வானம் சாட்சியாக, பூமி சாட்சியாக அத்தனை தெய்வங்களின் சாட்சியாக நடக்கத் தயாராக இருந்தது, கடற்கரையில் அமைந்த திருக்கோயிலின் குடமுழுக்குத் திருவிழா. கண்ணுக்கெட்டிய தூரம் வரை, பெருங்கடல் சூழ்ந்திருந்தாலும் புனித நதிகளில் இருந்து தீர்த்தங்கள் கொண்டு வந்திருந்தனர், புண்ணியத் தலங்களிலிருந்து வந்த ஆன்மீகவாதிகள். கோயில் முழுவதும் பந்தல் போடப்பட்டு, ஆங்காங்கே சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்தனர், ஆன்மீகச் சொற்பொழிவாளர்கள் , அவர்களின் பக்திப் பேச்சில் மயங்கிக் கிடந்தனர் பக்தர்கள் . ஆன்மீகம், சொற்பொழிவு இது எதையும் கவனிக்காமல் தங்கள் வியாபாரம் மட்டுமே […]
![]()







