மதுரை, நவ. 25: தி.மு.க அரசின் மெத்தனபோக்கின் நடவடிக்கையால் தான் டெல்டா மாவட்டங்களில் 6 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட நெல்மணிகள் மழையால் நனைந்து விவசாயகள் கண்ணீர் கடலிலே தற்பேது தத்தளித்து கொண்டிருக்கிறார்கள் என எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். அண்ணா தி.மு.க. ஜெயலலிதா பேரவை செயலாளரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளருமான, சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஆர்.பி.உதயகுமார் தலைமையில் டி.குன்னத்தூர் அம்மா கோவிலில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. […]
![]()


