செய்திகள்

வெளியுறவுத்துறை இணை செயலாளரிடம் விஜய் வசந்த் எம்.பி. மனு

நாகர்கோவில், ஜூலை. 4- போர் சூழ்நிலை காரணமாக ஈரான் நாட்டின் கிஷ் தீவில் சிக்கி தவிக்கும் குமரி மாவட்டத்தை சேர்ந்த மீனவர்களை பத்திரமாக மீட்டு கொண்டு வர வேண்டும் என வெளியுறவுத்துறை இணை செயலாளரிடம் விஜய் வசந்த் எம்.பி. கோரிக்கை மனு கொடுத்தார். கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் விஜய் வசந்த் நேற்று டெல்லியில் வெளியுறவு துறை இணை செயலாளர் ஆனந்த் பிரகாஷை நேரில் சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- ஈரான் […]

Loading

செய்திகள்

காங்கிரசுடன் எந்த கூட்டணியும் இல்லை: கெஜ்ரிவால் திட்டவட்டம்

ஆமதாபாத், ஜூலை.4-– காங்கிரசுடன் எந்த கூட்டணியும் இல்லை என கெஜ்ரிவால் திட்டவட்டமாக கூறியுள்ளார். தலைநகர் டெல்லியில் தொடர்ந்து வெற்றிப் பெற்று வந்த ஆம் ஆத்மி, இந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் தோல்வியடைந்தது. இதனால் பின்னடைவை சந்தித்து இருந்த ஆம் ஆத்மிக்கு, சமீபத்தில் பஞ்சாப், குஜராத் மாநிலங்களில் நடந்த சட்டசபை இடைத்தேர்தலில் பெற்ற வெற்றி புதிய உத்வேகத்தை கொடுத்து உள்ளது. குறிப்பாக பஞ்சாப்பில் இடைத்தேர்தல் நடந்த ஒரு தொகுதியையும், குஜராத்தில் 2 தொகுதிகளில் நடந்த தேர்தலில் ஒரு […]

Loading

செய்திகள்

அம்பத்தூரில் 22 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 பேர் கைது

ஆவடி, ஜூலை 4– ஆவடி காவல் ஆணையரகத்தில் போதைப்பொருள் இல்லா தமிழகம் என்ற கோட்பாட்டை வலியுறுத்தி ஆவடி காவல் ஆணையாளர் சங்கர் உத்தரவுபடியும், காவல் கூடுதல் ஆணையாளர் பவானீஸ்வரி உத்தரவுபடியும், அம்பத்தூர் மதுவிலக்கு அமல் பிரிவி உதவி ஆணையாளர் வழிகாட்டுதலின் படியும் செங்குன்றம் மதுவிலக்கு அமல்பிரிவு காவல் ஆய்வாளர் சசிகுமார் தலைமையில் தனிப்படை போலீசார் செங்குன்றம் மதுவிலக்கு அமல்பிரிவு எல்லைக்குட்பட்ட மீஞ்சூர், செங்குன்றம், மணலி, அத்திப்பட்டு, எண்ணூர் ஆகிய பகுதிகளில் கஞ்சா என்னும் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதை […]

Loading

செய்திகள்

19-ந்தேதி அனைத்துக்கட்சி கூட்டம்: எதிர்க்கட்சிகளுக்கு மத்திய அரசு அழைப்பு

புதுடெல்லி, ஜூலை.4- நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் 21-ந்தேதி தொடங்கவுள்ள நிலையில், வருகிற 19-ந்தேதி நடைபெறும் அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு எதிர்க்கட்சிகளுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. பஹல்காம் தாக்குதலுக்கு ‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலம் இந்தியா பதிலடி கொடுத்த விவகாரம், இந்த விஷயத்தில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தலையிட்டது, பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை உலக நாடுகளுக்கு எடுத்துச்சொன்னது போன்ற விஷயங்கள் குறித்து விவாதிக்க நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வந்தன. ஆனால் […]

Loading

செய்திகள்

கௌரவ விரிவுரையாளர்களுக்கு 3 மாத காலமாக சம்பளம் வழங்காத தி.மு.க. அரசுக்கு ஓ. பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை, ஜூலை 4– கௌரவ விரிவுரையாளர்களுக்கு 3 மாத காலமாக சம்பளம் வழங்காத தி.மு.க. அரசுக்கு ஓ. பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– கடந்த 4 ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் அரசுத்துறைகளில் பணிபுரியும் ஏதாவது ஒரு பிரிவினருக்கு சம்பளம் தாமதப்படுத்துவது என்பது வழக்கமாக இருந்து வருகிறது. விதைச் சான்றளிப்புத் துறையில் பணிபுரிந்தவர்களுக்கு 2022–ம் ஆண்டு நான்கு மாதம் சம்பளம் வழங்காமல் இருந்தது, ஒருங்கிணைந்த […]

Loading

செய்திகள்

பெரம்பூர் தபால் அலுவலகத்தில் புதிய பாஸ்போர்ட் சேவை மையம்: மண்டல அதிகாரி விஜயகுமார் தகவல்

சென்னை, ஜூலை 4–- சென்னையில் பெரம்பூர் தபால் அலுவலகத்தில் புதிய பாஸ்போர்ட் சேவை மையம் தொடங்கப்படுகிறது. சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் விஜயகுமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-– நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் பயணிகளின் விரைவான சேவைக்காகவும், போலி பாஸ்போர்ட்டுகளை குறைப்பதற்காகவும், பொதுமக்களின் தரவுகளை பாதுகாப்பதற்காக ‘சிப்’ பொருத்திய மின்னணி பாஸ்போர்ட் வழங்கப்படுகிறது. தென்னிந்தியாவிலேயே முதன் முறையாக சென்னையில் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது. கடந்த பிப்ரவரி மாதத்தில் இந்தவகை […]

Loading

கதைகள் சிறுகதை

அம்மா அம்மாதான் – ஜெ. மகேந்திரன்

வறுமை, வறுமை, வறுமை நிழலாகத் தாண்டவமாடியது முத்துப்பாண்டியின் வீட்டில், ‘‘அம்மா இன்டர்வியூவுக்கு செல்ல வேண்டும்’’ என்றான் மகன் , அடுப்பறையில் இருக்கும் நீர் மோரை சாப்பிட்டு போடா. ‘என்ன’ இன்டர்வியூக்கா பதிலை தயார் செய்து விட்டாயா’ இது நீ போகிற 10வது இன்டர்வியூ. கடவுள் ஏன் தான் இப்படி நல்லவர்களை சோதிக்கிறாரோ? நல்லவர்களிடத்தில் விளையாடுவது அவனுக்கு ஏகப்பட்ட மகிழ்ச்சிபோல. வியர்வை சிந்த உழைத்து என்னப் பயன்? பையனை கரை சேர்க்க முடியவில்லையே, ‘நான் கண் மூடி விட்டால் […]

Loading

செய்திகள்

சென்னை நகரில் வீடுவீடாக நேரில் போய் மக்களிடம் ஸ்டாலின் உரையாடினார்

சென்னை, ஜூலை 3– தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், சென்னை ஆழ்வார்ப்பேட்டை பகுதியில் வீடு வீடாகச் சென்று “ஓரணியில் தமிழ்நாடு” இயக்கத்தில் மக்களைச் சேர்க்க நேரடியாக சந்தித்தார். இயக்கம் பற்றி விரிவாக எடுத்துரைத்தார். முதலமைச்சரை மகிழ்ச்சி ஆரவாரத்துடன் வரவேற்ற பொதுமக்கள் “ஓரணியில் தமிழ்நாடு” இயக்கம் மாபெரும் வெற்றி பெறும் என்பதில் சிறிதும் ஐயமில்லை; இந்த அணியில் நாங்கள் அனைவரும் உங்கள் பக்கம்தான் இருக்கிறோம்” என்றனர். இதைக் கேட்டு முதல்வர் பெருமகிழ்ச்சியடைந்தார். “உங்களால் தான் தமிழ்நாடு கல்வி, தொழில் […]

Loading

செய்திகள்

மோடிக்கு கானா நாட்டின் தேசிய விருது வழங்கி கவுரவிப்பு

அக்காரா, ஜூலை 3– கானாவின் வளர்ச்சி பயணத்தில் இந்தியா என்றும் உறுதுணையாக இருக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார். 5 நாடுகள் சுற்றுப் பயணமாக பிரதமர் மோடி டெல்லியில் இருந்து புறப்பட்டு முதலில், கானா நாட்டுக்கு சென்றார். கடந்த 30 ஆண்டுகளில் இந்திய பிரதமர் ஒருவர் கானா செல்வது இதுவே முதல் முறையாகும். கானா சென்ற பிரதமர் மோடியை அதிபர் ஜான் டிரமனி மஹாமா வரவேற்றார். அங்கு வசிக்கும் இந்திய வம்சாவளியினர் உற்சாக அவருக்கு வரவேற்பு அளித்தனர். […]

Loading

செய்திகள்

கள்ளக்குறிச்சி அருகே நடந்த துணிகரம் வயதான தம்பதிகளை கத்திமுனையில் மிரட்டி 200 சவரன் நகைக் கொள்ளை

கள்ளக்குறிச்சி, ஜூலை 3– கள்ளக்குறிச்சி அருகே வயதான தம்பதிகளை கத்திமுனையில் மிரட்டி 200 சவரன் நகைகளை மர்ம கும்பல் கொள்ளை அடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ளது கடுவனூர். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் கேசரி வர்மன். இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். தமது 2வது மகளின் மஞ்சள் நீராட்டு விழாவுக்காக வங்கி லாக்கரில் இருந்து 200 சவரன் நகைகளை எடுத்து வைத்திருந்த கேசரி வர்மன் அவசர வேலையாக […]

Loading