செய்திகள்

முதல்வரின் பெயருக்கு தடை கோரி வழக்கு: ரூ.1 லட்சம் அபராதத்துடன் தள்ளுபடி

சென்னை, ஆக. 14– உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் முதல்வர் பெயரை சேர்க்க எதிர்ப்பு தெரிவித்த பொது நல மனுவை, ஒரு லட்சம் ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. அரசு திட்டங்கள் மக்களை சென்றடையும் வகையில் செயல்படுத்தப்படும் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் முதல்வர் பெயரை பயன்படுத்த தடை கோரி, அதிமுக வழக்கறிஞர் இனியன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார். சென்னை ஐகோர்ட்டில், அதிமுக வழக்குரைஞர் இனியன், ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தில் […]

Loading

சிறுகதை விழாக்கள்

சிறுகதை … சுதந்திர தின விழா..!விழா 33 … ராஜா செல்லமுத்து

பரபரப்பாக இருந்தது புழுதி பறக்கும் அந்தத் தெரு. ஓட்டமும் நடையுமாக இருந்தார்கள் அந்தத் தெருமக்கள். ‘ஊ’ என்று நாய் ஊளையிடும் சத்தம் அந்தத் தெருவில் ஏதோ ஒரு அசம்பாவிதம் நடக்கப்போகிறது என்பதைக் கட்டியம் கூறியது. அந்த ஊர் மக்கள் எல்லாம் கன்னியப்பன் வீட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்தார்கள் . ஏற்கனவே வீட்டின் முன்னே நிறைய ஆட்கள் கூடியிருந்தார்கள். வந்திருந்தவர்களுக்கெல்லாம் காபி கொடுத்துக் கொண்டிருந்தாள் ஒரு பெண். ” அம்மா இங்க ரெண்டு காப்பிய குடும்மா. அங்க ரெண்டு […]

Loading

செய்திகள்

தூய்மைப் பணியாளர்கள் என்ன தேச விரோதிகளா? விஜய் கண்டனம்

சென்னை, ஆக. 14– தங்களின் உரிமைகளுக்காக அறவழியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தூய்மைப் பணியாளர்களை அராஜகப் போக்குடன் மனிதாபிமானமற்ற முறையில் இரவோடு இரவாக கைது செய்த தி.மு.க. அரசுக்கு தவெக தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். குண்டுக் கட்டாக இழுத்துச் சென்று கைது செய்த போது பெண் தூய்மைப் பணியாளர்கள் மயக்கம் அடைந்ததோடு மட்டுமல்லாமல், அவர்கள் படுகாயம் அடைந்திருப்பதாகவும் செய்திகள் வந்துள்ளன. நள்ளிரவில் நடைபெற்ற இந்தக் கைது நடவடிக்கையைப் பார்க்கும் போது மனசாட்சியுள்ள எவராலும் தாங்கிக்கொள்ள […]

Loading

செய்திகள்

2ம் கட்டமாக 17 தொகுதிகளை வெளியிட்டார் அமைச்சர் மு.பெ.சாமிநாதன்

சென்னை, ஆக. 14– ‘அண்ணல் அம்பேத்கரின் ஆக்கங்கள்’ – தமிழ்மொழி பெயர்ப்பு இரண்டாம் கட்டமாக 17 தொகுதிகளை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வெளியிட்டார். இந்திய அரசமைப்புச் சட்டத்தின் தந்தையும் முற்போக்கு சமத்துவ இந்தியாவின் சிற்பியுமான அண்ணல் அம்பேத்கர் சமூக ஏற்றத்தாழ்வுகளை நீக்கி சமத்துவ சமுதாயம் உருவாக்க பாடுபட்டவர். நம்மை முன்னேறவிடாது இறுகப் பிடித்து இன்னல்கள் பல விளைவிக்கும் சாதி எனும் கோட்பாட்டை நீக்கிட வேண்டும் என்று சமத்துவ முரசு கொட்டியவர். சாதி, சமயங்கள், […]

Loading

செய்திகள்

கார், ஜீப், வேன்கள் ரூ.3 ஆயிரத்தில் 200 முறை சுங்கச்சாவடியை கடக்கும் ஓராண்டுக்கான ‘பாஸ்’: நாளை அறிமுகம்

சென்னை, ஆக.14- தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் கார், ஜீப், வேன் போன்ற வாகனங்களுக்கு ஓராண்டுக்கு ரூ.3 ஆயிரம் கட்டணத்தில் ‘பாஸ்’ வழங்கப்படுகிறது. இந்த திட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது. தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கு சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதற்காக ‘பாஸ்டேக்’ முறை நடைமுறையில் உள்ளது. இதற்கிடையே ஓராண்டுக்கு ரூ.3 ஆயிரம் சலுகையில் பாஸ் வழங்கும் முறையை மத்திய அரசு அறிவித்தது. இந்த ஓராண்டு பாஸ் சுதந்திர தினமான நாளை முதல் அமலுக்கு வருகிறது. […]

Loading

சினிமா செய்திகள்

ரஜினி கூலி படம் ரிலீஸ்: ரசிகர்கள் உற்சாகம்

சென்னை, ஆக. 14– ரஜினி நடித்துள்ள ‘கூலி’ திரைப்படம் வெளியாகி ரசிகர்களை உற்சாகமடையச் செய்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சவுபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்நிலையில் இன்று உலகம் முழுவதும் கூலி திரைப்படம் இன்று வெளியானது. கர்நாடகா, ஆந்திரா, கேரளாவில் காலை 6 மணிக்கு […]

Loading

செய்திகள்

சுதந்திர தினவிழா கொண்டாட்டம்: சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு:

சென்னை, ஆக. 13– சுதந்திர தினவிழா கொண்டாட்டத்தையொட்டி சென்னை பெருநகரில் 9,100 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 15–ந் தேதி 79வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண் உத்தரவின்பேரில், சென்னை பெருநகரில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை, புனித ஜார்ஜ் கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, சுதந்திர தினவிழா பேருரையாற்றுகிறார். அதன்பேரில், சுதந்திர தினவிழா நடைபெறும் புனித […]

Loading

செய்திகள்

தேசிய, சர்வதேச விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் வீரர் – வீராங்கனைகளுக்கு ரூ. 23.50 லட்சம்: உதயநிதி வழங்கினார்

சென்னை, ஆக 13– துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை நிதியியின் கீழ் விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு தேசிய, சர்வதேச விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்வதற்கான செலவுகளுக்காகவும், உயர்பயிற்சி உபகரணங்கள் வாங்குவதற்காகவும், 23–வது ஆசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் -2025 போட்டியை நடத்துவதற்காகவும் மொத்தம் 23.40 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினார். கேலோ இந்தியா இளையோர் மும்முறை தாண்டுதல் விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற எஸ். ரவிபிரகாஷ்க்கு தடகள விளையாட்டு உபகரணம் வாங்குவதற்காக 1 […]

Loading

செய்திகள்

ஒகேனக்கல்லில் இன்று காலை 4 ஆயிரம் கனஅடி நீர்வரத்து குறைவு

தருமபுரி, ஆக. 13- ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று மாலை நிலவரப்படி வினாடிக்கு 18000 கனாடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 14000 கனடியாக குறைந்துள்ளது தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே அமைந்துள்ள ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து படிப்படியாகக் குறைந்து வருகிறது. நேற்று மாலை வினாடிக்கு 18,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 14,000 கனஅடியாகக் குறைந்துள்ளது. கர்நாடக மாநிலத்தின் காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்துவந்த மழையின் […]

Loading

செய்திகள்

முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு தேடிச் சென்று வினியோகம் செய்யும் ‘தாயுமானவர் திட்டம்’

சென்னை, ஆக.12– முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தமிழ்நாட்டிலுள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்திற்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேசன் பொருட்களை விநியோகம் செய்யும் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை சென்னை, தண்டையார்பேட்டை, கோபால் நகர் மற்றும் அன்னை சத்யா நகரில், மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயது முதிர்ந்த பயனாளிகளின் இல்லங்களுக்கு நேரில் சென்று ரேசன் பொருட்களை வழங்கி தொடங்கி வைத்து, முதலமைச்சரின் தாயுமானவர் திட்ட வாகனங்களின் சேவையையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மக்கள் […]

Loading