செய்திகள்

திருச்சியில் பிரதமர் மோடியை சந்தித்த எடப்பாடி பழனிசாமி: 3 கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார்

 திருச்சி, ஜூலை 27– திருச்சியில் பிரதமர் மோடியை, அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து, 3 முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார்.மனுவை பெற்றுக் கொண்ட பிரதமர் மோடி பரிசீலித்து ஆவண செய்வதாக உறுதி அளித்தார். தமிழகத்தில் வருகிற 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதில் அண்ணா தி.மு.க. தலைமையில் பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்க உள்ளன. இதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வந்து கூட்டணியை […]

Loading

செய்திகள்

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி கிடையாது: எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்

சிதம்பரம், ஜூலை 16– தமிழகத்தில் கூட்டணி ஆட்சி கிடையாது என்று எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக கூறினார். சிதம்பரத்தில் அண்ணா தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: கூட்டணி ஆட்சி என்று அமித்ஷா சொல்லவில்லை: எங்கள் கூட்டணியே ஆட்சி அமைக்கும் என்றுதான் அமித்ஷா சொல்கிறார். அமித்ஷா சொல்வதை திரிக்க கூடாது. எங்கள் கூட்டணியில் பாஜக உள்ளது. இன்னும் சில கட்சிகள் உள்ளன. அதிமுக, பாஜக, கூட்டணியை பொறுத்தவரை கூட்டணி ஆட்சி கிடையாது. […]

Loading

செய்திகள்

அரியலூர் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

அரியலூர், ஜூலை.16- அண்ணா தி.மு.க. ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்பட்ட விவசாயிகளுக்கான மும்முனை மின்சாரத்தை தி.மு.க. அரசு நிறுத்தி விட்டது என்று அரியலூரில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார். தமிழ்நாட்டில் 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு முன்னாள் முதலமைச்சரும், அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரச்சார பயணத்தை மேற்கொண்டு வருகிறார். அதன்படி அரியலூர் மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொள்ள நேற்று அரியலூருக்கு எடப்பாடி பழனிசாமி வருகை தந்து, ஒரு ஓட்டலில் […]

Loading

செய்திகள்

24–-ந் தேதி முதல் ஆகஸ்ட் 8-ந் தேதி வரை எடப்பாடி பழனிசாமி 2-ம் கட்ட சுற்றுப்பயணம்

சென்னை, ஜூலை 14–- எடப்பாடி பழனிசாமி 2-ம் கட்டமாக வருகிற 24-ந்தேதி முதல் அடுத்த மாதம் ஆகஸ்ட் 8-ந்தேதி வரை 36 சட்டமன்ற தொகுதிகளுக்கு சுற்றுப்பயணம் செல்ல உள்ளதாக அண்ணா தி.மு.க. தலைமைக்கழகம் அறிவித்துள்ளது. அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் கடந்த 7-ந் தேதி முதல் தொகுதிவாரியாக சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அதன்படி கோவை, விழுப்புரம், கடலூர், தஞ்சை, மயிலாடுதுறை, நாகை ஆகிய 7 மாவட்டங்களில் உள்ள […]

Loading

செய்திகள்

மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் பிரச்சாரத்தை துவக்கினார் எடப்பாடி பழனிசாமி

மேட்டுப்பாளையம், ஜூலை 7– முன்னாள் முதலமைச்சரும், அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி இன்று “மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற பிரச்சாரத்தை மேட்டுப்பாளையத்தில் இருந்து தொடங்கினார். கார் மூலம் மேட்டுப்பாளையம் வந்த எடப்பாடி பழனிசாமிக்கு கோவை மாவட்ட எல்லையில் சின்னகள்ளிப்பட்டியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கோவை வடக்கு மாவட்ட செயலாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் எம்.எல்.ஏ., மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.செல்வராஜ் ஆகியோர் தலைமையில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலுக்கு சென்ற எடப்பாடி பழனிசாமி, அம்மனை […]

Loading

செய்திகள்

அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் தி.மு.க. அரசு கடன் வாங்கியது குறித்து விசாரணைக் கமிஷன்

கோவையில் நடைப்பயிற்சியின்போது எடப்பாடி பேட்டி கோவை, ஜூலை 8– “2024–25ம் ஆண்டு உபரி வருவாய் கிடைத்த நிலையிலும் தி.மு.க. அரசு கடன் வாங்கியுள்ளது. இதுதொடர்பாக அண்ணா தி.மு.க. ஆட்சி அமைந்ததும் விசாரணைக் கமிஷன் அமைக்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். கோவை ரேஸ்கோர்ஸில் இன்று காலை நடைப்பயிற்சி மேற்கொண்ட அவர் பொதுமக்களை சந்தித்துப் பேசியபோது இதனை தெரிவித்தார். சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக, ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற தலைப்பிலான சுற்றுப் பயணத்தை அண்ணா தி.மு.க. […]

Loading

செய்திகள்

போலீசார் தாக்கியதில் உயிரிழந்த காவலாளியின் தாயாருக்கு எடப்பாடி பழனிசாமி ஆறுதல்

மதுரை, ஜூலை 3–- போலீசார் தாக்கியதில் உயிரிழந்த காவலாளி அஜித்குமாரின் தாயாரிடம் தொலைபேசியில் பேசிய எடப்பாடி பழனிசாமி ஆறுதல் கூறினார். நீதி கிடைக்க துணை நிற்போம் எனவும் உறுதி அளித்தார். சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரத்தை சேர்ந்த அஜித்குமார் (வயது 27) என்ற கோவில் காவலாளி, காரில் இருந்த நகைகள் மாயம் குறித்த புகாரில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவரை போலீசார் அடித்துக்கொன்ற சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், அண்ணா தி.மு.க. […]

Loading