செய்திகள்

போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கு: நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு ஐகோர்ட் ஜாமீன்

சென்னை, ஜூலை.9- நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோருக்கு ஜாமீன் வழங்கி சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் ‘கொகைன்’ போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக பிரதீப்குமார் என்பவர் கைதானார். மேலும் அவருக்கு போதைப்பொருளை சப்ளை செய்த ஆப்பிரிக்க நாடான கயானாவை சேர்ந்த ஜான் என்பவரும் ஓசூரில் சிக்கினார். அவரிடம் நடத்திய விசாரணையில் தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான ஸ்ரீகாந்த் இந்த வழக்கில் சிக்கினார். இதனையடுத்து ஸ்ரீகாந்த் கடந்த மாதம் 23-ந்தேதி அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவர் அளித்த […]

Loading

செய்திகள்

பொதுமக்களிடம் புகார் மனு பெற்றார் சென்னை போலீஸ் கமிஷனர் அருண்

சென்னை, ஜூலை 9– சென்னை காவல் ஆணையரகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறை தீர் முகாமில் கமிஷனர் அருண் பொதுமக்களின் 16 புகார் மனுக்களை பெற்று விரைந்து நடவடிக்கை எடுக்க காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண், சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் நடைபெற்று வரும் பொதுமக்கள் குறை தீர் முகாமில், காவல் அதிகாரிகள் பொதுமக்களின் புகார் மனுக்களை பெற்று விரைந்து விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு, உடனடி […]

Loading

செய்திகள்

நாளை முதல் கப்பலூர், சாலைப்புதூர், நாங்குநேரி எட்டுர்வட்டம் சுங்கச்சாவடிகளில் அரசு பஸ்களை அனுமதிக்கக்கூடாது: ஐகோர்ட் உத்தரவு

சென்னை, ஜூலை.9- சுங்கச்சாவடிகளுக்கான நிலுவைத்தொகை ரூ.276 கோடியை அரசு போக்குவரத்து கழகம் செலுத்தாததால் தென்மாவட்டங்களில் உள்ள 4 சுங்கச்சாவடிகளில் நாளை முதல் அரசு பஸ்களை அனுமதிக்கக்கூடாது என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் சுங்கச்சாவடிகளுக்கு செலுத்த வேண்டிய தொகை ரூ.276 கோடியை செலுத்தாமல் நிலுவை வைத்துள்ளதாக கூறி மதுரை கப்பலூர், சாத்தூர் எட்டுர்வட்டம், கயத்தாறு சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி சுங்கச்சாவடிகளை நிர்வகிக்கும் தனியார் நிறுவனங்கள் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த […]

Loading

செய்திகள்

தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.480 குறைவு

சென்னை, ஜூலை 9– சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 60 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 9000 ரூபாய்க்கும், சவரனுக்கு ரூ.480 குறைந்து சவரன் ரூ.72 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. தொடர்ந்து, படிப்படியாக உயர்ந்த தங்கம் விலை அண்மையில் ரூ.74 ஆயிரத்தை கடந்து வரலாற்றில் புதிய உச்சத்தை தொட்டது. சவரனுக்கு ரூ.480 குறைவு இதனையடுத்து, தங்கம் விலை கடந்த ஏற்ற […]

Loading

செய்திகள்

சட்டமன்ற தேர்தலில் தி.மு.க., அண்ணா தி.மு.க. கூட்டணி இடையே தான் போட்டி: திருமாவளவன்

சென்னை, ஜூலை.9- 2026 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கும், அண்ணா தி.மு.க. கூட்டணிக்கும் இடையேதான் போட்டி என்று திருமாவளவன் கூறியுள்ளார். தமிழகத்தில் பல்வேறு அரசு துறைகளின் கீழ் இயங்கும் பள்ளி-கல்லூரி விடுதிகள் ‘சமூக நீதி விடுதிகள்’ என்று அழைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதற்காக அவரை சென்னை அண்ணா அறிவாலயத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று சந்தித்து நன்றியும், பாராட்டும் தெரிவித்தார். அப்போது பொதுச்செயலாளர் சிந்தனை செல்வன், துணை பொதுச்செயலாளர்கள் எஸ்.எஸ்.பாலாஜி, […]

Loading

செய்திகள்

ஹோமியோபதி மருத்துவர்கள் 6 மாத மருந்தியல் படிப்பை படித்தால் அலோபதி சிகிச்சை அளிக்கலாம்

மும்பை, ஜூலை 9– ஹோமியோபதி மருத்துவர்களும், அலோபதி சிகிச்சை அளித்து, அலோபதி மருந்துகளை பரிந்துரை செய்யலாம் என்ற மகாராஷ்டிரா அரசின் அறிவிப்புக்கு இந்திய மருத்துவர்கள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மகாராஷ்டிரா மருத்துவ கவுன்சில் கடந்த ஜூன் 30–ந்தேதி அன்று வெளியிட்ட அறிவிப்பில் ஹோமியோபதி மருத்துவர்கள் நவீன மருத்துவத்தில் பயிற்சி பெறுவதற்காக நவீன மருந்தியலில் சான்றிதழ் படிப்பை (CCMP) படிக்க மாநில மருத்துவக் கல்வி மற்றும் மருந்துகள் துறை அனுமதி அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதாவது ஹோமியோபதி மருத்துவர்கள் […]

Loading

செய்திகள்

செயலாளர் சண்முகத்தின் தாயார் மரணம்: ஸ்டாலின் இரங்கல்

சென்னை, ஜூலை 9– முதல்வரின் செயலாளர் சண்முகத்தின் தாயார் காலமானார். அவரது மறைவையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:– என்னுடைய செயலாளராக உள்ள சண்முகத்தின் தாயார் எம்.எஸ். ராஜலட்சுமி மறைவுற்ற செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். பெற்ற அன்னையின் மறைவு என்பது ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அத்தகைய பேரன்பை இழந்து தேற்ற முடியாத துயரில் வாடும் சண்முகம் ஐ.ஏ.எஸ்.க்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். […]

Loading

செய்திகள்

அஜித்குமார் மரண வழக்கு: ஐகோர்ட் மதுரை கிளையில் விசாரணை அறிக்கை தாக்கல்

மதுரை, ஜூலை 8– கோவில் காவலாளி அஜித்குமார் மரணம் தொடர்பாக விசாரணை நடத்திய மதுரை மாவட்ட நீதிபதி, தனது அறிக்கையை ஐகோர்ட் மதுரைக் கிளையில் இன்று தாக்கல் செய்தார். சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட கோயில் காவலாளி அஜித்குமார், தனிப்படை காவலர்கள் தாக்கியதில் உயிரிழந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் விசாரிக்க ஐகோர்ட் மதுரைக் கிளை உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து 4 நாட்கள் நீதிபதி சுந்தர்லால் […]

Loading

செய்திகள்

தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் சரக்கு வாகனம் மீது கார் மோதி விபத்து: 4 பேர் பலி

தஞ்சாவூர், ஜூலை 8– தஞ்சாவூர் அருகே சரக்கு வாகனம் மீது கார் மோதிய விபத்தில் சென்னையைச் சேர்ந்த 4 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் உதாரமங்கலம் அருகே தஞ்சாவூர் – விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலையில், நாற்றுகளை ஏற்றி கொண்டு சரக்கு வாகனம் எதிர் திசையில் வந்துள்ளது. அப்போது சென்னையிலிருந்து தஞ்சைக்கு சுற்றுலா வந்த கார் எதிர்பாராத விதமாக மோதியது. இந்த கோர விபத்தில் காரில் பயணித்த விஜயா என்ற பெண் சம்பவ இடத்திலேயே […]

Loading

செய்திகள்

ரிதன்யாவின் கணவர், மாமனாரின் ஜாமீன் மனு தள்ளுபடி

திருப்பூர்,  ஜூலை 8- திருப்பூர் மாவட்ட நீதிமன்றம் ரிதன்யாவின் கணவர் கவின் குமார் மற்றும் அவரது மாமனார் ஈஸ்வரமூர்த்தியின் ஜாமீன் மனுவை  நிராகரித்துள்ளது. திருப்பூரைச் சேர்ந்த ரிதன்யா திருமனமான 78 நாட்களில் தனது கணவர்வீட்டார் வரதட்சனை கேட்டு தன்னை கொடுமைபடுத்தியதாக கூறி தற்கொலை செய்து கொண்டார். இது ஒட்டுமொத்த மாநிலத்திலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.   இதைத் தொடர்ந்து ரிதன்யாவின் கணவர், கணவரின் தந்தை, தலைமறைவாக இருந்த கணவரின் தாய் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டனர். தற்பொழுது  திருப்பூர் […]

Loading