செய்திகள்

சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்து: பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு

சாத்தூர், ஜூலை 5– விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் கடந்த 1-ம் தேதி காலை ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10-ஆக உயர்ந்துள்ளது. விருதுநகர் மாவட்டம், சிவகாசி -அருகே சின்னகாமன்பட்டியில், கமல்குமார் என்பவருக்கு சொந்தமான, ‘கோகுலேஷ்’ பட்டாசு ஆலை உள்ளது. நாக்பூர் உரிமம் பெற்ற இந்த ஆலையில், 40க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன. இந்த ஆலையில் 1–ந் தேதி காலை 8.30 மணி அளவில் தொழிலாளர்கள் மருந்து கலவை செய்யும் […]

Loading

செய்திகள்

தங்கம் விலை உயர்வு: சவரன் ரூ.72,480க்கு விற்பனை

சென்னை, ஜூலை 5– தங்கம் விலை இன்று உயர்ந்து, சவரன் ரூ.72,480க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் உயர்ந்து கொண்டே செல்கிறது. பல்வேறு நாடுகளுக்கு இடையே திடீரென ஏற்படும் போர் பதற்றம் காரணமாகவும் தங்கம் விலை உயர்ந்து வருகிறது. அந்த வகையில் கடந்த 14ந்தேதி வரலாறு காணாத வகையில் தங்கம் விலை உயர்ந்தது. அன்றைய தினம் கிராமுக்கு ரூ.9,320-ம், சவரனுக்கு ரூ.74,560 என விற்பனையானது. அதன் பின்னர் […]

Loading

கதைகள் சிறுகதை

கனவு மெய்ப்பட வேண்டும் – மு.வெ. சம்பத்

தனது தோழிகள் மேல் படிப்பிற்காக அவரவர் விரும்பிய துறைகளில் சேர்ந்தார்கள், மாலா தனது தந்தை மோகனிடம் தான் ஆட்டிசம் துறையில் படிக்க விரும்புவதாக் கூற, உனது தோழிகள் போன்று நீயும் படிக்கலாமே என்றார், வீட்டில் குணசீலன் ஆட்டிசத்தினால் அவதிப் படுகிறானே, அவனை குணப் படுத்தவா இந்தத் துறையை நீ விரும்புகிறாய் என்றார், உனது வாழ்க்கையை மேம்படுத்தும் துறையை எடுத்தால் என்ன என்று கூற, மாலாவின் பிடிவாதம் இறுதியில் வென்றது, மிகவும் ஆர்வமாக படித்த மாலாவை ஆசிரியர் மருத்துவர் […]

Loading

செய்திகள்

விவசாயிகளின் வருமானத்தை பெருக்க “ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்” திட்டம்: ஸ்டாலின் துவக்கி வைத்தார்

சென்னை, ஜூலை 4– முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், வேளாண்மை – உழவர் நலத்துறையின் சார்பில் “ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்” என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைத்து, 5 பயனாளிகளுக்கு காய்கறி விதைத்தொகுப்புகள், பழச்செடித் தொகுப்புகள்மற்றும்பயறு வகைத் தொகுப்புகளைவழங்கினார். மேலும், 103 கோடியே 38 லட்சம் ரூபாய் செலவில் பல்வேறு மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள 2 முதன்மை பதப்படுத்தும் மையங்கள், 18 சேமிப்புக் கிடங்குகள், 3 வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள், 3 வேளாண் சந்தை […]

Loading

செய்திகள்

“மக்கள் குரல்-’’ ஆசிரியர் எம்.எஸ். 98வது பிறந்த நாள்; கண் மருத்துவ முகாம்

சென்னை, ஜூலை 4 “மக்கள் குரல்- – ட்ரினிட்டி மிரர்”- பத்திரிகைகளில் நிறுவன ஆசிரியர் எம் சண்முகவேலின் (எம்.எஸ்) 98 ஆவது பிறந்தநாள் விழா, மக்கள் குரல் அலுவலகத்தில் இன்று காலை சிறப்பாக கொண்டாடப்பட்டது. மக்கள் குரல்- – ட்ரினிட்டி மிரர் ஆசிரியர் ஆர். முத்துக்குமார், செயல் இயக்குனர் பி. ஜீவானந்தம், ஆசிரியர் குழு, நிர்வாகம் -அச்சுப் பிரிவு ஊழியர்கள் அனைவரும் ஆசிரியரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். ஆசிரியர் ஆர். முத்துக்குமாரின் தாயாரும், நிறுவன […]

Loading

செய்திகள்

மேலூரில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை: காதலன் உள்பட 3 பேர் கைது

மேலூர், ஜூலை 4– மேலூரில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் காதலன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அ.வள்ளாலப்பட்டி பகுதியை சேர்ந்த 20 வயதுடைய பெண் வேலைக்கு செல்லாமல் வீட்டில் பெற்றோருக்கு உதவியாக இருந்து வருகிறார். இவரும் அதே பகுதியை சேர்ந்த தீபன்ராஜ் (வயது 25) என்பவரும் காதலிப்பதாக கூறப்படுகிறது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தனர்.அதன்படி நேற்றிரவு தீபன்ராஜ் அந்த பெண்ணை தனியாக […]

Loading

செய்திகள்

மெட்ரோ ரெயில் பணியாளர்களுக்கு நவீன பயிற்சி மையம்:

சென்னை, ஜூலை 4– மெட்ரோ ரெயில் பணியாளர்களுக்கு நவீன பயிற்சி மையத்தை மேலாண்மை இயக்குநர் எம்.ஏ.சித்திக் துவக்கி வைத்தார். சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், பணிபுரியும் பணியாளர்களின் திறன் மேம்பாட்டை வலுப்படுத்தும் நோக்கத்தில் கோயம்பேடு பணிமனையில் இயக்கத்துறையின் பிரத்யேக பயிற்சி மையத்தை தொடங்கியது. சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், 2007-ல் நிறுவப்பட்டு, 2015-ஆம் ஆண்டு முதல் பயணிகள் சேவையைத் தொடங்கியது. கடந்த பத்தாண்டுகளாக, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் பணியாளர்களின் திறன் மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. […]

Loading

செய்திகள்

10, 15 ஆண்டுகள் ஆன வாகனங்களுக்கு டீசல், பெட்ரோலுக்கு விதித்த தடை நீக்கம்

டெல்லி, ஜூலை 4– டெல்லியில் காலாவதியான வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் வழங்கப்படாது என்ற உத்தரவு தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது. டெல்லியில் காற்று மாசுவை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக, காற்று மாசு அதிகரிப்பதற்கு பழைய வாகனங்களில் இருந்து வெளியேறும் புகை முக்கிய காரணமாக உள்ளது. இதன் காரணமாக, 10 ஆண்டுகளை கடந்த டீசல் வாகனங்கள், 15 ஆண்டுகளை கடந்த பெட்ரோல் வாகனங்களை பயன்படுத்த டெல்லியில் தடை விதிக்கப்பட்டுள்ளது. முதலில் தேசிய பசுமை தீர்ப்பாயம் இந்த […]

Loading

செய்திகள்

ஜப்பானில் 2 வாரங்களில் மட்டும் 900 முறை நில நடுக்கம் பதிவு

டோக்கியோ, ஜூலை 4– ஜப்பானின் டோகாரா தீவுகளுக்கு அருகே கடந்த 2 வாரங்களில் 900-க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன. பசிபிக் நெருப்பு வளைய பகுதியில் ஜப்பான் இருப்பதால், அங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது. ஜப்பானின் தெற்கு பகுதியிலுள்ள டோகாரா தீவுகளுக்கு அருகே கடந்த 2 வாரங்களில் 900-க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரே நாளில் 183 நிலநடுக்கம் இது குறித்து ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, “ஜூன் 21 முதல் தொடங்கிய […]

Loading

செய்திகள்

அஜித்குமார் தலையில் கம்பியால் அடித்ததில் மூளையில் ரத்தக் கசிவு

சிவகங்கை, ஜூலை 4– அஜித்குமார் தலையில் கம்பியால் அடித்ததில் மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளதாகவும் அதுவே மரணத்துக்கு முக்கிய காரணமாக இருக்கக் கூடும் என்று பிரேத பரிசோதனை அறிக்கையில் வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் தற்காலிக காவலாளி அஜித்குமார் (27). நகை திருட்டு வழக்கு தொடர்பான போலீஸ் விசாரணையின்போது உயிரிழந்தார். இதுதொடர்பாக மானாமதுரை குற்றவியல் தனிப்படை போலீசார் 6 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். உயிரிழந்த அஜித்குமாரின் பிரேத பரிசோதனை அறிக்கை […]

Loading