செய்திகள்

புதிய அரசியல் கட்சியை தொடங்கியவுடன் எலான் மஸ்க் சொத்து மதிப்பு 7.6% குறைந்தது

நியூயார்க், ஜூலை 11– அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் தனது புதிய அரசியல் கட்சியை அறிவித்தவுடன் டெஸ்லா பங்குகள் சுமார் 7.6 சதவீத சரிவை கண்டுள்ளது. அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க், “அமெரிக்கா கட்சி” (America Party) என்ற புதிய அரசியல் கட்சியைத் தொடங்குவதாக அறிவித்ததையடுத்து, அவரது டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் 7.6 சதவீதம் வரை சரிந்தன. இதனால், டெஸ்லாவின் சந்தை மூலதனத்தில் 68 பில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டது. இந்த சரிவு, எலான் மஸ்க்கின் தனிப்பட்ட […]

Loading

செய்திகள்

ஆதார் அட்டையை ஆவணமாக ஏற்குமாறு தேர்தல் கமிஷனுக்கு சுப்ரீம் கோர்ட் பரிந்துரை

புதுடெல்லி, ஜூலை.11- பீகாரில் தலைமை தேர்தல் கமிஷன் நடத்தி வரும் வாக்காளர் தீவிர திருத்தப் பணிகளுக்கு தடை விதிக்க மறுத்த சுப்ரீம் கோர்ட், இந்த சரிபார்ப்பு பணியின்போது ஆதார், வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ரேஷன் அட்டைகளையும் உரிய ஆவணமாக கருத்தில் கொள்ளும்படி தேர்தல் கமிஷனுக்கு பரிந்துரைத்தது. பீகார் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதையொட்டி, அங்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணியை தேர்தல் கமிஷன் மேற்கொண்டுள்ளது. கடைசியாக வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி […]

Loading

செய்திகள்

செங்கல்பட்டு வழித்தடத்தில் லெவல் கிராசிங் பணியில் தூங்கிய 2 கேட் கீப்பர்கள் பணி நீக்கம்

சென்னை, ஜூலை 10– அரக்கோணம் – செங்கல்பட்டு வழித்தடத்தில் உள்ள லெவல் கிராசிங்கில் பணியின் போது தூங்கிய 2 கேட் கீப்பர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். கடலூா் அருகே உள்ள தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளிக்கு சொந்தமான வேன் ஒன்று நேற்று முன்தினம் காலை கடலூர் முதுநகர் அடுத்த செம்மங்குப்பம் ரெயில்வே கேட்டை கடக்க முயன்றபோது விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை நோக்கி வந்த பயணிகள் ரெயில், அந்த வேன் மீது மோதியது. இந்த கோர விபத்தில் வேனில் இருந்த […]

Loading

செய்திகள்

கோவை குண்டு வெடிப்பு வழக்கு: 27 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி சாதிக் ராஜா கைது

கோவை, ஜூலை 10– கோவையில் கடந்த 1998ல் நடந்த தொடர் வெடிகுண்டு வழக்கில் முக்கிய குற்றவாளி டெய்லர் ராஜா (எ) சாதிக் ராஜா 27 ஆண்டுகளுக்கு பின் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து கோவை நகர் முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. 1998 ஆம் ஆண்டு, பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே. அத்வானி கோவையில் பிரச்சாரத்திற்கு வந்திருந்தபோது, அவர் பேச இருந்த மேடை அருகே திடீரென குண்டு வெடித்தது. அதை தொடர்ந்து, 14 இடங்களில் தொடர்ச்சியாக […]

Loading

செய்திகள்

அருப்புக்கோட்டை அருகே 2 லாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்து: 3 பேர் பலி

அருப்புக்கோட்டை, ஜூலை 10– அருப்புக்கோட்டை அருகே இன்று 2 லாரிகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 டிரைவர்கள் உள்பட 3 பேர் பலியானார்கள். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் மதுரை –- தூத்துக்குடி 4 வழிச்சாலையில் கண்டெய்னர் லாரியும் சரக்கு லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இரு வாகனங்களின் டிரைவர்கள் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் இடிபாடுகளுக்குள் சிக்கிய மூவரின் உடல்களை […]

Loading

செய்திகள்

காவல் நிலையங்களில் மரணமடைந்தவர்களின் குடும்பங்களை நடிகர் விஜய் சந்திக்கிறார்

சென்னை, ஜூலை 10– காவலாளி அஜித்குமார் மரணத்திற்கு நீதிக்கேட்டு வருகிற 13ம் தேதி தவெக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதற்கு முன்னதாக காவல் நிலையங்களில் மரணமடைந்தவர்களின் குடும்பங்களை நடிகர் விஜய் சந்திக்கிறார். சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் காவலாளியாக பணியாற்றியவர் அஜித்குமார். தனது காரில் இருந்த நகைகள் மாயம் என மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள ஆலம்பட்டியை சேர்ந்த பேராசிரியை நிகிதா என்பவர் அளித்த புகாரின் பேரில் தனிப்படை போலீசார் விசாரிக்க […]

Loading

செய்திகள்

படகுகளில் த.வெ.க பெயர் இருந்தால் மீனவர்களுக்கு மானியம் மறுப்பதா? – தி.மு.க. அரசுக்கு விஜய் கண்டனம்

சென்னை, ஜூலை 10– மீனவ நண்பர்கள் தங்களின் படகுகளில் தமிழக வெற்றிக் கழகம் என்று குறிப்பிட்டிருந்தால் அவர்களுக்கு மானியம் வழங்க மறுப்பதா? என கேள்வி எழுப்பி, தி.மு.க. அரசுக்கு நடிகர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து தமிழக வெற்றிக்கழக தலைவர் நடிகர் விஜய் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:– திருநெல்வேலி மாவட்டம், கூட்டப்புளி மீனவ கிராமத்தைச் சேர்ந்த எங்கள் கழகத் தோழர்கள், தங்களின் வாழ்வாதாரமாய் விளங்கும் மீன்பிடி தொழிலுக்கான தங்களின் படகுகளைத் தமிழக […]

Loading

கதைகள் சிறுகதை விழாக்கள்

சிறுகதை … பிரிவு உபச்சார விழா….! … விழா 15 ராஜா செல்லமுத்து

அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிரிவு உபச்சார விழா வெகுவாகக் கொண்டாட ஏற்பாடானது. ஆட்சியர் அலுவலகம் முழுவதும் பலூன், வண்ணக் காகிதங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. ” இன்னைக்கு யாருக்குப் பிரிவு உபச்சார விழா ? ” என்று ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த ஒருவர் கேட்க ” தெரியலையே? யாராவது உயர் அதிகாரி ரிடையர் ஆவாங்க போல, அதான் அலுவலகமே, அலங்காரம் செய்யப்பட்டிருக்கு ” என்று அவரும் பதில் சொல்ல, அலுவலகம் மொத்தமும் அன்று களை கட்டியிருந்தது. அலுவலகத்தின் பிரதான […]

Loading

செய்திகள்

நானே இப்போது பாமக தலைவர்: தேர்தல் ஆணையத்துக்கு மருத்துவர் ராமதாஸ் கடிதம்

சென்னை, ஜூலை 10– அன்புமணி பதவி காலம் மே மாதத்துடன் நிறைவடைந்து விட்டதால், நானே இப்போது பாமக தலைவராக உள்ளேன் என தேர்தல் ஆணையத்துக்கு மருத்துவர் ராமதாஸ் கடிதம் எழுதி உள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி ராமதாஸை கட்சியின் தலைவர் பதவியில் இருந்து நீக்குவது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்தக் கடிதத்தில், ராமதாஸ் தானே கட்சியின் தலைவர் என்று உறுதிப்படுத்தியதாகவும், அன்புமணியின் செயல்பாடுகளால் கட்சியில் […]

Loading

செய்திகள்

விழுப்புரம் மாவட்டத்தில் தூய்மைப் பணியாளர்களுக்கு அடையாள அட்டை

விழுப்புரம், ஜூலை 10– விழுப்புரத்தில் 17 தூய்மை பணியாளர்களின் குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கு ரூ.1.20 லட்சம் மதிப்பீட்டில் நிதியுதவி மற்றும் 105 தூய்மைப் பணியாளர்களுக்கு அடையாள அட்டைகளை தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நல வாரிய தலைவர் டாக்டர் திப்பம்பட்டி வெ.ஆறுச்சாமி, கலெக்டர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் வழங்கினார். அப்போது அவர் பேசுகையில், தூய்மைப்பணியாளர்களின் பணி அர்ப்பணிப்பு மிக்க பணியாக உள்ளது. குறிப்பாக, கொரோனா போன்ற போிடர் காலத்தில், தங்கள் உயிரை துச்சமென எண்ணி தூய்மைப்பணியினை சிறப்பாக மேற்கொண்டு […]

Loading