சென்னை, ஆக 25– விடுதலைப் போராட்ட வீரர் கொடி காத்த திருப்பூர் குமரன் மற்றும் சொல்லின் செல்வர் ஈ.வெ.கி.சம்பத் ஆகியோரது திருவுருவச் சிலைகளை ஸ்டாலின் திறந்து வைத்தார். இதையொட்டி, அவர் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது– ‘‘தியாகத் தலைவர்களைத் தந்த ஈரோட்டு மண்ணின் பெருமையை எடுத்துக்காட்டும் வகையில், ஈரோட்டில், விடுதலைப் போராட்ட வீரர் கொடி காத்த திருப்பூர் குமரன் மற்றும் சொல்லின் செல்வர் ஈ.வெ.கி.சம்பத் ஆகியோரது திருவுருவச் சிலைகளைத் திறந்து வைத்தேன். ஈரோடு மாவட்ட மக்களின் […]
![]()


