செய்திகள்

மெரினா உள்ளிட்ட கடற்கரைப் பகுதியில் குப்பைகளை கொட்டிய 241 பேருக்கு ரூ.1 லட்சத்து 90 ஆயிரம்- அபராதம்

சென்னை, ஜன.19– சென்னை மாநகராட்சிக்குட்பட்ட மெரினா, பெசன்ட் நகர் உள்ளிட்ட முக்கிய கடற்கரைப் பகுதிகளில் விதிகளை மீறி குப்பைகளை கொட்டிய 241 பேருக்கு ரூ.1 லட்சத்து 90 ஆயிரத்து 500 – அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள கடற்கரைப் பகுதிகளை பொதுமக்களின் பொழுதுபோக்கிற்கு உகந்த வகையில் மேம்படுத்திட மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், மெரினா கடற்கரை, பெசன்ட் நகர், திருவான்மியூர், பாலவாக்கம், நீலாங்கரை, அக்கரை, திருவொற்றியூர் கடற்கரை பகுதியில் […]

Loading

செய்திகள்

சென்னையில் மீண்டும் போராட்டம்: தூய்மை பணியாளர்கள் கைது

சென்னை, அக். 10– சென்னையில் மீண்டும் போராட்டம் நடத்த முயன்ற மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் கைது செய்யப்பட்டனர். சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட ராயபுரம், திரு.வி.க. நகர் ஆகிய மண்டலங்களின் தூய்மைப்பணி தனியாருக்கு வழங்கப்பட்டது. இதை எதிர்த்து கடந்த ஆகஸ்ட் மாதம் 1-ந் தேதி 200-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகை முன்பு போராட்டத்தில் குதித்தனர். இதனையடுத்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த துய்மை பணியாளர்கள் கடந்த ஆகஸ்ட் 13-ம் தேதி நள்ளிரவில் […]

Loading

செய்திகள்

ஒரு மாதத்தில் 46 ஆயிரம் தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி: சென்னை மாநகராட்சி தகவல்

சென்னை, செப்.16– சென்னையில் ஒரு மாதத்தில் 46 ஆயிரம் தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும் இதுவரை 12 ஆயிரத்து 255 தெருநாய்களுக்கு முழுமையான தகவல்கள் அடங்கிய மைக்ரோ சிப் பொருத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 2021 முதல் இதுவரை 1,34,674 நாய்களுக்கு வெறிநாய்க்கடிநோய்த்தடுப்பூசியும், 71,475 தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சைகளும் செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் தெருநாய்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காகவும், வளர்ப்பு நாய்களை முறைப்படுத்துவதற்காகவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முதலமைச்சர் […]

Loading

செய்திகள்

சென்னை மாநகராட்சி தூய்மைப்பணியை தனியாருக்கு வழங்க தடை இல்லை; ஐகோர்ட் உத்தரவு

சென்னை, ஆக. 20– சென்னை மாநகராட்சி தூய்மைப்பணியை தனியாருக்கு வழங்க தடை இல்லை என்று ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட ராயபுரம், திரு.வி.க. நகர் ஆகிய மண்டலங்களின் தூய்மைப்பணி தனியாருக்கு வழங்கப்பட்டதை எதிர்த்து, சென்னை ரிப்பன் மாளிகை முன்பு தூய்மைப்பணியாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 10-க்கும் மேற்பட்ட நாட்கள் இந்த போராட்டம் நீடித்தது. இதனிடையே நள்ளிரவில் துய்மை பணியாளர்கள் அனைவரும் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். அப்போது சிலரை குண்டுக்கட்டாக தூக்கிச்சென்று கைது செய்தனர். அப்போது போலீசாருடன் […]

Loading