Uncategorized

4-வது ஆண்டாக உரையை புறக்கணித்து வெளியேறினார் கவர்னர் ஆர்.என்.ரவி

சென்னை, ஜன. 20: தமிழக சட்டசபை இன்று காலை கூடியது. 4வது ஆண்டாக உரையை புறக்கணித்து கவர்னர் ஆர்.என்.ரவி வெளியேறினார். ஒவ்வொரு ஆண்டும் தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் கவர்னர் உரையுடன் தொடங்குவது மரபாக இருந்து வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுவதற்காக கவர்னர் ஆர்.என்.ரவி காலை 9.10 மணிக்கு கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையான லோக் பவனில் […]

Loading

செய்திகள்

அரசுக்கு எதிரான தவறான குற்றச்சாட்டுகளை கவர்னர் வைத்துள்ளார்: அமைச்சர் ரகுபதி பேட்டி

சென்னை, ஜன. 20: அரசுக்கு எதிரான தவறான குற்றச்சாட்டுகளை கவர்னர் வைத்துள்ளார் என்று அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: மத்திய அரசின் பிரதிநிதியாக இருக்க வேண்டிய ஆளுநர், பா.ஜ.க.வின் பிரதிநிதியாக சட்டசபைக்கு வந்துள்ளார். முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதும் இறுதியில் தேசிய கீதம் பாடுவதும் சட்டசபையின் மரபு. ஆளுநர் தனது உரையை வாசிக்கும்போது மைக் ஆப் செய்யப்பட்டது என ஆளுநர் மாளிகை கூறியது முற்றிலும் தவறு. […]

Loading

செய்திகள்

கிராம மக்களுக்கு வீடு தேடி வந்து சிகிச்சைக்கு சிம்ஸ் மருத்துவமனை முன்னணி மருத்துவருடன் மருத்துவ பேருந்து வசதி அறிமுகம் தலைவர் ரவி பச்சமுத்து தகவல்

சென்னை, ஜன.20– கிராம மக்களுக்கு அத்தியாவசியமான மற்றும் முழுமையான மருத்துவ சேவைகளை வழங்கும், நோக்கத்தோடு இந்தியாவின் முதல் மருத்துவப் பேருந்தை ‘சிம்ஸ் ஹலோ டாக்டர் – ஹெல்த் ஆன் வீல்ஸ்’ என்ற பெயரில் தமிழ்நாட்டின் பிரபல மருத்துவமனைகளுள் ஒன்றான சிம்ஸ் மருத்துவமனை அறிமுகப்படுத்தியுள்ளது என்று தலைவர் ரவி பச்சமுத்து தெரிவித்தார். தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், விருகம்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.வி. பிரபாகர ராஜாமற்றும் எஸ்ஆர்எம் குழுமத்தின் தலைவர்டாக்டர். ரவி பச்சமுத்து ஆகியோர் […]

Loading

செய்திகள்

வரலாறு காணாத உச்சத்தில் விலை உயர்வு

சென்னை, ஜன. 20– சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் வரலாறு காணாத வகையில் உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது.தங்கம் விலை கடந்த மாதம் (டிசம்பர்) 15-ந்தேதி ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை தாண்டியது. அதன் பின்னர் விலை குறைந்த நிலையில் அதே மாதம் 22-ந்தேதியில் இருந்து மீண்டும் ஏறுமுகத்தில் உள்ளது. சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த சனிக்கிழமை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.1 லட்சத்து 6 ஆயிரத்து 240-க்கு விற்பனையானது.தொடர்ந்து வாரத்தின் முதல் நாளான நேற்று […]

Loading

செய்திகள்

சென்னை புத்தக காட்சியில் விருதுகள்: உதயநிதி வழங்கினார்

சென்னை, ஜன. 20– துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை நந்தனம் ஒம்.எம்.சி.ஏ உடற்கல்வியியல் கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வரும் 49–வது சென்னை புத்தகக் காட்சியில் நடைபெற்ற விழாவில் சிறந்த சிறுவர் அறிவியல் நூல், கவிதை இலக்கியம், தன்னம்பிக்கை நூல், பதிப்பாளர், புத்தக விற்பனையாளர், தமிழறிஞர், எழுத்தாளர், குழந்தை எழுத்தாளர் ஆகியோருக்கு விருதுகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் சிறந்த பதிப்பாளருக்கான பதிப்பகச் செம்மல் க.கணபதி விருதினை ஐந்திணை பதிப்பகத்தின் குழ.கதிரேசனுக்கும், சிறந்த புத்தக விற்பனையாளருக்கான பதிப்புச் […]

Loading

செய்திகள்

கவர்னர் ஏன் வெளிநடப்பு செய்தார்? மக்கள் மாளிகை விளக்கம்

சென்னை, ஜன.20-– தமிழக சட்டசபையில் உரையாற்றாமல் கவர்னர் ஆர்.என். ரவி வெளிநடப்பு செய்தது குறித்து விளக்கம் அளித்து மக்கள் மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது. ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கிய நிலையில், சட்டசபைக்கு வருகைதந்த கவர்னர் ஆர்.என். ரவி உரையாற்றாமல் வெளிநடப்பு செய்தார். சட்டசபையில் அரசு தயாரித்த உரையை கவர்னர் வாசிக்க மறுத்ததற்கான காரணங்கள் குறித்து விளக்கம் அளித்து மக்கள் மாளிகை (ஆளுநர் மாளிகை) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:– 1) ஆளுநரின் ஒலிவாங்கி (மைக்) மீண்டும், […]

Loading

சிறுகதை

சிறுகதை …. காந்தி – இர்வின் சாலை..! …. ராஜா செல்லமுத்து

” வணக்கம் அண்ணா, எங்க இருக்கீங்க?” என்று கேட்டான், சங்கர் ” வளசரவாக்கத்தில, நீங்க எங்க இருக்கீங்க?” என்று ராஜா கேட்க ” ஆசிரியர்கள் போராட்டத்திற்காக சென்னை வந்தோம் .காந்தி – இர்வின் சாலையிலே போராட்டம் நடக்குது” என்றான் சங்கர் ” என்னது காந்தி – இர்வின் சாலையா?” என்று கடகடவென சிரித்தான் ராஜா ” ஏன் இப்படிச் சிரிக்கிறீங்க?” ” உங்க போராட்டத்துக்கும் காந்தி – இர்வின் சாலைக்கும் ஒரு தொடர்பு இருக்கு “ என்று […]

Loading

செய்திகள்

வி.ஜி.பி. உலகத் தமிழ்ச்சங்கம் சார்பில் மலேசிய தமிழ்ப்பள்ளிகளுக்கு 6 திருவள்ளுவர் சிலைகள்

சென்னை, ஜன.20-– வி.ஜி.பி. உலகத் தமிழ்ச்சங்கத்தின் சார்பில், மலேசியா நாட்டில் உள்ள 6 தமிழ்ப் பள்ளிகளுக்கு திருவள்ளுவர் சிலைகளை அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடந்தது. மலேசிய நாட்டின் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள 6 தமிழ்ப்பள்ளிகளில், திருவள்ளுவர் சிலைகளை நிறுவுவதற்கு, வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் வி.ஜி.சந்தோசம் 6 திருவள்ளுவர் சிலைகளை, மலேசியா உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் தலைவர் பா.கு.சண்முகத்திடம் வழங்கினார். இதுகுறித்து வி.ஜி.சந்தோசம் கூறும்போது, ‘வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கம் உலகமெங்கும் […]

Loading

செய்திகள்

69–வது தேசிய பள்ளி சதுரங்க போட்டி: வேலம்மாள் பள்ளிக்கு வெள்ளிப்பதக்கம்

சென்னை, ஜன.20– ராஐஸ்தான்‌ மாநிலம் உதய்பூரில் நடைபெற்ற 69வது தேசிய பள்ளி சதுரங்க போட்டியில் சென்னை வேலம்மாள் பள்ளி வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது. இந்திய இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் அங்கீகரிக்கப்பட்டது இந்திய பள்ளி விளையாட்டு கூட்டமைப்பு. இந்த அமைப்பானது பள்ளி விளையாட்டு வீரர்களுக்கான போட்டிகளை நடத்தி ஏசியன், காமன்வெல்த், ஒலிம்பிக் போன்ற சர்வதேச தரத்திலான போட்டிகளுக்கு புதிய விளையாட்டு வீரர்களை உருவாக்கி வருகிறது. ஏசியன், காமன்வெல்த், ஒலிம்பிக் போன்ற சர்வதேச தரத்திலான போட்டிகளுக்கு […]

Loading

செய்திகள்

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி: திருப்பத்தூரில் கலெக்டர் துவக்கி வைத்தார்

திருப்பத்தூர், ஜன.20– திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், போக்குவரத்துத் துறை சார்பாக, நெடுஞ்சாலைத் துறை மற்றும் காவல் துறையுடன் இணைந்து, சாலை பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தலைக்கவசம் அணிவது குறித்தும், சீட் பெல்ட் அணிவது குறித்தும் விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் சிவசௌந்திரவல்லி கொடியசைத்து துவக்கி வைத்தார். 37வது தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு, 1.1.2026 முதல் 31.1.2026 வரை சாலை பாதுகாப்பு குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. […]

Loading