செய்திகள்

அமைச்சர் ஐ.பெரியசாமி பேச்சுக்கு காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை பதிலடி

சென்னை, ஜன. 12– ஆட்சி அதிகாரத்தில் பங்கு இல்லை என அமைச்சர் ஐ.பெரியசாமி பேசியது அவருடைய சொந்த கருத்து. ஆனால் கூட்டணி அதிகாரம் முடிவு எடுப்பது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மட்டுமே என காங்கிரஸ் மாநில தலைவர் செல்வபெருந்தகை கூறியுள்ளார். தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த சூழ்நிலையில், ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்ற குரல் காங்கிரஸில் எழுந்து திமுக கூட்டணிக்குள் குழப்பம் நீடித்து […]

Loading

செய்திகள்

காங்கிரஸ் மூத்த தலைவர் சுரேஷ் கல்மாடி காலமானார்

புனே, ஜன. 6– காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சுரேஷ் கல்மாடி (வயது 81) இன்று காலமானார். இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் முன்னாள் தலைவரான கல்மாடி, புனேவில் உள்ள தீனநாத் மங்கேஷ்கர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நீண்டகால உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் இன்று அதிகாலை 3.30 மணியளவில் காலமானதாக அவரது அலுவலகத்தில் இருந்து அறிக்கை வெளியிட்டு உறுதிபடுத்தினர். சுரேஷ் கல்மாடியின் உடல் புனேவின் எரண்ட்வானேயில் உள்ள அவரது வீட்டில் பிற்பகல் […]

Loading

செய்திகள்

தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சு நடத்த காங்கிரஸ் 5 பேர் குழு அமைப்பு

சென்னை, நவ. 22– தமிழக சட்டசபை தேர்தலையொட்டி தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சு நடத்த காங்கிரஸ் குழு அமைத்துள்ளது. தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையொட்டி அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை உள்ளிட்ட தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளன. காங்கிரஸ் கட்சி, நடிகர் விஜயின் தவெக உடன் கூட்டணி பற்றி பேச இருப்பதாக, அவ்வப்போது தகவல்கள் பரவி வந்தன. இதேபோல பீகார் தேர்தலில் ஏற்பட்ட படுதோல்வி காரணமாக காங்கிரஸ் கட்சி, தி.மு.க. கூட்டணியிலிருந்து விலகுகிறது எனவும் […]

Loading

செய்திகள்

பீகார் தேர்தல்: இந்தியா கூட்டணி முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ்

பாட்னா, அக். 23– பீகார் சட்டசபை தேர்தலில் இந்தியா கூட்டணி முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பை காங்கிரஸ் மூத்த தலைவர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார். பீகார் மாநில சட்டசபைக்கு அடுத்த மாதம் 6 மற்றும் 11ம் தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. பதிவான வாக்குகள் 14ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகின்றன. ஆளும் ஐக்கிய ஜனதா தளம் – பா.ஜ.க. கூட்டணி அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு […]

Loading

செய்திகள்

ஐபிஎஸ் அதிகாரி பூரன் குமாரின் குடும்பத்தினரை சந்தித்து ராகுல் ஆறுதல்

ஹரியானா, அக். 14– தற்கொலை செய்துகொண்ட ஐபிஎஸ் அதிகாரி பூரன் குமாரின் குடும்பத்தினரை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சந்தித்து ஆறுதல் கூறினார். ஹரியானாவில் காவல்பயிற்சி மைய ஐஜி பூரன்குமார்(52) கடந்த 7ம் தேதி தமது வீட்டில் துப்பாக்கியால் சுட்டுக் தற்கொலை செய்துகொண்டார். அதற்கு முன்பாக அவர் 8 பக்கம் கொண்ட கடிதம் ஒன்றை எழுதி வைத்து இருந்தார். ஹரியானா டிஜிபி சத்ருஜீத் கபூர் மற்றும் ரோஹ்தக் எஸ்பி நரேந்திர பிஜர்னியா உள்பட 8 மூத்த ஐபிஎஸ் […]

Loading

செய்திகள்

8 ஆண்டுகளுக்குப் பிறகு மனம் திருந்திய மத்திய அரசுக்கு நன்றி: ஜிஎஸ்டி மாற்றம் குறித்து ப.சிதம்பரம் கருத்து

மதுரை, செப். 4– 8 ஆண்டுகளுக்குப் பிறகு மனம் திருந்தி ஜிஎஸ்டி வரியை குறைத்த மத்திய அரசை பாராட்டுவதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:– இந்த மாற்றத்தை வரவேற்கிறேன். 8 ஆண்டுகளுக்குப் பிறகு தங்களுடைய தவறை உணர்ந்த மத்திய அரசை நான் பாராட்டுகிறேன். 8 ஆண்டுகளுக்கு முன்னால் இந்த சட்டத்தை அமல்படுத்தியபோது இது தவறு, இது போன்ற பல்வேறு வரிவிகிதங்களை வைக்காதீர்கள் என்று அப்போதே நாங்கள் […]

Loading

செய்திகள்

‘‘மக்களவைத் தேர்தலில் மோடி மோசடி’’: ராகுல் குற்றச்சாட்டு

புதுடெல்லி, ஆக 2– போலி வாக்காளர்கள் மூலம் மோசடி செய்து மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி காட்டமாகக் குற்றச்சாட்டி உள்ளார். பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மூலமாக பல லட்சம் வாக்காளர்களை, வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க தேர்தல் ஆணையம் முயற்சிக்கிறது. மகாராஷ்டிரத்தை போன்று பீகாரிலும் வாக்கு திருட்டுக்கு பாஜக முயற்சிக்கிறது என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. இதனிடையே, நாடாளுமன்ற வளாகத்தில் […]

Loading

செய்திகள்

பாகிஸ்தான் தாக்குதலில் பலியானவர்களின் 22 குழந்தைகளைத் தத்தெடுக்கும் ராகுல்

புதுடெல்லி, ஜூலை 29– ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத் தொடர்ந்து, பாகிஸ்தான் நடத்திய ஷெல் தாக்குதலில் பெற்றோர்களை இழந்த 22 குழந்தைகளை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தத்தெடுக்க முடிவு செய்துள்ளார். பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய ராணுவம் கடந்த மே மாதம் 7–ந்தேதி ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டது. முப்படைகளும் இணைந்து நள்ளிரவு 1.05 மணி முதல் 2.30 மணி வரை 25 நிமிடத்திற்குள் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள […]

Loading

செய்திகள்

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு முன்னுரிமை: 10 ஆண்டுகளில் ரூ.3 லட்சம் கோடி நிதி

பிரதமர் மோடி பேச்சு தூத்துக்குடி, ஜூலை.27- ”மத்திய அரசு, கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்திற்கு, 3 லட்சம் கோடி ரூபாயை நிதியை வழங்கியுள்ளது. இது, முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசு வழங்கிய தொகையுடன் ஒப்பிடும் போது, 3 மடங்கு அதிகம். நீலப்புரட்சி வாயிலாக, மீனவர்களின் பொருளாதாரத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று தூத்துக்குடியில் ரூ.4,900 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசினார். இங்கிலாந்து, மாலத்தீவு நாடுகளில் கடந்த […]

Loading

செய்திகள்

நானே போரை நிறுத்தினேன்:25வது முறையாக டிரம்ப் பேச்சு

மோடி மவுனம் காப்பது ஏன்? காங்கிரஸ் கேள்வி வாஷிங்டன், ஜூலை 23– அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போரை தான் மத்தியஸ்தம் செய்து நிறுத்தியதாகவும், இதனால் மிகப்பெரிய அணு ஆயுதப் போர் உருவாவது தவிர்க்கப்பட்டதாகவும் கூறினார். இவ்வாறு அவர் கூறுவது 25வது முறையாகும் என்பதால் இது வெள்ளி விழா என்று காங்கிரஸ் கட்சி விமர்ச்சித்துள்ளது. வெள்ளை மாளிகையில் நேற்று இரவு நடைபெற்ற நிகழ்ச்சியின்போது, இந்தியா – பாகிஸ்தான், காங்கோ – ருவாண்டா […]

Loading