சென்னை, ஜூலை.9- 2026 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கும், அண்ணா தி.மு.க. கூட்டணிக்கும் இடையேதான் போட்டி என்று திருமாவளவன் கூறியுள்ளார். தமிழகத்தில் பல்வேறு அரசு துறைகளின் கீழ் இயங்கும் பள்ளி-கல்லூரி விடுதிகள் ‘சமூக நீதி விடுதிகள்’ என்று அழைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதற்காக அவரை சென்னை அண்ணா அறிவாலயத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று சந்தித்து நன்றியும், பாராட்டும் தெரிவித்தார். அப்போது பொதுச்செயலாளர் சிந்தனை செல்வன், துணை பொதுச்செயலாளர்கள் எஸ்.எஸ்.பாலாஜி, […]
![]()


