செய்திகள்

பஹல்காம் தாக்குதல் நடத்திய ரெசிஸ்டன்ஸ் ப்ரண்ட்:

வாஷிங்டன், ஜூலை 18– பஹல்காமில் பயங்கரவாத தாக்குதல் நடத்திய, ‘தி ரெசிஸ்டன்ஸ் ப்ரண்ட்’ அமைப்பை பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா அறிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் 22ம் தேதி, ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் அப்பாவி சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு, ‘தி ரெசிஸ்டன்ஸ் ப்ரண்ட்’ அமைப்பு பொறுப்பேற்றது. பஹல்காமில் பயங்கர தாக்குல் நடத்திய பயங்கரவாதிகளை நீதியின் முன் நிறுத்த, இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவாக இருக்கும் என அதிபர் டிரம்ப் […]

Loading

செய்திகள்

அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

கடலூர், ஜூலை 18– கடலூரில் அண்ணா தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., சத்யா பன்னீர்செல்வம் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த 2016-2021ம் ஆண்டு வரை பண்ருட்டி தொகுதி அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,வாக இருந்தவர் சத்யா பன்னீர்செல்வம். இந்த காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது. அதுமட்டுமில்லாமல், இவரது கணவர் பன்னீர்செல்வம் நகர மன்ற தலைவராக இருந்த போது ஊழல் செய்ததாகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக கடந்த பிப்ரவரி மாதம் […]

Loading

செய்திகள்

காசாவின் ஒரே கத்தோலிக்க தேவாலயம் மீதும் இஸ்ரேல் தாக்குதல்: 2 பேர் பலி

காசா, ஜூலை 18– காசாவில் உள்ள ஒரேயொரு கத்தோலிக்க தேவாலயம் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில், போரினால் வீடுகளை இழந்து அங்கே தங்கி இருந்தவர்களில் 2 பேர் இறந்துள்ளனர். கடந்த 2023 அக்டோபர் மாதம் தொடங்கிய இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையேயான போர் ஒன்றரை ஆண்டுகளைக் கடந்து நடந்து வருகிறது. காசாவில் மக்கள் உணவு, மருத்துவம் இன்றி தவித்து வரும் நிலையில் இஸ்ரேல் தொடர்ந்து காசா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. 2 பேர் பலி இந்நிலையில், […]

Loading

செய்திகள்

பகுதி நேர நாட்டுப்புறக் கலைப்பயிற்சி மையங்களில் மாணவர் சேர்க்கை இன்று துவங்கியது

செண்னை, ஜூலை 18– நடப்பு கல்வியாண்டில் பகுதி நேர நாட்டுப்புறக் கலைப்பயிற்சி மையங்களில் மாணவர் சேர்க்கை இன்று (18–ந் தேதி) முதல் நடைபெறுகிறது. 17 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் 8–ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், தவறியவர்கள் இப்பயிற்சிக்கு அனுமதிக்கப்படுவார்கள். நாட்டுப்புறக் கலையில் ஆர்வமிக்க கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், பணிக்கு செல்பவர்கள், இல்லத்தரசிகள் ஆகியோர் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு, தமிழ்நாட்டின் பாரம்பரிய நாட்டுப்புறக் கலைகளில் பயிற்சி பெறலாம். இப்பயிற்சி குறித்த விவரங்களையும், பயிற்சியில் சேருவதற்கான விண்ணப்பத்தினையும் கலை பண்பாட்டுத்துறையின் […]

Loading

செய்திகள்

மத மோதலை தூண்டும் வகையில் பேசிய மதுரை ஆதீனத்துக்கு நிபந்தனை முன்ஜாமின்

சென்னை, ஜூலை 18– மத மோதலை தூண்டும் வகையில் பேசிய வழக்கில் மதுரை ஆதீனத்துக்கு முன்ஜாமின் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மத மோதலைத் தூண்டும் வகையில் பேசியதாக எழுந்த புகாரின் அடிப்படையில், மதுரை ஆதீனம் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நிபந்தனை முன்ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. மே 2, 2025 அன்று, சென்னை காட்டாங்கொளத்தூரில் நடந்த சைவ சித்தாந்த மாநாட்டில், மதுரை ஆதீனம் தனது கார் […]

Loading

செய்திகள்

குடும்ப அரசியலை விமர்சித்த நான் தற்போது வாரிசு அரசியல் பழி சொல்லிற்கு ஆளாகி நிற்கிறேன்’’: வைகோ புலம்பல்

விழுப்புரம், ஜூலை 18– குடும்ப அரசியலை விமர்சித்த நான், தற்போது வாரிசு அரசியல் என்ற பழி சொல்லிற்கு ஆளாகி நிற்கிறேன் என, ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ பேசினார். விழுப்புரம், ஆனந்தா மண்டபத்தில் ம.தி.மு.க., மண்டல செயல்வீரர்கள் கூட்டம் நேற்று இரவு நடந்தது. அக்கூட்டத்தில் பொதுச்செயலாளர் வைகோ பேசியதாவது: தமிழகத்தின் முக்கிய அரசியல் கால கட்டங்களில் ம.தி.மு.க., செத்துவிட்டதென ஊடகங்களில் விமர்சனங்கள் எழுந்து விவாதங்கள் நடக்கிறது. ஆனால், கட்சியின் லட்சக்கணக்கான தொண்டர்கள் அதனை பொய்யாக்கி, 31 ஆண்டுகளாக காத்து […]

Loading

செய்திகள்

மேற்குவங்கம், பீகார் மாநிலங்களில் இன்று ரூ.12,000 கோடி திட்டங்களுக்கு மோடி அடிக்கல்

டெல்லி, ஜூலை 18– பீகார் மற்றும் மேற்கு வங்கத்திற்கு இன்று பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, ரூ.12 ஆயிரத்து 200 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜூலை 18, 2025) பிகார் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்கிறார். இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கம், இரு மாநிலங்களிலும் சுமார் ரூ.12,200 கோடி மதிப்பிலான பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதும், சில திட்டங்களை திறந்து வைப்பதுமாகும். இந்தத் […]

Loading

செய்திகள்

காமராஜரை அசிங்கப்படுத்திய பின்னரும் கூட்டணியில் இருக்க வேண்டுமா?

சென்னை: ஜூலை 17– ‘‘தி.மு.க. கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சி வெளியேறத் தயாரா? குறைந்தபட்சம் மானத்தை காப்பாற்றுவதற்காக தனியாக போட்டியிட தயாரா?” என தமிழக பாரதீய ஜனதா கட்சி (பாஜக) முன்னாள் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார். இது குறித்து சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் இன்று (வியாழன்) அண்ணாமலை கூறியதாவது:– ‘‘அற்புதமான ஆட்சியாளர் காமராஜர் வீழ்த்தப்பட்டதற்கு தி.மு.க.,வே முக்கிய பொறுப்பு, முதன்மை பொறுப்பு. 1967ம் ஆண்டு தேர்தலில், எவ்வளவு பொய்களை சொல்லி கர்மவீரர் காமராஜரை வீழ்த்தினார்கள். […]

Loading

செய்திகள்

த.வெ.க கொடி நிறம் தொடர்பான வழக்கு: விஜய்க்கு நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட் உத்தரவு

சென்னை, ஜூலை 17– த.வெ.க கொடி நிறம் தொடர்பான மனுவுக்கு பதிலளிக்க த.வெ.க. தலைவர் விஜய்க்கு நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமான நடிகர் விஜய், தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் கட்சியை தொடங்கியுள்ளார். வாகை மலருடன் இரண்டு யானைகள் இடம்பெற்று இருக்கும் வகையில் த.வெ.க கொடி வடிவமைக்கப்பட்டது. த.வெ.க. கொடி அறிமுகப்படுத்தப்பட்ட உடனே யானை சின்னத்தை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக பொதுச்செயலாளர் சென்னை சிட்டி […]

Loading

செய்திகள்

சிவில் சர்வீசஸ் முதன்மைத் தேர்வுக்கு தகுதிபெற்ற 340 பேருக்கு தலா ரூ.15 ஆயிரம் உதவித்தொகை

சென்னை, ஜூலை.17- சிவில் சர்வீசஸ் முதன்மைத் தேர்வுக்கு தகுதி பெற்ற 340 தேர்வர்களுக்கு தலா ரூ.15 ஆயிரம் உதவித்தொகையை மனிதநேய அறக்கட்டளை தலைவர் சைதை துரைசாமி வழங்கினார். மனிதநேய அறக்கட்டளை கடந்த 2005-ம் ஆண்டு தொடங்கப்பட்டு, சமூக மற்றும் பொருளாதார நிலையில் பின் தங்கிய மக்களுக்கு உதவும் பொருட்டு செயல்பட்டு வருகிறது. சாதி, மத பாகுபாடின்றி அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் பல்வேறு சமூகப் பணிகளை செய்கிறது. அதேபோல், மனிதநேய இலவச ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தில் […]

Loading