செய்திகள்

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணியில்அதிகாரிகள் மெத்தனமாக செயல்படுகிறார்கள்:எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

சேலம், நவ.15-– வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணியில் அதிகாரிகள் மெத்தனமாக செயல்படுகிறார்கள் என்றும், தமிழகத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணியில் குளறுபடி நடப்பதாகவும் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார். அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் சேலம் சென்றார். சேலம் விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-– பீகார் சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெற்று இருக்கிறது. […]

Loading

செய்திகள்

அண்ணா தி.மு.க. சார்பில் 15–ந் தேதி ஆர்ப்பாட்டம்: எடப்பாடி அறிவிப்பு

சென்னை, நவ.13- பள்ளிபாளையம் நகராட்சி பைபாஸ் சாலையில் உள்ள மதுக்கடையை அகற்றக்கோரி அண்ணா தி.மு.க. சார்பில் நாளை மறுநாள் (15–ந் தேதி) ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதுகுறித்து அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-– நிறைவேற்ற முடியாத பல்வேறு வாக்குறுதிகளை மக்களுக்கு அளித்து, ஆட்சியில் அமர்ந்த திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசு, கடந்த 54 மாத காலமாக மக்களின் அத்தியாவசிய, அடிப்படைத் தேவைகளைக்கூட நிறைவேற்றித் தராமலும்; மக்கள் நிம்மதியுடன் […]

Loading

செய்திகள்

12,573 கடைகளில் கோதுமை இல்லை: எடப்பாடி பழனிசாமி புகாருக்கு அமைச்சர் சக்கரபாணி பதில்

சென்னை, நவ 10– ஒன்றிய அரசு ஒதுக்கீட்டின் படி நியாய விலைக் கடைகளுக்கு கோதுமை தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. நவம்பர் மாதத்திற்கான கோதுமை ஒதுக்கீடு முழுதும் 15–ந்தேதிக்குள் அனைத்து நியாயவிலைக் கடைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு விடும். நடப்பாண்டு குறுவைப் பருவத்தில் வரலாற்றுச் சாதனையாக 13.48 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்து 1.75 லட்சம் நெல் விவசாயிகளுக்கு ரூ 3249.38 கோடி பணம் வழங்கப்பட்டுள்ளது என்று உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி […]

Loading

செய்திகள்

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு:

சென்னை, நவ.10- தமிழ்நாட்டில் சட்டம்–ஒழுங்கு சீர்கேட்டுள்ளது என்றும், எனவே தலைமை டி.ஜி.பி.யை உடனடியாக நியமிக்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார். அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றி, 54 மாதங்களுக்கு முன்பு ஆட்சிக்கு வந்த விடியா தி.மு.க. ஸ்டாலின் மாடல் ஆட்சியில், ஆட்சி என்று ஒன்று இருக்கிறதா? தமிழகத்தில் சட்டம்–ஒழுங்கு சந்தி சிரிக்கும் நிலையில், காவல் துறை என்று ஒன்று செயல்படுகிறதா […]

Loading

செய்திகள்

கோவை விமான நிலையத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு

கோவை, நவ. 10– எஸ்ஐஆர் என்றால் ஸ்டாலின் பதறுவது ஏன் என்று எடப்பாடி பழனிசாமி கேட்டார். போலி வாக்காளர்கள், உயிரிழந்தவர்களின் பெயர்களை நீக்கத்தான் எஸ்ஐஆர். இதனை ஏன் எதிர்க்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கேட்டார். கோவை விமான நிலையத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- தி.மு.க. ஆட்சியில் பெண்கள், சிறுமிகளுக்கு பாதுகாப்பு இல்லை. கோவையில் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தது கொடுமையான செயல். மக்கள் நடமாடும் இடங்களில் இப்படிப்பட்ட சம்பவம் […]

Loading

செய்திகள்

அண்ணா தி.மு.க.வில் இருந்து செங்கோட்டையன் நீக்கம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

சென்னை, நவ.1- சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரனை சந்தித்த செங்கோட்டையனை அண்ணா தி.மு.க.வில் இருந்து அதிரடியாக நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அண்ணா தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், அண்ணா தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் இணைத்து பலப்படுத்த வேண்டும் என்று கூறியதோடு பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு காலக்கெடுவும் நிர்ணயித்தார். இதனால் அவரது கட்சிப்பதவிகள் அதிரடியாக பறிக்கப்பட்டன. இருப்பினும் கட்சி உறுப்பினராக நீடித்து வந்தார். இதற்கிடையே பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் 118-வது ஜெயந்தி விழா மற்றும் குரு […]

Loading

செய்திகள்

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கு: சென்னை ஐகோர்ட் தள்ளுபடி

சென்னை, செப். 4– அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் திண்டுக்கல்லை சேர்ந்த சூரியமூர்த்தி தாக்கல் செய்திருந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2022ம் ஆண்டு ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அண்ணா தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில், பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டதை எதிர்த்தும், பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்தும் திண்டுக்கல்லைச் சேர்ந்த சூர்யமூர்த்தி என்பவர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை […]

Loading

செய்திகள்

சி.பி.ராதாகிருஷ்ணனை அனைத்து எம்.பிக்களும் ஆதரிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

திருவண்ணாமலை, ஆக. 18– துணை ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனை, தமிழக எம்.பி.க்கள் அனைவரும் ஆதரித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் சென்று பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், இன்று திருவண்ணாமலைக்கு வந்த எடப்பாடி பழனிசாமி அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அதன்பிறகு […]

Loading

சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவுநாள்
செய்திகள்

சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் 254–வது நினைவு நாள்

சிலை, நினைவு தூணுக்கு 20–ந் தேதி அ.தி.மு.க. சார்பில் மாலை: எடப்பாடி அறிவிப்பு சென்னை, ஆக.18– ஒண்டிவீரன் 254–வது நினைவு நாளையொட்டி 20–ந் தேதி பாளையங்கோட்டையில் அவரது சிலைக்கு அ.தி.மு.க. சார்பில் மாலை அண்ணா தி.மு.க. சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதுகுறித்து அண்ணா தி.மு.க. பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:– இந்திய முதல் சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரனின் 254–வது வீரவணக்க […]

Loading

செய்திகள்

எம்.ஜி.ஆர். குறித்து பேசுவதற்கு திருமாவளவனுக்கு தகுதி இல்லை: எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு

சேலம், ஆக.10-– எம்.ஜி.ஆர். பற்றி பேசுவதற்கு திருமாவளவனுக்கு தகுதி இல்லை என்று அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்து உள்ளார். சேலம் மாவட்டம் ஓமலூரில் பல்வேறு மாற்றுக்கட்சிகளை சேர்ந்தவர்கள் அண்ணா தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி நேற்று அங்குள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நடந்தது. அப்போது பல்வேறு கட்சிகளில் இருந்து சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விலகி கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அண்ணா தி.மு.க. வில் இணைந்தனர். பின்னர் அவர் கட்சியில் சேர்ந்தவர்களுக்கு கட்சி […]

Loading