செய்திகள்

துபாயிலிருந்து கோவை வந்த விமானத்தில் கடத்தப்பட்ட சிகரெட் பறிமுதல்: 7 பேர் கைது

கோவை, ஆக. 23– துபாயிலிருந்து கோவை வந்த விமானத்தில் கடத்தி வரப்பட்ட சிகரெட் பண்டல்களை பறிமுதல் செய்ய சுங்கத்துறை அதிகாரிகள் 7 பேரை கைது செய்தனர். கோவை விமான நிலையத்தில் எப்போதும் போல், சுங்கத்துறை அதிகாரிகள், உளவுத்துறை போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது துபாயில் இருந்து வந்த விமானத்தில் இறங்கிய பயணிகள் சிலரின் நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்பட்டதும். உடனடியாக அவர்களை தடுத்து நிறுத்திய அதிகாரிகள் அவர்களிடம் சோதனை நடத்தினர். பல கட்ட சோதனைகளுக்கு பின்னர் அவர்கள் […]

Loading

செய்திகள்

3 மாதத்தில் 45,861 உறுப்பு தான உறுதிமொழிகள்: ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை உலக சாதனை

சென்னை, ஆக 10– நடப்பு ஆண்டில், ஒரே நாளில் அதிக எண்ணிக்கையிலானோர் உறுப்பு தானம் செய்ய முன் வந்ததற்கான கின்னஸ் உலக சாதனையை படைத்தது, கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை. 3 மாதங்களில் அதிக எண்ணிக்கையிலான உறுப்பு தான உறுதிமொழிகளைப் பெற்றதற்காக இந்த மருத்துவமனை ஒரு புதிய உலக சாதனையை படைத்துள்ளது. பிப்ரவரி முதல் ஏப்ரல் வரை 45,861 பேரிடமிருந்து உறுப்புதான உறுதிமொழிகளைப் பெற்றுள்ளது. இந்த முயற்சிக்கு வேர்ல்டு ரெக்கார்ட்ஸ் யூனியன் அமைப்பு அதிகாரப்பூர்வ சான்றளித்துள்ளது. சென்னை […]

Loading

செய்திகள்

கோவை காவல் நிலையத்தில் ஒருவர் உயிரிழப்பு

கோவை, ஆக. 6– கோவை காவல் நிலையத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை பெரிய கடைவீதியில் பி1 காவல்நிலையம் அமைந்துள்ளது. இந்த காவல்நிலையத்தில் நேற்றிரவு 11 மணியளவில் ஒருவர் புகாரளிக்க வந்ததாகவும், இன்று காலையில் காவல் நிலையத்திலேயே அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. எஸ்.ஐ. அறையில் அந்த நபர் தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் காவல் நிலையத்தில் தற்கொலை […]

Loading

செய்திகள்

22, 23-ந் தேதிகளில் கோவை, திருப்பூர் மாவட்டங்களுக்கு செல்கிறார் மு.க.ஸ்டாலின்

சென்னை, ஜூலை 20– முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வருகிற 22-ந் தேதி சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை செல்கிறார். கோவை விமான நிலையத்தில் முதலமைச்சருக்கு தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர். பின்னர் அங்கிருந்து கார் மூலம் திருப்பூர் மாவட்டம் செல்லும் அவர், அங்கு பல்லடம் மற்றும் உடுமலையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். திருப்பூர் மாநகராட்சி சார்பில் கட்டப்பட்ட கோவில்வழி பஸ் நிலையத்தை […]

Loading

செய்திகள்

கோவை குண்டு வெடிப்பு வழக்கு: 27 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி சாதிக் ராஜா கைது

கோவை, ஜூலை 10– கோவையில் கடந்த 1998ல் நடந்த தொடர் வெடிகுண்டு வழக்கில் முக்கிய குற்றவாளி டெய்லர் ராஜா (எ) சாதிக் ராஜா 27 ஆண்டுகளுக்கு பின் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து கோவை நகர் முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. 1998 ஆம் ஆண்டு, பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே. அத்வானி கோவையில் பிரச்சாரத்திற்கு வந்திருந்தபோது, அவர் பேச இருந்த மேடை அருகே திடீரென குண்டு வெடித்தது. அதை தொடர்ந்து, 14 இடங்களில் தொடர்ச்சியாக […]

Loading

செய்திகள்

அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் தி.மு.க. அரசு கடன் வாங்கியது குறித்து விசாரணைக் கமிஷன்

கோவையில் நடைப்பயிற்சியின்போது எடப்பாடி பேட்டி கோவை, ஜூலை 8– “2024–25ம் ஆண்டு உபரி வருவாய் கிடைத்த நிலையிலும் தி.மு.க. அரசு கடன் வாங்கியுள்ளது. இதுதொடர்பாக அண்ணா தி.மு.க. ஆட்சி அமைந்ததும் விசாரணைக் கமிஷன் அமைக்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். கோவை ரேஸ்கோர்ஸில் இன்று காலை நடைப்பயிற்சி மேற்கொண்ட அவர் பொதுமக்களை சந்தித்துப் பேசியபோது இதனை தெரிவித்தார். சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக, ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற தலைப்பிலான சுற்றுப் பயணத்தை அண்ணா தி.மு.க. […]

Loading

செய்திகள்

கோவை கலெக்டர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

கோவை, ஜூலை 2– கோவை கலெக்டர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை கலெக்டர் அலுவலகத்தில், புதிய கட்டிடம் மற்றும் பழைய கட்டிடம் என்று 2 கட்டிடங்கள் உள்ளன. இதில் புதிய கட்டிடத்தில் கலெக்டர் அறை, மாவட்ட வருவாய் அதிகாரி அறை மற்றும் குடிமைப்பொருள் வழங்கல் துறை, கனிமவளத்துறை, வேளாண்மைத்துறை உள்பட பல்வேறு அலுவலகங்கள் உள்ளன.அதுபோன்று பழைய கட்டிடத்தில் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டு, சமூக நலத்துறை, நிலவரித்துறை, தமிழ்வளர்ச்சித்துறை, உள்பட பல்வேறு துறைகளும் […]

Loading