புதுக்கோட்டை, நவ. 10– புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் ரூ.223 கோடி மதிப்பில் முடிவுற்ற 577 திட்டப்பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ரூ.202 கோடியில் 103 புதிய திட்டப் பணிகளுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். 43 ஆயிரத்து 993 பயனாளிகளுக்கு ரூ.341 கோடியே 77 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் வழங்கினார். நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:– புதுக்கோட்டை மாவட்டத்தில் சுமார் 37 ஆயிரம் பேருக்கு பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. தகுதியுள்ள மகளிர் அனைவருக்கும் மாதந்தோறும் ரூ.1000 […]
![]()


