செய்திகள்

 ஸ்ரீதேவி, சத்யராஜ், பிரபுவுக்கு லக்ஷ்மண் (ஸ்ருதி) டூப்

சென்னை, ஆக.1- உலக சாதனை படைத்திருக்கும் மேடை திரைப்பட மெல்லிசைக் குழுவின் நிறுவனர் லக்ஷ்மண் ஸ்ருதியை திரை இசை விருந்து படைக்கும் படைப்பாளி, ‘மிமிக்ரி’ கலைஞர் என்று தானே தெரியும் வெளி உலகுக்கு? ஆனால் அவர் – தமிழ் சினிமாவில் நடிகர்கள் சத்யராஜ், பிரபு, நடிகை ஸ்ரீதேவிக்கு ஸ்டண்ட் காட்சிகளில் ‘‘டூப்’’ போட்டிருக்கும் நடிகர் என்ற ஒரு தகவலை அவர் வாயால் சொல்லக் கேட்டதும் பார்வையாளர்கள் பலரும் அதிசயித்துப் போனார்கள். இன்னும் ஒரு சில வாரங்களில் லக்ஷ்மண் […]

Loading

செய்திகள்

கரூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்: 2 பேர் பலி

வையம்பட்டி, ஆக. 1– கரூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய சம்பவத்தில் 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது? கரூர் மாவட்டம், கடவூர் அருகே உள்ள வாழ்வார்மங்களம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 62). இவர் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். மேலவெளியூரை சேர்ந்தவர் முத்து (67). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இருவரும் ஒரு மோட்டார் சைக்கிளில் வையம்பட்டி அருகே உள்ள தேக்கமலை கோவிலில் நடைபெற்ற விருந்தில் கலந்து […]

Loading

செய்திகள்

தமிழ்நாடு முழுவதும் 20-ந்தேதி மறியல் போராட்டம்: சத்துணவு ஊழியர்கள் அறிவிப்பு

சென்னை, ஆக. 1– 20-ந்தேதி தமிழகம் முழுவதும் மறியல் போராட்டம் நடத்த சத்துணவு ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து சங்க தலைவர் சந்திரசேகரன் கூறியதாவது:- சத்துணவு துறையில் காலியாக உள்ள 60 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 4 வருடங்களாக பல கட்ட போராட்டங்களை நடத்தி உள்ளோம். ஆனாலும் அரசு தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இப்போது 7 கட்ட தொடர் போராட்டங்கள் நடத்த திட்டமிட்டுள்ளோம். முதல் கட்டமாக […]

Loading

செய்திகள்

5 நாள் போராட்டம் முடிவுக்கு வந்தது: ஆணவ படுகொலை செய்யப்பட்ட கவின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு

நெல்லை, ஆக. 1– ஆணவ படுகொலை செய்யப்பட்ட கவினின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலத்தை சேர்ந்தவர் சந்திரசேகர், விவசாயி. இவருடைய மனைவி தமிழ்செல்வி, பஞ்சாயத்து யூனியன் பள்ளி ஆசிரியை. பணிக்கு செல்ல வசதியாக தூத்துக்குடியில் வசித்து வருகிறார்கள்.இவர்களுடைய மூத்த மகன் கவின் செல்வகணேஷ் (வயது 27). இவர் தகவல் தொழில்நுட்ப என்ஜினீயராக சென்னையில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். தற்போது சொந்த ஊருக்கு வந்திருந்த கவின் கடந்த 27-ந்தேதி […]

Loading

செய்திகள்

வீட்டில் தூங்கி்க் கொண்டிருந்த 4 வயது சிறுவனை தாக்கிய புலி: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

வால்பாறை, ஆக. 1– வால்பாறை அருகே உள்ள மளுக்கப்பாறையில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 4 வயது சிறுவனை புலி தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் வால்பாறை அருகே கேரள மாநிலத்திற்கு உள்பட்ட மளுக்கப்பாறை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட அதிரப்பள்ளி பஞ்சாயத்து, வீரன் குடி மலைப்பகுதியில் இன்று அதிகாலையில் சுமார் 2.15 மணியளவில் ராகுல் என்ற 4 வயது சிறுவன் தந்தை பேபியுடன் பிளாஸ்டிக் சீட்டால் மூடப்பட்ட குடிலில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென உள்ளே […]

Loading

செய்திகள்

திருநெல்வேலி பொருநை அருங்காட்சியகப்பணி: அலுவலர்களுடன் அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு

சென்னை, ஆக.1– சென்னை, தலைமைச் செயலகத்தில், பொதுப்பணிகள் துறை அமைச்சர் எ.வ.வேலு, திருநெல்வேலி மாவட்டம், பொருநை அருங்காட்சியகப் பணிகள் குறித்து பொதுப்பணித்துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார். சட்டமன்றப் பேரவை விதி 110-ன் கீழ், முதலமைச்சர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். “வீரம் விளைந்த திருநெல்வேலி நகரத்தை ஒட்டி பொருநை அருங்காட்சியகம் அமைக்கப்படும்“ என்று அறிவித்தார். அதனைத் தொடர்ந்து, முதலமைச்சரால், 18.5.2023 அன்று அடிக்கல் நாட்டப்பட்டது. அதில், ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை உள்ளிட்ட பகுதிகளில் தொல்லியல் துறை மூலமாக மேற்கொள்ளப்பட்ட […]

Loading

செய்திகள்

ஆடி மாதத்தையொட்டி தங்கம், வைரம், வெள்ளிப் பொருட்கள் வாங்கும் அனைவருக்கும் சிறப்பு பரிசு:

சென்னை, ஆக.1- ஆடி மாதத்தையொட்டி தங்கம், வைரம், வெள்ளி, பிளாட்டினம், ரத்தினக் கற்கள் போன்ற எந்தப் பொருட்களை வாங்கும் அனைவருக்கும் சிறப்பு பரிசு வழங்கப்படும் என ஜி.ஆர்.டி. ஜூவல்லர்ஸ் அறிவித்துள்ளது. தங்கம், வைரம், பிளாட்டினம், வெள்ளி மற்றும் ரத்தினக் கற்களின் பல்வேறு வடிவமைப்புகளின் உலகளாவிய கலெக்‌ஷன்களை ஜி.ஆர்.டி. கொண்டு இருக்கிறது. 66 கிளைகளுடன் ஜி.ஆர்.டி. ஜூவல்லர்ஸ் ஒவ்வொரு பண்டிகை காலங்களிலும் தனித்துவமான சலுகைகள், பரிசுகளை அறிவித்து வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியை சேர்த்து வருகிறது. அந்த வரிசையில் ஆடி மாதத்தையொட்டி, […]

Loading

செய்திகள்

சிட்டி யூனியன் வங்கி வருவாய் ரூ.1,849 கோடியாக உயர்வு

சென்னை, ஆக.1– மடப்பு ஆண்டு ஜூன் மாதத்தோடு முடிந்த காலாண்டில் சிட்டி யூனியன் வங்கியின் மொத்த வருவாய் ரூ.1,849 கோடியாக உயர்ந்துள்ளது. இது குறித்து வங்கியின் நிர்வாக இயக்குனரும் முதன்மை செயல் இயக்குநருமான என். காமகோடி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:– மொத்த வர்த்தகம் 18% உயர்ந்து ரூ.1,19,754 கோடியாக அதிகரித்து உள்ளது. வங்கியின் வைப்பு தொகை 20% உயர்ந்து ரூ.65 ஆயிரத்து 734 கோடியாகவும், கடன்கள் கடந்த ஆண்டை விட 16% உயர்ந்து ரூ.54 ஆயிரத்து 20 […]

Loading

செய்திகள்

சட்டத் துறை நூலகத்தில் மின் நூலகம்: அமைச்சர் துரைமுருகன் திறந்துவைத்தார்

சென்னை, ஆக.1– நடப்பு ஆண்டு மானியக் கோரிக்கையின் போது வெளியிடப்பட்ட அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக நீர்வளம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமைச் செயலகத்திலுள்ள சட்டத் துறை நூலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.24.78 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட மின்நூலகத்தை துவக்கி வைத்தார். இதன் மூலம் சட்டத் துறையில் பணிபுரியும் அனைத்து அலுவலர்களுக்கு தேவையான அனைத்து தகவல்களை கண்டறியவும், மற்றும் அவர்களின் இருப்பிடத்தில் இருந்து கொண்டு அவர்களுக்கு தேவையான குறிப்பு ஆதாரங்களை தேடுவதற்கு உதவுகிறது. முதலமைச்சரின் அறிவுரைக்கிணங்க, அரசு […]

Loading

செய்திகள்

தேச நலனை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்: நாடாளுமன்றத்தில் மத்திய அரசு உறுதி

புதுடெல்லி, ஆக.1- இந்திய பொருட்கள் மீது அமெரிக்கா 25 சதவீத வரி விதித்த விவகாரத்தில், தேச நலன்களை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு உறுதி அளித்துள்ளது. அமெரிக்க வரிவிதிப்பு தொடர்பாக, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல், தானாக முன்வந்து ஒரு அறிக்கை தாக்கல் செய்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-– ஏற்றுமதியாளர்கள், சிறு, குறு நிறுவனங்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், தொழில் முனைவோர் உள்ளிட்டோரின் நலன்களை பாதுகாப்பதற்கு மத்திய […]

Loading