புதுடெல்லி, ஆக. 22– இந்தியா கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் பி. சுதர்சன் ரெட்டி நாளை மறுநாள் (24–ந்தேதி) தமிழகம் வரவிருக்கிறார். வருகிற செப்டம்பர் 9ம் தேதி துணை ஜனாதிபதி தேர்தல் நடைபெறுகிறது. மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக மகாராஷ்டிர கவர்னரும், தமிழகத்தைச் சோ்ந்த பாஜக மூத்த தலைவருமான சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார். இவரை எதிர்த்து தெலுங்கானாவைச் சேர்ந்தவரும் சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதியுமான சுதர்சன் ரெட்டி ‘இந்தியா கூட்டணி’ – எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். […]
![]()


