சென்னை, நவ 10– ஒன்றிய அரசு ஒதுக்கீட்டின் படி நியாய விலைக் கடைகளுக்கு கோதுமை தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. நவம்பர் மாதத்திற்கான கோதுமை ஒதுக்கீடு முழுதும் 15–ந்தேதிக்குள் அனைத்து நியாயவிலைக் கடைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு விடும். நடப்பாண்டு குறுவைப் பருவத்தில் வரலாற்றுச் சாதனையாக 13.48 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்து 1.75 லட்சம் நெல் விவசாயிகளுக்கு ரூ 3249.38 கோடி பணம் வழங்கப்பட்டுள்ளது என்று உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி […]
![]()


