செய்திகள்

உயிருக்கு அச்சுருத்தல்: வீடியோ எடுத்தவர் பேட்டி

சிவகங்கை, ஜூலை 3– இளைஞர் அஜித்குமார் மரணத்தில் ‘சாட்சிகள் அனைவரும் அச்சத்தில் உள்ளதாக வீடியோ எடுத்த சத்தீஸ்வரன் கூறியுள்ளார். சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த மடப்புரம் காளியம்மன் கோவிலில் காவலாளியாக பணியாற்றியவர் அஜித்குமார் (வயது 28). காரில் இருந்த நகைகள் மாயமான புகார் தொடர்பாக அவரை போலீஸ் விசாரணைக்கு அழைத்து சென்றபோது, தனிப்படை போலீசார் தாக்கியதில் கடந்த 29-ந்தேதி உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சூழலில், திருப்புவனம் இளைஞர் மரணம் வழக்கில் […]

Loading

செய்திகள்

தொடர்ந்து உயரும் தங்கம் விலை: இன்று சவரனுக்கு ரூ.320 உயர்வு

சென்னை, ஜூலை 3– சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 72 ஆயிரத்து 840 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. தொடர்ந்து, படிப்படியாக உயர்ந்த தங்கம் விலை அண்மையில் ரூ.74 ஆயிரத்தை கடந்து வரலாற்றில் புதிய உச்சத்தை தொட்டது. இதனையடுத்து, தங்கம் விலை கடந்த ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது. சவரனுக்கு ரூ.320 உயர்வு அந்த வகையில், […]

Loading

செய்திகள்

போலீசார் தாக்கியதில் உயிரிழந்த காவலாளியின் தாயாருக்கு எடப்பாடி பழனிசாமி ஆறுதல்

மதுரை, ஜூலை 3–- போலீசார் தாக்கியதில் உயிரிழந்த காவலாளி அஜித்குமாரின் தாயாரிடம் தொலைபேசியில் பேசிய எடப்பாடி பழனிசாமி ஆறுதல் கூறினார். நீதி கிடைக்க துணை நிற்போம் எனவும் உறுதி அளித்தார். சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரத்தை சேர்ந்த அஜித்குமார் (வயது 27) என்ற கோவில் காவலாளி, காரில் இருந்த நகைகள் மாயம் குறித்த புகாரில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவரை போலீசார் அடித்துக்கொன்ற சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், அண்ணா தி.மு.க. […]

Loading

செய்திகள்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21 வரை நடக்கும்

டெல்லி, ஜூலை 3– நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21 ந்தேதி முதல் ஆகஸ்ட் 21 ந்தேதி வரை நடைபெறும் என குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அறிவித்துள்ளார். பொதுவாக, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் அமர்வு, நாட்டின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார சூழலில் கவனம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பொருளாதாரம், உள்கட்டமைப்பு மற்றும் சமூக நலன் தொடர்பான மசோதாக்களையும் முன்னிலைப்படுத்தும். சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 13 மற்றும் 14 ந் தேதிகளில் கூட்டத்தொடர் […]

Loading

செய்திகள்

அரசு அதிகாரிக்கு கொலை மிரட்டல்: தவெக பெண் நிர்வாகி கைது

திண்டுக்கல், ஜூலை 3– அரசு அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தவெக பெண் நிர்வாகி கைது செய்யப்பட்டார். திண்டுக்கல்லை சேர்ந்தவர் முருகானந்தம் (வயது 56). இவர், பழனியில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தில் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். திண்டுக்கல் சின்ன அய்யங்குளம் பகுதியை சேர்ந்த வடிவேல் மனைவி ரீத்தா (46). இவர், தமிழக வெற்றிக் கழக நிர்வாகியாக உள்ளார்.முருகானந்தத்துக்கும், ரீத்தாவுக்கும் இடையே பணம் கொடுக்கல்-வாங்கல் தொடர்பாக ஏற்கனவே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் முருகானந்தத்தை […]

Loading

செய்திகள்

அருளை நீக்க அன்புமணிக்கு அதிகாரம் இல்லை: ராமதாஸ் திட்டவட்டம்

தைலாபுரம், ஜூலை 3– அருள் எம்.எல்.ஏ.வை நீக்கும் அதிகாரம் அன்புமணிக்கு இல்லை என்று ராமதாஸ் கூறியுள்ளார். பா.ம.க.வில் தந்தை- மகனுக்கு இடையே அதிகாரம் தொடர்பான மோதல் போக்கு நிலவி வருகிறது. இதனால் நிர்வாகிகள் யார் பக்கம் செல்வது என்று தெரியாமல் தவித்து வருகின்றனர். இதனிடையே, ராமதாசுக்கு ஆதரவாக பேசிய அருள் எம்.எல்.ஏ.வை கட்சியில் இருந்து நீக்குவதாக நேற்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம், தைலாபுரத்தில் நிருபர்கள் சந்திப்பில் ராமதாஸ் கூறியதாவது: பா.ம.க., நிர்வாகிகளை […]

Loading

செய்திகள்

திருப்புவனம் அஜித்குமார் மரணம்: 2-வது நாளாக நீதிபதி விசாரணை

மதுரை, ஜூலை 3– திருப்புவனம் அஜித்குமார் மரணம் தொடர்பாக 2வது நாளாக நீதிபதி விசாரணை நடத்தினார். சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமார் (வயது 27), நகை திருட்டு வழக்கு தொடர்பாக குற்றப்பிரிவு தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் உயிரிழந்தார். தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு 5 போலீசார் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த 2 நீதிபதிகள் கொண்ட மதுரை ஐகோர்ட்டு அமர்வு, […]

Loading

செய்திகள்

1 கோடியே 60 லட்சம் அமெரிக்க மக்களை அபாயத்தில் தள்ளும் டிரம்ப்: ஒபாமா எதிர்ப்பு

வாஷிங்டன், ஜூலை 3– மெடிக்எய்டு திட்டத்திற்கான நிதியை, குறைக்கும் வகையிலான மசோதாவை டிரம்ப் நிர்வாகம் நிறைவேறினால், 1 கோடியே 60 லட்சம் அமெரிக்கர்கள் அபாயத்தில் தள்ளப்படுவார்கள் என்று முன்னாள் அதிபர் ஒபாமா குற்றம்சாட்டியுள்ளார். டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் கொண்டு வந்துள்ள புதிய மசோதா, மெடிக்எய்டு (Medicaid) எனப்படும் மருத்துவ உதவி திட்டத்திற்கு அரசு வழங்கும் நிதியைக் குறைப்பதோடு, முந்தைய ஒபாமா ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மலிவு விலை பராமரிப்புச் சட்டத்தை (Affordable Care Act) பலவீனப்படுத்துவதாக உள்ளது. எனவே, […]

Loading

செய்திகள்

தேனி காவல் நிலையத்தில் விசாரணை கைதியை தாக்கும் போலீசார்:

தேனி, ஜூலை 2– தேனி காவல் நிலையத்தில் விசாரணை கைதி மீது போலீசார் சரமாரியாக தாக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சிவகங்கை மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு வந்த மதுரை திருமங்கலம் டாக்டர் நிகிதாவின் காரில் 9.5 பவுன் திருடப்பட்ட வழக்கில், திருப்புவனம் போலீசாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கோயில் பாதுகாப்பு பணியில் இருந்த தனியார் நிறுவன காவலாளி அஜித்குமார் இறந்தார். அதுமட்டுமின்றி அஜித் குமாரை போலீசார் தாக்கும் வீடியோ வெளியானது. இந்த […]

Loading

செய்திகள்

காவல் நிலையத்தில் நீதிபதி விசாரணை: ஆவணங்கள் ஒப்படைப்பு

சிவகங்கை, ஜூலை 2– இளைஞர் அஜித்குமார் மரணம் தொடர்பாக திருப்புவனம் காவல் நிலையத்தில் நீதிபதி நேரில் விசாரணை நடத்தினார். சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார், போலீஸ் காவலில் மரணம் அடைந்த சம்பவம் தொடர்பாக 5 போலீசார் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஸ் ராவத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டார்.இந்த மரண வழக்கை சிபிஐக்கு மாற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். இந்த வழக்கை மதுரை 4-வது […]

Loading