செய்திகள்

ஆங்கில புத்தாண்டு: வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு 13 ஆயிரத்து 200 பேர் வருகை

சென்னை, ஜன.2- ஆங்கில புத்தாண்டு தினத்தன்று வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு 13 ஆயிரத்து 200 பேர் வந்தனர் என்று அதிகாரி தெரிவித்துள்ளார். சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் ஏராளமான விலங்குகள், பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. நேற்று ஆங்கில புத்தாண்டையொட்டி சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் குடும்பம், குடும்பமாக வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு வந்தனர். இதனால் பூங்காவில் எங்கு பார்த்தாலும் பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது. […]

Loading