கடலூர், ஜூலை.13- மக்களை கடனில் தத்தளிக்க விட்டதுதான் தி.மு.க. அரசின் சாதனை என்று எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்தார். 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரச்சார பயணத்தை தொடங்கினார் அண்ணா தி.முக. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் தனது பயணத்தை முடித்துக்கொண்டு, 5-வது நாளான நேற்று, கடலூர் மாவட்டத்தில் கடலூர், பண்ருட்டி, நெய்வேலி ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் மக்களை சந்தித்து பேசினார். கடலூரில் உழவர் சந்தை […]
![]()


