செய்திகள்

டெல்லி கலவரம்: உமர் காலித், ஷர்ஜீல் இமாமுக்கு சுப்ரீம் கோர்ட் ஜாமீன் மறுப்பு

புதுடெல்லி, ஜன. 5: டெல்லி கலவர வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள உமா் காலித், ஷா்ஜீல் இமாமுக்கு ஜாமீன் வழங்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் குல்பிஷா பாத்திமா, மீரான் ஹைதர், ஷிபா உர் ரஹ்மான், முகமது சலீம் கான் மற்றும் ஷதாப் அகமது ஆகியோருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. வடகிழக்கு டெல்லியில் கடந்த 2020ம் ஆண்டு பிப்ரவரியில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு (சிஏஏ) எதிா்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டங்கள், வன்முறையாக மாறி நாடு முழுவதும் […]

Loading

செய்திகள்

வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் 19-வது உற்பத்தி மாநாடு: முன்னாள் நீதிபதி சதாசிவம் துவக்கி வைத்தார்

வேலூர், டிச. 11: இந்தியா உலகளாவிய உற்பத்தி மற்றும் கண்டுபிடிப்பு மையமாக உருவெடுத்து வருகிறது என்று சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி பி.சதாசிவம் பேசினார். வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் மெக்கானிக்கல் துறை சார்பில் 19- வது உலகளாவிய உற்பத்தி மற்றும் மேலாண்மை குறித்த மூன்று நாள் மாநாட்டை சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதியும், கேரளா முன்னாள் ஆளுநருமான துவக்கி வைத்து பி.சதாசிவம் பேசியதாவது: உற்பத்தித் துறை என்பது ஒரு தொழில்துறை மட்டுமல்ல. வலுவான பொருளாதாரத்திற்கு […]

Loading

செய்திகள்

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றாதது ஏன் விளக்கம் அளிக்க மதுரை ஐகோர்ட் உத்தரவு

மதுரை, டிச.10: திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் தீபம் ஏன் ஏற்றவில்லை என்பது பற்றி தமிழக அரசின் தலைமைச் செயலாளர், கூடுதல் டி.ஜி.பி. ஆகியோர் 17-ந்தேதி ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட் நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். மதுரை திருப்பரங்குன்றம் மலையில் இருக்கும் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உத்தர விடக்கோரி மதுரையை சேர்ந்த ராம ரவிக்குமார், மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கார்த்திகை தீப திருநாளன்று திருப்பரங்குன்றம் […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

சுப்ரீம் கோர்ட்டின் 53வது தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் பதவி ஏற்றார்

புதுடெல்லி, நவ.24: சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக இன்று சூர்யகாந்த் பதவி ஏற்றார். அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார். சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் நேற்றுடன் ஓய்வு பெற்ற நிலையில், 53வது தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் இன்று பொறுப்பேற்றார். டெல்லி ஜனாதிபதி மாளிகையில் உள்ள தர்பார அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு விழாவில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், பிரதமர் […]

Loading

செய்திகள்

சிபிஐ அலுவலகத்தில் தவெக நிர்வாகிகள் ஆஜர்

சென்னை, நவ. 24: கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக இன்று த.வெ.க. நிர்வாகிகள் சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். கரூர் வேலுச்சாமிபுரத்தில் செப்டம்பர் 27–ந் தேதி விஜய் பங்கேற்ற தவெக பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். 110 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை நெரிசல் சம்பவம் நடைபெற்றபோது அங்கு ஆம்புலன்ஸுடன் வந்திருந்த வாகன ஓட்டுநர்கள், உரிமையாளர்கள், […]

Loading

செய்திகள்

தெருநாய்கள் விவகாரத்தில் 7–ந்தேதி தீர்ப்பு: சுப்ரீம் கோர்ட்

புதுடெல்லி, நவ.3– தெரு நாய்கள் விவகாரம் தொடர்பான வழக்கில் 7ம் தேதி கூடுதலாக வழிகாட்டு நெறிமுறைகளுடன் தீர்ப்பு வழங்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தெரிவித்தனர். தெரு நாய் தொல்லை விவகாரத்தை சுப்ரீம் கோர்ட் தானாக முன்வந்து வழக்காக பதிவு செய்து விசாரித்து வருகிறது. இதில் தெரு நாய்களை பிடித்து கருத்தடை செய்து பிடித்த இடத்திலேயே விடுவிக்க கடந்த ஆகஸ்ட் மாதம் உத்தரவிட்டு இருந்தது. மேலும் இந்த விவகாரத்தில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் இணக்க […]

Loading

செய்திகள்

கூட்ட நெரிசலில் இறந்த 41 பேரின் குடும்பத்தையும் தத்தெடுப்போம்: டெல்லியில் ஆதவ் அர்ஜுனா பேட்டி

புதுடெல்லி, அக். 13– த.வெ.க. மாவட்டச் செயலாளர்களை கைது செய்து கட்சியை முடக்க தி.மு.க. முயற்சிக்கிறது என்று ஆதவ் அர்ஜுனா கூறினார். கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் கடந்த மாதம் 7-–ந் தேதி பிரசாரம் செய்தபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் பெண்கள், குழந்தைகள் உள்பட 41 பேர் பலியான சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த சம்பவம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், டெல்லியில் தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா […]

Loading

செய்திகள்

ஆசிரியர் பணியில் தொடர தகுதித் தேர்வு கட்டாயம்: சுப்ரீம் கோர்ட் உத்தரவு

புதுடெல்லி, செப்.1– ஆசிரியராகப் பணியில் தொடரவும், பதவி உயர்வு பெறவும் ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. டெட் எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு ஆண்டுதோறும் மத்திய, மாநில அரசுகளால் தனித்தனியாக நடத்தப்பட்டு வருகிறது. இதில் தேர்ச்சி பெறுவோர் மட்டுமே ஆசிரியராக பணியில் சேர முடியும் என்ற நிலை உள்ளது. இந்த நிலையில் அரசு உதவி பெறும் தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயமா […]

Loading

செய்திகள்

டெல்லியில் தெருநாய்களை காப்பகங்களில் அடைக்க தடை: பிடித்த இடத்திலேயே விட சுப்ரீம் கோர்ட் உத்தரவு

தெருநாய்கள் தொடர்பான வழக்குகளில் அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களும் பதில் அளிக்க உத்தரவு புதுடெல்லி, ஆக. 22– தெருநாய்களை காப்பகங்களில் அடைக்கும் உத்தரவை ரத்து செய்த சுப்ரீம் கோர்ட், பிடித்த நாய்களை மீண்டும் அதே இடத்தில் விட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. மேலும் தெருநாய்கள் தொடர்பான வழக்குகளில் அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களும் பதில் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர். புதுடெல்லியில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. நாய்க்கடியால் ‘ரேபிஸ்’ என்ற நோய் பரவி வருவதாக பத்திரிகைகளில் […]

Loading

செய்திகள்

அமைச்சர் ஐ.பெரியசாமி சொத்து குவிப்பு வழக்கு: சென்னை ஐகோர்ட் உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை

புதுடெல்லி, ஆக. 18– சொத்து குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சர் ஐ.பெரியசாமி விடுவிக்கப்பட்டதை ரத்து செய்த சென்னை ஐகோர்ட்டின் உத்தரவுக்கு சுப்ரீட் கோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது. 2006ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டு வரை ஐ. பெரியசாமி அமைச்சராக இருந்த காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக அமைச்சர் ஐ.பெரியசாமி அவரது மனைவி மற்றும் மகன்கள் மீது வழக்குத் தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றம், அமைச்சர் ஐ பெரியசாமி மற்றும் அவரது குடும்பத்தினரை […]

Loading