ஊ… ஊ…. என்ற பெண்களின் குலவைச் சத்தம். டூ… டூ … என்ற பம்பை, உடுக்கைகளின் சத்தம் கங்கை அம்மன் கோயில் முழுவதும் கேட்டுக் கொண்டிருந்தது. அந்தப் பகுதியில் கூழ் ஊற்றும் விழா அமர்க்களமாக நடந்து கொண்டிருந்தது. மக்களெல்லாம் கோயில் முன்கூடியிருந்தார்கள். அண்டா அண்டாவாக கூழ் நிரம்பியிருந்தது. கற்பூரம், தேங்காய், தீபம் காட்டி அதனுடன் கூழையும் வைத்து அபிஷேகம் செய்து கொண்டிருந்தார், கோயில் பூசாரி. ” இந்தக் கூழ் ஊத்துறதுனால என்ன பலன்? எதுக்காக இந்தக் கூழ் […]
![]()


