேற்கவில்லை. இன்று காலை 9.30 மணிக்கு சபை கூடியது. மதிப்பீட்டுக் குழுவின் அறிக்கையை அதன் தலைவர் எஸ். காந்திராஜன் சமர்ப்பித்தார். அதே போல் அரசு உறுதிமொழிக் குழுவின் அறிக்கையை அதன் தலைவர் தி.வேல்முருகன் சமர்ப்பித்தார். பின்னர் அரசினர் சட்டமுன் வடிவுகள் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து கவர்னரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் […]

Loading

செய்திகள்

தமிழக சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

சென்னை, ஜன. 24– தமிழக சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார். தமிழக சட்டசபை கடந்த 20-ந்தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது. ஆனால், தமிழ்த்தாய் வாழ்த்துக்கு பிறகு தேசிய கீதம் பாடப்படவில்லை என்று குற்றம்சாட்டி தனது உரையை புறக்கணித்து கவர்னர் ஆர்.என்.ரவி வெளியேறினார். அதன்பிறகு, கவர்னரின் தமிழாக்க உரையை சபாநாயகர் மு.அப்பாவு வாசித்தார். இது அவைக்குறிப்பில் ஏற்றப்பட்டது. அடுத்த நாள் (21-ந்தேதி) சேந்தமங்கலம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. பொன்னுசாமி மறைவுக்கு இரங்கல் தீர்மானம் கொண்டுவந்து அவை […]

Loading

செய்திகள்

தி.மு.க. ஆட்சி முடிவுக்கு கவுண்ட் டவுன் துவங்கிவிட்டது: பிரதமர் மோடி பேச்சு

* தமிழ், தமிழர்களின் எதிரி தி.மு.க. * போதைப்பொருள் கும்பலிடம் ஆட்சி ஒப்படைப்பு மதுராந்தகத்தில் நடந்த பிரமாண்ட கூட்டம் தமிழக வளர்ச்சிக்கு இரட்டை என்ஜின் அரசு அவசியம் சென்னை, ஜன.24- தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரசார பொதுக்கூட்டம் மதுராந்தகத்தில் நடந்தது. இதில் பேசிய பிரதமர் மோடி, தமிழகத்தின் வளர்ச்சிக்கு இரட்டை என்ஜின் அரசு அவசியம் என்று கூறினார். தமிழகத்தில் தேசிய ஜனநாய கூட்டணியின் பலத்தை காட்ட, கூட்டணி தலைவர்களை ஒரே மேடையில் பங்கேற்க செய்வதற்கும், அதில் பிரதமர் […]

Loading

செய்திகள்

பூவிருந்தவல்லி -– வடபழனி மெட்ரோ வழித்தடத்தில் இறுதிக்கட்ட ஆய்வு

சென்னை, ஜன. 24– பூவிருந்தவல்லி – வடபழனி வழித்தடத்தில் மெட்ரோ ரயிலை இயக்குவதற்கான இறுதிக்கட்ட ஆய்வு அடுத்த மாதம் நடக்கப்படும் என்று ரயில்வே பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. சென்னையில் மெட்ரோ ரயில் இரண்டாவது கட்ட திட்டத்தில் மாதவரம் – சிறுசேரி சிப்காட், பூவிருந்தவல்லி – கலங்கரை விளக்கம், மாதவரம் – சோழிங்கநல்லூர் ஆகிய 3 வழித்தடங்களில் பணிகள் நடைபெற்று வருகின்றனர். இதில் பூவிருந்தவல்லி முதல் வடபழனி வரையிலான ஒரு பகுதியில் மெட்ரோ ரயில் சேவையை விரைவாக தொடங்க […]

Loading

செய்திகள்

எந்த நேரத்திலும், எதுவும் மாறும்: பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

சென்னை, ஜன. 24– எந்த நேரத்திலும், எதுவும் மாறும். தேர்தலுக்கு இன்னும் நிறைய நேரம் இருக்கிறது என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார். தமிழக சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது பற்றி தே.மு.தி.க. இன்னும் முடிவெடுக்காமல் உள்ளது. இது தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்திடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர் ஆளும் கட்சியும், ஆண்ட கட்சியும் கூட்டணியை இறுதி செய்துள்ளன. தே.மு.தி.க. கூட்டணி முடிவை எடுப்பதில் ஏன் தாமதமாகிறது? என்று நிருபர்கள் […]

Loading

மக்கள் குரல் பார்வையில்

விஜய்யின் ‘விசில்’ தமிழ்நாட்டு அரசியலில் புதிய சங்கநாதம்?

தமிழ்நாடு அரசியலின் மேடையில் சினிமாவும் அரசியலும் பின்னிப்பிணைந்து இருக்க, புதிய அத்தியாயம் துவக்கும் நடிகர் விஜய் தலைமையிலான த.வெ.க கட்சிக்கு, ‘விசில்’ சின்னம் ஒதுக்கப்பட்டிருப்பது அவரது ரசிகர்களால், ஒரு “மாஸ்டர் ஸ்ட்ரோக்” என மகிழ்கின்றனர். தேர்தல் ஆணையத்திற்கு அது ஒரு சின்னம், அவர்கள் பட்டியலில் உள்ள ஓர் இலவச அடையாளம். “Whistle Podu” என்ற கீதத்துடன் இணைந்த ரசிகர் வெறியாட்டம், விஜய் கட்சியினர் மத்தியில் துவங்கி விட்டது! திரையரங்கின் முதல் நாள், முதல் காட்சியின் மகிழ்ச்சி குதூகலம் […]

Loading

செய்திகள்

திருவனந்தபுரம் – தாம்பரம் உட்பட 3 ‘‘அம்ருத் பாரத்’’ ரெயில்கள்: மோடி தொடங்கி வைத்தார்

திருவனந்தபுரம், ஜன. 23– கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, அம்ருத் பாரத் ரெயில் சேவைகளை கொடியசைத்து தொடக்கிவைத்தார். கேரளாவில் சமீபத்தில் நடந்த நடந்த உள்ளாட்சி தேர்தலில் திருவனந்தபுரம் மாநகராட்சியை பாரதீய ஜனதா கட்சி (பா.ஜ.க.) முதன் முறையாக கைப்பற்றியது. அந்த வரலாற்று வெற்றியை தொடர்ந்து 45 நாட்களுக்குள் பிரதமர் மோடி கேரளா வருவார் என்று கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி மோடி இன்று கேரளாவுக்கு வந்தார். அவர் டெல்லியில் இருந்து தனி […]

Loading

செய்திகள்

ஜம்மு காஷ்மீர் வாகன விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு சட்டசபையில் இரங்கல்

சென்னை, ஜன. 23– முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பவானி முருகன் மறைவுக்கு சட்டமன்றத்தில் இன்று இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டு உறுப்பினர்கள் மவுன அஞ்சலி செலுத்தினர். மேலும் ஜம்மு காஷ்மீர் வாகன விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. தமிழக சட்டசபையின் 4-ம் நாள் கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியது. இதைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில் வாகன விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு தமிழக சட்டசபையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இரங்கல் தீர்மானத்தை வாசித்த பேரவைத் தலைவர் […]

Loading

செய்திகள்

பல்கலைக்கழகங்களில் 50% ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்பாமலே இருப்பதா? தி.மு.க. அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம்

சென்னை, ஜன.23– ‘‘தமிழகத்தில் உள்ள 21 பல்கலைக்கழகங்களில் 50% ஆசிரியர் காலி பணியிடங்கள், ஆசிரியர்களை நியமிக்க திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததற்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பாட்டாளி மக்கள் கட்சி (பா.ம.க.) தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– ‘‘தமிழ்நாட்டில் உள்ள 21 மாநில பல்கலைக்கழகங்களில் சுமார் 50% முதல் 65% வரை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்படி பெறப்பட்ட தகவல்கள் வாயிலாக தெரிய வந்துள்ளது. […]

Loading