செய்திகள்

விஜய்யை கைது செய்ய வலியுறுத்தி கரூரில் தமிழ்நாடு மாணவர் சங்கம் போஸ்டர்

கரூர், செப். 29– கரூரில் தவெக தலைவர் விஜய்யை கைது செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு மாணவர் சங்கம் சார்பில சுவரொட்டிகள் ஒட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் வேலுசாமிபுரத்தில் நேற்று முன்தினம் நடந்த தவெக பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 41ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் கரூர் கோவை சாலை, ஈரோடு சாலை, வேலுசாமிபுரம், காந்திகிராமம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தமிழ்நாடு மாணவர் சங்கம் சார்பில் விஜய்யை கைது செய்ய வலியுறுத்தி சுவரொட்டிகள் ஒட்டியிருப்பது […]

Loading

செய்திகள்

சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் 13 கிலோ கஞ்சா பறிமுதல்: கேரளா ஆசாமி கைது

சென்னை, ஆக. 25– விசாகப்பட்டினத்திலிருந்து சென்னைக்கு ரெயிலில் கடத்திவரப்பட்ட 13.8 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் ஒருவரை கைது செய்தனர். சென்னை சென்ட்ரல் ரெயில்நிலையத்தில் குற்றச்சம்பவங்களை தடுக்கும் வகையிலும், போதைப்பொருள் கடத்தப்படுவதை தடுக்கும் வகையிலும் சென்னை சென்ட்ரல் ரெயில்வே பாதுகாப்புப்படை போலீசார் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஆபரேஷன் நர்கோஸின் கீழ் ஆர்.பி.எப். போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது விசாகப்பட்டினத்திலிருந்து சென்னை சென்ட்ரலுக்கு வந்த கோரமண்டல் […]

Loading

செய்திகள்

80 மீனவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கை: மத்திய அமைச்சருக்கு ஸ்டாலின் கடிதம்

சென்னை, ஆக. 7– ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள், நேற்று (6–ந் தேதி) இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இலங்கைக் காவலில் உள்ள அனைத்து தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுத்திட வேண்டுமென்று வலியுறுத்தி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கருக்கு நேற்று (6–ந் தேதி) கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், இலங்கைக் கடற்படையினரால் 6–ந் தேதி அன்று அதிகாலை 14 இந்திய […]

Loading

செய்திகள்

நெடுந்தீவு அருகே நடுக்கடலில் தமிழக மீனவர்கள் 4 பேர் கைது

இலங்கை கடற்படையினர் தொடர் அட்டூழியம் ராமேஸ்வரம், ஆக. 4– நெடுந்தீவு அருகே நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது 4 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவதும், அவர்களின் படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவதுமான சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது. இதன் காரணமாக மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படும் நிலை வருகிறது. இந்நிலையில் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 4 மீனவர்கள் நெடுந்தீவு அருகே மீன் […]

Loading

செய்திகள்

ரூ.1 கோடி ‘டிஜிட்டல்’ கைது மோசடி: 9 பேருக்கு ஆயுள் தண்டனை

புதுடெல்லி, ஜூலை 19– இந்தியாவில் முதல்முறையாக, 108 பேருரிடம் ரூ.1 கோடி டிஜிட்டல் மோசடி செய்து கைது செய்யப்பட்ட 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து மேற்குவங்க நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது. ‘ஆன்லைன்’ மூலமாக சைபர் குற்றவாளிகள் பண மோசடி செய்வதை தடுக்க, சைபர் குற்றப்பிரிவு போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். டிஜிட்டல் முறையில் பண மோசடியில் ஈடுபடும் கும்பலை கைது செய்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த 2024ம் ஆண்டு அக்டோபர் மாதம் […]

Loading

செய்திகள்

வண்டலூர் தனியார் காப்பகத்தில் 18 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: 3 பேர் கைது

சென்னை, ஜூலை 12– வண்டலூர் அருகே தனியார் குழந்தைகள் காப்பகத்தில் 18 சிறுமிகள் பாலியல் தொல்லைக்கு ஆளான விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக 3 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அருகே தனியார் குழந்தைகள் நல காப்பகம் செயல்பட்டு வருகிறது. வண்டலூர் அருகே செயல்பட்டு வரும் குழந்தைகள் காப்பகத்தில், 18 சிறுமிகள், தங்கி படித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த விடுதியை உரிமையாளர் அருள்தாஸ் மற்றும் அவரது மகள் […]

Loading

யானை தந்தத்தை விற்க முயன்ற 8 பேர் கைது
செய்திகள்

ரூ.2 கோடி மதிப்பிலான யானை தந்தத்தை விற்க முயன்ற 8 பேர் கைது

செங்கல்பட்டு, ஜூலை.6- ரூ.2 கோடி மதிப்பிலான யானை தந்தத்தை கடத்தி விற்க முயன்ற பெண் உள்பட 8 பேரை செங்கல்பட்டு சுங்கச்சாவடி அருகே வனத்துறையினர் கைது செய்தனர். சென்னை ஜமாலியா பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 57). இவர் கடந்த 1983-ம் ஆண்டு நைஜீரியா நாட்டுக்கு வேலைக்காக சென்றார். அப்போது, அங்கு யானை தந்தம் கடத்தலில் ஈடுபட்ட அந்த நபர், அங்கிருந்து 2 யானை தந்தங்களை தமிழகத்துக்கு கடத்தி வந்துள்ளார். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக அதை […]

Loading

தமிழக மீனவர்கள் கைது
செய்திகள்

தொடரும் அட்டூழியம்: ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரை கைது செய்த இலங்கை கடற்படை

ராமேஸ்வரம், ஜூலை 1– ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். ராமேஸ்வரம் மீன்பிடி துறை முகத்தில் இருந்து நேற்று காலை 500 -க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். நள்ளிரவில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துகொண்டிருந்தபோது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் தடுத்து நிறுத்தி விரட்டியடித்தனர். இதனை தொடர்ந்து ஒரு படகையும் அதில் இருந்த 7 மீனவர்களையும் சிறைபிடித்தனர். சிறைபிடித்த மீனவர்களை நடுக்கல் […]

Loading