செய்திகள்

ஜல்லிக்கட்டு போட்டியில் உயிரிழந்தால் ரூ.10 லட்சம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

நாமக்கல், ஜன. 27: அண்ணா தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் ஜல்லிக்கட்டு போட்டியில் உயிரிழக்கும் வீரர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும் என பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். நாமக்கல் சாலப்பாளையத்தில் இன்று காலை ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. முன்னாள் முதலமைச்சரும், அண்ணா தி.மு.க. பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி போட்டியை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:– “ஜல்லிக்கட்டு போட்டி என்பது தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு. காளை அடக்கும் வீரர்கள் தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தும் அற்புதமான விளையாட்டு […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

கொல்கத்தாவில் பயங்கர நிலநடுக்கம்: வீடு, கட்டடங்கள் குலுங்கியது

கொல்கத்தா, நவ. 22: வங்​கதேசத்​தின் நர்சிங்டியில் என்ற பகு​தி​யில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்க அதிர்வுகள் மேற்கு வங்கத்தின் கொல்கத்தா உள்ளிட்ட பகுதிகள் உணரப்பட்டது. கொல்கத்தாவில் வீடு, கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். வங்​கதேசத்​தின் நா்சிங்டி தென்மேற்கே நேற்று காலை 10 மணிக்கு 13 கி.மீ தொலைவில் 10 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், இது ரிக்டர் அளவுகோலில் 5.7 அலகுகளாகப் பதிவானது என நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் தலைநகர் டாக்காவிலும் உணரப்பட்டது. நிலநடுக்கத்தின் […]

Loading

செய்திகள்

முயல் வேட்டைக்கு சென்ற 2 பேர் மின்வேலியில் சிக்கி உயிரிழப்பு

செங்கம், நவ. 13– திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை சேர்ந்த 4 இளைஞர்கள் முயல்வேட்டைக்கு சென்றனர். அப்போது குப்பநத்தம் பகுதியில் மின்வேலியில் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர். சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி 17 மற்றும் 27 வயதான இளைஞர்கள் உயிரிழந்தது தெரிய வந்துள்ளது. சட்டவிரோதமாக மின்வேலி அமைத்த நில உரிமையாளர் பாஷா என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினர். நில உரிமையாளர் இளைஞர்களின் உடல்களை அருகில் இருந்த கிணற்றில் வீசியது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Loading

செய்திகள்

கரூரில் விஜய் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி சிகிச்சையில் இருந்த பெண் இன்று உயிரிழப்பு

பலியானோர் எண்ணிக்கை 41 ஆக உயர்வு கரூர், செப்.29–- வேலுசாமிபுரத்தை சேர்ந்த சுகுணா என்ற 65 வயது பெண் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். இதனையடுத்து கரூரில் விஜய் பிரச்சார கூட்டத்தில் நெரிசலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது. கரூர் வேலாயுதம்பாளையத்தில் நேற்று முன்தினம் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்து கொண்டு பேசினார். இந்த கூட்டத்தில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் […]

Loading

செய்திகள்

ஜெர்மனியில் ரெயில் தடம் புரண்டு 3 பேர் பலி; 34 பேர் படுகாயம்

பெர்லின், ஜூலை 28– ஜெர்மனியில் ரெயில் தடம் புரண்டு ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 34 பேர் படுகாயம் அடைந்தனர். ஜெர்மனியின் தென்மேற்கு மாநிலமான பேடன்-வ்ரெட்டம்பேர்க்கில் 100க்கும் மேற்பட்டோர் சென்று கொண்டிருந்த ரயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து மீட்பு படையினர் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். விபத்தில் சிக்கிய பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும், 34 பேர் […]

Loading

செய்திகள்

யூடியூப் பார்த்து உடல் எடையை குறைக்க முயன்ற மாணவர் உயிரிழப்பு

கன்னியாகுமரி, ஜூலை 25– யூடியூப் பார்த்து உடல் எடையை குறைக்க முயன்ற மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள பர்ணட்டிவிளையை சேர்ந்தவர் நாகராஜன், சுங்கவரி துறையில் ஏட்டாக பணியாற்றி வருகிறார். இவருடைய மகன் சக்தீஷ்வர் (வயது17). இவர் பிளஸ்-2 தேர்ச்சி பெற்று என்ஜினீயரிங் கல்லூரியில் சேர தயாராகி வந்தார். இந்தநிலையில் நேற்று காலையில் வீட்டில் இருந்த சக்தீஷ்வர் திடீரென மூச்சு திணறி மயங்கி கீழே விழுந்தார். உடனே அவரை பெற்றோர் […]

Loading

செய்திகள்

தென்காசி அருகே விஷ வண்டு கடித்து கணவன், மனைவி உயிரிழப்பு

தென்காசி, ஜூலை 21– தென்காசி அருகே விஷ வண்டு கடித்து கணவன் – மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விஷ வண்டு கடித்த மேலும் 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தென்காசி அருகே சிவநல்லூர் என்ற கிராமம் உள்ளது. தென்காசியிலிருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த கிராமத்தில் நேற்று ஐயப்பன் கோவிலில் விஷேஷ நிகழ்ச்சிக்காக அன்னதானம் வழங்கப்பட்டது. அப்போது அவ்வூரை சேர்ந்த ஏராளமானோர் கோவிலில் வழிபட்டு அன்னதானத்தை முடித்துவிட்டு வீட்டுக்கு புறப்பட்டனர். அப்போது […]

Loading