செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர்: நாட்டின் ராணுவ வலிமையை உலக நாடுகளே வியந்தன

புதுடெல்லி, ஜூலை 21– ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம், நமது நாட்டின் ராணுவ வலிமையைக் கண்டு உலக நாடுகளே வியந்தன. நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் நமது ராணுவ வீரர்களின் ஆபரேஷன் சிந்தூர் வெற்றியைக் கொண்டாடும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று காலை தொடங்கியது. இதில் பங்கேற்பதற்காக வந்த பிரதமர் மோடி நாடாளுமன்ற வளாகத்தில் நிருபர்கள் சந்திப்பில் கூறியதாவது: இன்று நடைபெறும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் ஒரு வெற்றிக் […]

Loading

செய்திகள்

தி.மு.க. அரசின் திறமையற்ற நிர்வாகத்தால் நாட்டில் தலைவிரித்து ஆடும் கிட்னி விற்பனை:

சென்னை, ஜூலை 21– தி.மு.க. அரசின் திறமையற்ற நிர்வாகத்தால் தமிழ்நாட்டில் கிட்னி விற்பனை தலைவிரித்து ஆடுகிறது என ஓ. பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– போதைப் பொருள் விற்பனை, போலி மருந்து விற்பனை, காலாவதியான மாத்திரைகள் விற்பனை, கள்ளச்சாராய விற்பனை என்ற வரிசையில் தற்போது சட்ட விரோத கிட்னி விற்பனை தமிழ்நாட்டில் கொடிகட்டி பறக்கிறது. அந்த வகையில், நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தைச் சேர்ந்த பெண்களை பெரிய […]

Loading

செய்திகள்

முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்த சீமான்

சென்னை, ஜூலை.21-– மு.க.முத்து மறைவையொட்டி, சென்னை ஆழ்வார்ப்பேட்டை இல்லத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, சீமான் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். முன்னாள் முதலமைச்சர் மறைந்த கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் இரங்கல் தெரிவித்து இருந்தனர் இதற்கிடையே சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள இல்லத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று நேரில் சந்தித்து வருத்தத்தையும், ஆறுதலையும் பகிர்ந்து […]

Loading

செய்திகள்

முன்னாள் எம்.பி. அன்வர் ராஜா ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார்

சென்னை, ஜூலை 21– அண்ணா தி.மு.க.வில் இருந்து முன்னாள் எம்.பி. அன்வர் ராஜாவை நீக்கி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். இதனையடுத்து அவர் தி.மு.க.வில் இணைந்தார்.அண்ணா தி.மு.க.வில் இருக்கும் சிறுபான்மைச் சமூகத்து மக்களின் பிரதிநிதியாக இருந்த அன்வர் ராஜாவுக்கு, 2001ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் அமைச்சர் பதவி கிடைத்தது. தொழிலாளர் நலத்துறை அமைச்சராகச் செயல்பட்டார். 2014 மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற அன்வர் ராஜா, ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பிறகு சசிகலாவின் பக்கம் நின்றார். பிறகு, […]

Loading

செய்திகள்

20 ஆண்டுகளாக கோமா: சவுதியின் ‘தூங்கும் இளவரசர்’ காலமானார்

ரியாத், ஜூலை 21– தூங்கும் இளவரசர் என அழைக்கப்படும் சவுதி அரேபியாவின் இளவரசர் அல் வாலீத் பின் காலித் பின் தலால் அல் சவுத் மரணமடைந்தார். ”தூங்கும் இளவரசர்” என்று பிரபலமாக அறியப்படும் சவுதி அரேபியாவின் அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் காலித் பின் தலால் அல்-சவுத், தனது 36 வயதில் காலமானார். இளவரசர் காலித் கடந்த 2005-ம் ஆண்டு லண்டனில் ராணுவக் கல்லூரியில் பயின்று கொண்டிருந்தபோது ஏற்பட்ட கார் விபத்தில் மூளைக் காயம் அடைந்து கோமாவில் […]

Loading

செய்திகள்

22, 23-ந் தேதிகளில் கோவை, திருப்பூர் மாவட்டங்களுக்கு செல்கிறார் மு.க.ஸ்டாலின்

சென்னை, ஜூலை 20– முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வருகிற 22-ந் தேதி சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை செல்கிறார். கோவை விமான நிலையத்தில் முதலமைச்சருக்கு தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர். பின்னர் அங்கிருந்து கார் மூலம் திருப்பூர் மாவட்டம் செல்லும் அவர், அங்கு பல்லடம் மற்றும் உடுமலையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். திருப்பூர் மாநகராட்சி சார்பில் கட்டப்பட்ட கோவில்வழி பஸ் நிலையத்தை […]

Loading

செய்திகள்

கொடுங்கையூரில் தொடர்ந்து சைக்கிள் திருடிய ஆசாமி கைது: 40 சைக்கிள்கள் மீட்பு.

சென்னை, ஜூலை 20– கொடுங்கையூர், ஜெய்பாலாஜி நகர் பகுதியில் வசித்து வரும் எட்வர்ட் என்பவர் நேற்று முன்தினம் இரவு அவரது மகன் சைக்கிளை வீட்டின் காம்பவுண்டிற்குள் நிறுத்தி வைத்து விட்டு, சிறிது நேரம் கழித்து வந்து பார்த்த போது, சைக்கிள் திருடு போனது தெரியவந்தது. இது குறித்து எட்வர்ட் கொடுங்கையூர் காவல் நிலைய குற்றப்பிரிவில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதே போல் சைக்கிள்கள் காணாமல் போனது குறித்து மேலும் புகார்கள் […]

Loading

சிறுகதை விழாக்கள்

சிறுகதை … குட முழக்கு விழா…! விழா 19 …. ராஜா செல்லமுத்து

வானம் சாட்சியாக, பூமி சாட்சியாக அத்தனை தெய்வங்களின் சாட்சியாக நடக்கத் தயாராக இருந்தது, கடற்கரையில் அமைந்த திருக்கோயிலின் குடமுழுக்குத் திருவிழா. கண்ணுக்கெட்டிய தூரம் வரை, பெருங்கடல் சூழ்ந்திருந்தாலும் புனித நதிகளில் இருந்து தீர்த்தங்கள் கொண்டு வந்திருந்தனர், புண்ணியத் தலங்களிலிருந்து வந்த ஆன்மீகவாதிகள். கோயில் முழுவதும் பந்தல் போடப்பட்டு, ஆங்காங்கே சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்தனர், ஆன்மீகச் சொற்பொழிவாளர்கள் , அவர்களின் பக்திப் பேச்சில் மயங்கிக் கிடந்தனர் பக்தர்கள் . ஆன்மீகம், சொற்பொழிவு இது எதையும் கவனிக்காமல் தங்கள் வியாபாரம் மட்டுமே […]

Loading

செய்திகள்

மழைக்காலக் கூட்டத்தொடர்: சுமூகமாக நடத்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஆலோசனை

புதுடெல்லி, ஜூலை 20– நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில் இன்று டெல்லியில் அனைத்துக் கட்சி கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மழைக்கால கூட்டத்தொடர் சுமூகமாக நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் நாளை தொடங்கி ஆகஸ்ட் 21ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தொடரில் பல்வேறு விவகாரங்களை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இதனால் கூட்டத் தொடர் முழுவதும் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே மழைக்காலக் கூட்டத்தொடருக்கு முன்னதாக அனைத்துக் […]

Loading

செய்திகள்

மதுரை ஆதீனத்திடம் சைபர் கிரைம் போலீசார் விசாரணை

மதுரை, ஜூலை 20– மதுரை ஆதீனத்திடம் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தினர். தருமபுரம் ஆதீனம் ஏற்பாட்டில் சென்னை காட்டாங்கொளத்தூரில் நடைபெற்ற சைவ சிந்தாந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கடந்த மே மாதம் மதுரை ஆதீனம் காரில் வந்து கொண்டிருந்தார். உளுந்தூர்பேட்டை – சேலம் ரவுண்டானா பகுதியில் மதுரை ஆதீனத்தின் கார் மீது மற்றொரு கார் மோதி விட்டு நிற்காமல் சென்றது. இந்த சம்பவம் குறித்து மாநாட்டில் பேசிய மதுரை ஆதீனம், தன்னை கொலை செய்ய சதி […]

Loading