செய்திகள்

குடியரசு தின விழாவை சீர்குலைக்க சதி: உளவுத்துறை எச்சரிக்கை

சென்னை, ஜன. 19–- உளவுத்துறை எச்சரிக்கையால் குடியரசு தின விழாவையொட்டி தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். மக்கள் கூடும் இடங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் குடியரசு தின விழா வருகிற 26-ந் தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம், டெல்லியில் பிரதமர் மோடி முன்னிலையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தேசியக்கொடியை ஏற்றுகிறார். சென்னையில் மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உழைப்பாளர் சிலை அருகே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தமிழக […]

Loading

செய்திகள்

தமிழக சட்டசபை நாளை கூடுகிறது: கவர்னர் முழுமையாக உரை நிகழ்த்துவாரா?

சென்னை, ஜன. 19– அரசியல் பரபரப்புக்கு இடையில் தமிழக சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் நாளை கவர்னர் உரையுடன் தொடங்கும் நிலையில் கவர்னர் உரை நிகழ்த்துவாரா? என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் கவர்னர் உரையுடன் தொடங்குவது மரபாக இருந்து வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம் நாளை (செவ்வாய்கிழமை) காலை 9.30 மணிக்கு கூட இருக்கிறது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் – மே […]

Loading

மக்கள் குரல் பார்வையில்

காமராஜர் இந்திரா காந்தியை பிரதமராகிய தினம்

1966 ஜனவரி 19 ந்தேதி, இந்திய அரசியல் வரலாற்றில் தனித்துவமான முக்கியத்துவம் பெற்ற நாளாக விளங்குகிறது. அப்போது காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருந்த காமராஜரின் ஆதரவுடன், நாடாளுமன்றக் கட்சித் தேர்தலில் வெற்றி பெற்று, இந்தியாவின் முதல் பெண் பிரதமராக இந்திரா காந்தி தேர்ந்தெடுக்கப்பட்ட வரலாற்றுச் சம்பவத்துடன் நேரடியாக தொடர்புடையதாகும். காமராஜர், இந்திய அரசியல் வரலாற்றில் “கிங் மேக்கர்” (King Maker) என உலகளவில் அறியப்பட்டார். இந்த வெற்றி, இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக […]

Loading

செய்திகள்

கடலூரில் ஜெஇஇ நுழைவுத் தேர்வு பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்: கலெக்டர் வழங்கினார்

கடலூர், ஜன. 19– கடலூர் மஞ்சக்குப்பம் அரசு மாதிரி பள்ளியில் வெற்றிப் பள்ளிகள் திட்டத்தின் கீழ் நடைபெற்ற ஜெஇஇ நுழைவுத் தேர்விற்கான பயிற்சி வகுப்பு முடித்த மாணவ, மாணவிகளுக்கு பயிற்சிக்கான சான்றிதழ்களை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், தமிழ்நாடு மாதிரிப் பள்ளிகள் உறுப்பினர் செயலர் இரா.சுதன் ஆகியோர் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் இரா.சுதன் பேசியதாவது: முதலமைச்சர், மாணவர்களுக்கு ஆரோக்கியமான தொடக்க கல்வியினை வழங்கிடவும், இடைநிற்றலின்றி மாணவர்கள் கல்வி கற்றிடவும், பள்ளிக்கல்வியினை தொடர்ந்து சிறப்பான உயர்கல்வியை மாணவர்கள் பெறுவதற்கும் பல்வேறு […]

Loading

செய்திகள்

‘‘என் சென்னை என் பெருமை, என் மெரினா என் பொறுப்பு” விழிப்புணர்வு இயக்கம் துவக்கம்

சென்னை, ஜன. 19– திருக்குறள் வாரத்தினை முன்னிட்டு, “என் சென்னை என் பெருமை, என் மெரினா என் பொறுப்பு” விழிப்புணர்வு இயக்கத்தின் தொடக்க நிகழ்ச்சி சென்னை மெரினா கடற்கரையில் நேற்றுநடைபெற்றது. சென்னை மெரினாவில் நடிகை சுஹாசினி மணிரத்தினம், சென்னை மாநகராட்சியுடன் இணைந்து சென்னை மெரினாவினை தூய்மையாக வைப்பதற்கான “என் சென்னை என் பெருமை, என் மெரினா என் பொறுப்பு” விழிப்புணர்வு இயக்க தொடக்க நிகழ்ச்சியில், இதற்காக வடிவமைக்கப்பட்ட ஜெர்சியினை மாநகராட்சி ஆணையாளர் ஜெ.குமரகுருபரன் வெளியிட்டு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் […]

Loading

செய்திகள்

மெரினா உள்ளிட்ட கடற்கரைப் பகுதியில் குப்பைகளை கொட்டிய 241 பேருக்கு ரூ.1 லட்சத்து 90 ஆயிரம்- அபராதம்

சென்னை, ஜன.19– சென்னை மாநகராட்சிக்குட்பட்ட மெரினா, பெசன்ட் நகர் உள்ளிட்ட முக்கிய கடற்கரைப் பகுதிகளில் விதிகளை மீறி குப்பைகளை கொட்டிய 241 பேருக்கு ரூ.1 லட்சத்து 90 ஆயிரத்து 500 – அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள கடற்கரைப் பகுதிகளை பொதுமக்களின் பொழுதுபோக்கிற்கு உகந்த வகையில் மேம்படுத்திட மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், மெரினா கடற்கரை, பெசன்ட் நகர், திருவான்மியூர், பாலவாக்கம், நீலாங்கரை, அக்கரை, திருவொற்றியூர் கடற்கரை பகுதியில் […]

Loading

செய்திகள்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில பார் கவுன்சிலுக்கு மார்ச் 30-ந்தேதி தேர்தல்

சென்னை, ஜன.19- தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில பார் கவுன்சிலுக்கு 5 ஆண்டுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படும். இந்த தேர்தலில் 25 உறுப்பினர்களை மாநிலம் முழுவதும் உள்ள வக்கீல்கள் வாக்களித்து தேர்ந்தெடுப்பார்கள். அந்த 25 பேரில் ஒருவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார். அந்தவகையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர்கள் பதவிக்காலம் கடந்த ஆண்டே முடிவடைந்து விட்டதால், உறுப்பினர்களின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டு வந்தது. இதையடுத்து தேர்தலை நடத்த உத்தரவிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில், பார் கவுன்சில் உறுப்பினர் வரதன் […]

Loading

செய்திகள்

ஐகோர்ட்டு விருந்தினர் மாளிகையின் புதிய நிர்வாக அலுவலகம்: சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் திறந்து வைத்தார்

சென்னை, ஜன.19- ஜூடிசியல் அகாடமியில் கோர்ட்டு விருந்தினர் மாளிகைக்கு புதிய நிர்வாக அலுவலக கட்டிடத்தை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தாமரை இல்லத்தில், நீதித்துறை அலுவலகத்துக்காக பல அடுக்குமாடி கட்டிடம் கட்டப்பட உள்ளது. இந்த கட்டிடத்துக்கான பூமி பூஜை நேற்று நடந்தது. இதில், சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.மகாதேவன், ஐகோர்ட்டு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவத்சவா, ஐகோர்ட்டு நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், எஸ்.எம்.சுப்பிரமணியம், அனிதா சுமந்த், ஜி.ஜெயச்சந்திரன், […]

Loading

மக்கள் குரல் பார்வையில்

ஆஸ்திரேலியாவின் தொடக்கம்

ஜனவரி 18, 1788 அன்று ஆஸ்திரேலியாவின் பாட்டனி விரிகுடாவில் (Botany Bay) முதல் கப்பல் படை (First Fleet) வந்தது. இது பிரிட்டிஷ் பேரரசின் காலனித்துவ விரிவாக்கத்தின் மைல்கல். இங்கிலாந்து அனுப்பிய 11 கப்பல்களில் 1,400 க்கும் மேற்பட்ட சிறுபான்மையினர், ராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகள் இருந்தனர். இந்த நிகழ்வு, குடியேற்றம், ஆட்சி, மனித உரிமை மற்றும் வரலாற்று நீதி குறித்து இன்றும் உலகளவில் விவாதிக்கப்படும் ஒரு முக்கிய நிகழ்வு. தமிழ்நாட்டு மக்களுக்கு ஏன் முக்கியம் என்பதைப் […]

Loading

செய்திகள்

109வது பிறந்த நாள் எம்.ஜி.ஆர். சிலைக்கு எடப்பாடி மாலை அணிவித்து மரியாதை

சென்னை, ஜன.17– அண்ணா தி.மு.க. நிறுவனத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ஆரின் 109வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி எம்.ஜி.ஆரின் உருவப்படத்திற்கு அண்ணா தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர். அன்னதானம், நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன. எம்.ஜி.ஆர். பிறந்தநாளையொட்டி சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலை தலைமைக் கழக எம்.ஜி.ஆர். மாளிகை வளாகத்தில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். உருவச்சிலைக்கு பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். ஜெயலலிதா சிலைக்கும் எடப்பாடி […]

Loading