செய்திகள்

தனியார் பல்கலைக்கழகங்கள் சட்டம் வாபஸ்: தி.மு.க. அரசு சமூகநீதியிடம் மண்டியிட்டிருக்கிறது

சென்னை, அக். 26– தமிழ்நாட்டில் எழுந்த கொந்தளிப்பை சமாளிக்க முடியாமல் தி.மு.க. அரசு சமூகநீதியிடம் மண்டியிட்டிருக்கிறது என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– தமிழ்நாட்டில் இயங்கி வரும் தனியார் சுயநிதி கல்லூரிகள், அரசு உதவி பெறும் தனியார் கல்லூரிகள் ஆகியவற்றை தனியார் பல்கலைக்கழகங்களாக்க அனுமதிக்கும் வகையில் நிறைவேற்றப்பட்ட சட்டத் திருத்த முன்வடிவை திரும்பப் பெறுவதாக தி.மு.க. அரசு அறிவித்திருக்கிறது. சமூகநீதியை படுகொலை செய்யும் செயலுக்கு எதிராக பா.ம.க. […]

Loading

செய்திகள்

மயிலை புனித சூசையப்பர் தொடக்கப் பள்ளியில்

சென்னை, ஆக 26– முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை, மயிலாப்பூர், புனித சூசையப்பர் தொடக்கப் பள்ளியில் உலகிற்கே முன்னோடியான முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை, நகர்புற பகுதிகளில் செயல்படும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 5–ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு விரிவுபடுத்தி தொடங்கி வைத்தார். இனி தமிழ்நாட்டில் செயல்படுகின்ற 37 ஆயிரத்து 416 அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளிகளில் படிக்கின்ற 20 லட்சத்து 59 ஆயிரம் மாணவர்கள் தினந்தோறும் […]

Loading

செய்திகள்

தூய்மைப் பணியாளர்கள் என்ன தேச விரோதிகளா? விஜய் கண்டனம்

சென்னை, ஆக. 14– தங்களின் உரிமைகளுக்காக அறவழியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தூய்மைப் பணியாளர்களை அராஜகப் போக்குடன் மனிதாபிமானமற்ற முறையில் இரவோடு இரவாக கைது செய்த தி.மு.க. அரசுக்கு தவெக தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். குண்டுக் கட்டாக இழுத்துச் சென்று கைது செய்த போது பெண் தூய்மைப் பணியாளர்கள் மயக்கம் அடைந்ததோடு மட்டுமல்லாமல், அவர்கள் படுகாயம் அடைந்திருப்பதாகவும் செய்திகள் வந்துள்ளன. நள்ளிரவில் நடைபெற்ற இந்தக் கைது நடவடிக்கையைப் பார்க்கும் போது மனசாட்சியுள்ள எவராலும் தாங்கிக்கொள்ள […]

Loading

செய்திகள்

2ம் கட்டமாக 17 தொகுதிகளை வெளியிட்டார் அமைச்சர் மு.பெ.சாமிநாதன்

சென்னை, ஆக. 14– ‘அண்ணல் அம்பேத்கரின் ஆக்கங்கள்’ – தமிழ்மொழி பெயர்ப்பு இரண்டாம் கட்டமாக 17 தொகுதிகளை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வெளியிட்டார். இந்திய அரசமைப்புச் சட்டத்தின் தந்தையும் முற்போக்கு சமத்துவ இந்தியாவின் சிற்பியுமான அண்ணல் அம்பேத்கர் சமூக ஏற்றத்தாழ்வுகளை நீக்கி சமத்துவ சமுதாயம் உருவாக்க பாடுபட்டவர். நம்மை முன்னேறவிடாது இறுகப் பிடித்து இன்னல்கள் பல விளைவிக்கும் சாதி எனும் கோட்பாட்டை நீக்கிட வேண்டும் என்று சமத்துவ முரசு கொட்டியவர். சாதி, சமயங்கள், […]

Loading

செய்திகள்

5 நாள் போராட்டம் முடிவுக்கு வந்தது: ஆணவ படுகொலை செய்யப்பட்ட கவின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு

நெல்லை, ஆக. 1– ஆணவ படுகொலை செய்யப்பட்ட கவினின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலத்தை சேர்ந்தவர் சந்திரசேகர், விவசாயி. இவருடைய மனைவி தமிழ்செல்வி, பஞ்சாயத்து யூனியன் பள்ளி ஆசிரியை. பணிக்கு செல்ல வசதியாக தூத்துக்குடியில் வசித்து வருகிறார்கள்.இவர்களுடைய மூத்த மகன் கவின் செல்வகணேஷ் (வயது 27). இவர் தகவல் தொழில்நுட்ப என்ஜினீயராக சென்னையில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். தற்போது சொந்த ஊருக்கு வந்திருந்த கவின் கடந்த 27-ந்தேதி […]

Loading