செய்திகள்

மதுரையிலிருந்து பெங்களூரு சென்ற ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து: 30 பேர் காயம்

கிருஷ்ணகிரி, ஆக. 19– கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே இன்று அதிகாலை ஆம்னி பஸ் கவிழ்ந்த விபத்தில் 30க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். மதுரையிலிருந்து நேற்றிரவு கர்நாடக மாநிலம் பெங்களூர் நோக்கி 46 பயணிகளுடன் எஸ்.பி.எஸ்., என்ற தனியார் ஆம்னி பஸ் சென்றது. தருமபுரி அதியமான் கோட்டை முதல் கர்நாடக மாநிலம் நெரலூர் வரை புதிதாக அமைக்கப்படும் தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை சென்று கொண்டிருந்த போது கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே கருக்கனஹள்ளி பகுதியில் அந்த […]

Loading

செய்திகள்

பயணிகள் விமானத்தில் தீ: 40 நிமிடங்கள் பறந்து பத்திரமாக தரையிறங்கியது.

ஏதென்ஸ், ஆக. 19– கிரீஸ் நாட்டில் இருந்து ஜெர்மனிக்கு புறப்பட்ட விமானத்தின் என்ஜினில் நடுவானில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இருப்பினும், விமானத்தை 40 நிமிடங்கள் இயக்கி பத்திரமாக தரையிறக்கினர் விமானி. கிரீஸ் நாட்டின் கோர்பு விமான நிலையத்தில் இருந்து ஜெர்மனியின் டுசெல்டார்ப் நகருக்கு கடந்த ஆகஸ்ட் 16ம் தேதி காண்டோர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் 757 ரக விமானம் ஒன்று புறப்பட்டுள்ளது. இதில் 273 பயணிகள், 8 விமான ஊழியர்கள் பயணித்தனர். இந்த விமானம் புறப்பட்ட சில […]

Loading

செய்திகள்

கட்சிக்கொடியை பயன்படுத்த த.வெ.க.வுக்கு தடை இல்லை

சென்னை, ஆக.19- கட்சிக்கொடியை பயன்படுத்த த.வெ.க.வுக்கு தடை விதிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) கட்சிக்கு சிவப்பு, மஞ்சள் நிறங்களில் கொடி உருவாக்கப்பட்டு உள்ளது. இது தங்களது வணிகச்சின்னம் என்றும், இந்த நிறங்களில் கொடியை பயன்படுத்த விஜய் கட்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டில் தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபை வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை நீதிபதி […]

Loading

செய்திகள்

பிரதமர் மோடியுடன் சுபான்ஷு சுக்லா சந்திப்பு

புதுடெல்லி, ஆக.19- டெல்லியில் பிரதமர் மோடியை இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா சந்தித்து பேசினார். அமெரிக்காவின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம், எஸ்பேஸ் ஆக்சியம் நிறுவனங்கள் இணைந்து சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு வீரர்களை அனுப்பும் ஆக்சியம்–-4 என்ற திட்டத்தை உருவாக்கியது. இந்த திட்டத்தின் கீழ் அமெரிக்கா, ஹங்கேரி, போலந்து நாட்டு வீரர்களுடன் சேர்ந்து இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவும் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு புறப்பட்டார். கடந்த ஜூன் மாதம் 25-ந்தேதி விண்வெளி நிலையம் சென்ற அவர், அங்கே […]

Loading

செய்திகள்

21–ந்தேதி மாநில மாநாடு: த.வெ.க. தலைவர் விஜய் தொண்டர்களுக்கு கடிதம்

‘மகத்தான தேர்தல் அரசியல் வரலாறு மீண்டும் தமிழ்நாட்டு மண்ணில் நிகழும்’ என உறுதி சென்னை, ஆக. 18– மதுரை பாரப்பத்தியில் கூடுவோம், தேர்தல் அரசியல் போர் உத்தியில் வெல்வோம் என்று த.வெ.க. தலைவர் விஜய் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருக்கிறார். மகத்தான தேர்தல் அரசியல் வரலாறு மீண்டும் தமிழ்நாட்டு மண்ணில் நிகழும் என்றும் அவர் உறுதிப்பட தெரிவித்துள்ளார். விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே கடந்த ஆண்டு நடந்தது. இந்த […]

Loading

செய்திகள்

கவர்னரை வைத்து இழிவான அரசியல் செய்யும் பா.ஜ.க.

தர்மபுரி, ஆக.17– கவர்னரை வைத்து தமிழ்நாட்டில் இழிவான அரசியல் நடத்துகிறது பா.ஜ.க. என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டினார். தருமபுரி மாவட்டத்தில், 362 கோடியே 77 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஆயிரத்து 73 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 512 கோடியே 52 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஆயிரத்து 44 திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 70 ஆயிரத்து 427 பேருக்கு 830 கோடியே 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். அவர் […]

Loading

செய்திகள்

மகளை திருமணம் செய்ததால் ஆத்திரம்: காரில் மோதி மருமகனை கொன்ற மாமனார்

மதுரை, ஆக.17– மதுரை மாவட்டம் மேலூர் அருகே மகளை திருமணம் செய்த வாலிபரை காரில் மோதி மாமனார் கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த பூதமங்கலத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 21), தும்பை பட்டி ராகவி (வயது 24) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்தார். ராகவிக்கு ஏற்கனவே திருமணம் ஆகி கணவர் வாகன விபத்தில் இறந்து விட்டார். கணவரை இழந்த ராகவியை அவரை விட வயது […]

Loading

செய்திகள்

விண்ணப்பித்த அன்றே விவசாய பயிர்க்கடன் வழங்கும் முன்னோடி திட்டம்

தர்மபுரி, ஆக.17– முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தருமபுரி மாவட்டம், அதியமான்கோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களில் விண்ணப்பித்த அன்றே பயிர்க்கடன் வழங்கும் புதிய திட்டத்தை துவக்கிவைத்தார். இந்த திட்டமானது நாட்டிற்கே முன்னோடியான திட்டம் ஆகும். 2025–-26–ம் ஆண்டிற்கான கூட்டுறவுத் துறை மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்தின் போது கூட்டுறவுத் துறை அமைச்சர் “தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களில் விண்ணப்பித்த அன்றே பயிர்க்கடன் வழங்கப்படும்” என்ற அறிவிப்பை வெளியிட்டார். விவசாயப் பெருங்குடி […]

Loading

செய்திகள்

தீபாவளி பண்டிகை ரெயில் டிக்கெட் முன்பதிவு: 10 நிமிடங்களில் முடிந்தது

சென்னை, ஆக. 17– தீபாவளி பண்டிகை ரெயில் டிக்கெட் முன்பதிவு துவங்கிய 10 நிமிடங்களில் அனைத்தும் முடிவடைந்தது. தீபாவளி பண்டிகை இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 20-ந்தேதி திங்கட்கிழமை கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகையை தங்களது சொந்த ஊரில் குடும்பத்துடன் கொண்டாட விரும்பும் வெளியூரில் வசிப்பவர்கள் சொந்த ஊர்களுக்கு ரெயில், பேருந்துகளில் செல்வது வழக்கம். தீபாவளியையொட்டி சிறப்பு பேருந்துகளும், ரெயில்களும் இயக்கப்படும். முன்கூட்டியே சொந்த ஊர் செல்பவர்கள் வியாழன் அல்லது வெள்ளிக்கிழமையில் செல்வார்கள். அதன்படி அக்டோபர் 16-ந்தேதிக்கான ரெயில் […]

Loading

செய்திகள்

தர்மபுரி மாவட்டத்திற்கு ஸ்டாலின் 5 புதிய அறிவிப்புகள்

தர்மபுரி, ஆக.17– தர்மபுரி மாவட்டத்திற்கு இன்று 5 புதிய அறிவிப்புகளை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டார். தர்மபுரியில் நடந்த அரசு விழாவில் பேசிய ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:– 1. – சித்தேரி ஊராட்சியில் இருக்கக்கூடிய 63 மலைக்கிராமங்களில் வசிக்கின்ற பழங்குடியின மக்களும், கொளகம்பட்டி, சின்னாங்குப்பம், கோபிசெட்டிப்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் வாழுகின்ற பொதுமக்களும், பல்வேறு பணிகளுக்கு பாப்பிரெட்டிபட்டி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு செல்வதற்கான தூரம் அதிகமாக இருக்கும் என்று சொல்கிறார்கள். அதனால், இந்த கிராமங்கள் எல்லாம் அருகாமையில் இருக்கின்ற அரூர் […]

Loading